ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » குழந்தைகளின் பற்களை சேதப்படுத்தும் 5 மோசமான உணவு பொருட்கள் இதோ!

குழந்தைகளின் பற்களை சேதப்படுத்தும் 5 மோசமான உணவு பொருட்கள் இதோ!

Kids Care | பற்களை சரியாக கவனிக்கவில்லை என்றால் துவாரங்கள், பிளேக், பல்வலி, பல் சொத்தை அல்லது கறை படிந்த பற்கள் போன்ற மோசமான பிரச்சனைகள் குழந்தைகளின் பற்களுக்கு ஏற்படும்.

 • 16

  குழந்தைகளின் பற்களை சேதப்படுத்தும் 5 மோசமான உணவு பொருட்கள் இதோ!

  பொதுவாக குழந்தைகளின் உடல் ஆரோக்கியம் மற்றும் மன ஆரோக்கியத்தை பற்றி யோசிக்கும் பல பெற்றோர்கள் அவர்களது, வாய் ஆரோக்கியம் குறித்து கவலைப்படுவதில்லை. இதனால் பற்கள் மற்றும் ஈறுகளுக்கு உடலின் மற்ற பாகங்களைப் போலவே அதிக பாதிப்பு ஏற்படுகிறது. மற்ற உறுப்புகளை போலவே பற்களுக்கும் அதிக கவனிப்பு தேவைப்படுகிறது.பற்களை சரியாக கவனிக்கவில்லை என்றால் துவாரங்கள், பிளேக், பல்வலி, பல் சொத்தை அல்லது கறை படிந்த பற்கள் போன்ற மோசமான பிரச்சனைகள் குழந்தைகளின் பற்களுக்கு ஏற்படும். இந்த பாதிப்புகள் மோசமான உணவுப்பழக்கத்தின் விளைவாகவும் ஏற்படும். இந்த பதிவில் உங்கள் குழந்தையின் பற்களுக்கு தீங்கும் ஏற்படுத்த கூடிய ஐந்து மோசமான உணவுகள் பற்றி இங்கே பார்ப்போம்.

  MORE
  GALLERIES

 • 26

  குழந்தைகளின் பற்களை சேதப்படுத்தும் 5 மோசமான உணவு பொருட்கள் இதோ!

  இனிப்புகள்:
  மிட்டாய்கள் அல்லது இனிப்புகள் எதுவாக இருந்தாலும், பற்களில் ஒட்டிக்கொள்ள கூடியவை. எனவே இது போன் எந்தவொரு உணவுப் பொருளும் பல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல, ஏனெனில் அவை பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு வழி வகுக்கும். இனிப்பு உணவுகளை போன்றே புளிப்பு உள்ள உணவுகளும் பல் ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும், ஏனெனில் அவை பற்களை அரிக்கும் அமிலத்தைக் கொண்டுள்ளன. எனவே குழந்தைகளுக்கு இது போன்ற உணவுகளை தவிர்த்து விடுங்கள்.

  MORE
  GALLERIES

 • 36

  குழந்தைகளின் பற்களை சேதப்படுத்தும் 5 மோசமான உணவு பொருட்கள் இதோ!

  சிட்ரஸ் பழங்கள் :
  புளிப்பு பழங்களைப் போலவே, சிட்ரஸ் பழங்கள் மற்றும் பழச்சாறுகளிலும் அதிக அமில தன்மை உள்ளது, இவையும் பற்சிதைவுக்கு தீங்கு விளைவிக்கும். எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு போன்ற அமிலத்தன்மை கொண்ட பழங்கள், குழந்தைகளின் பற்களுக்கு பாதிப்பை தரும். எனவே உங்கள் இந்தப் பழங்களை அளவோடு உட்கொள்வதையும், சிட்ரஸ் பழச்சாறுகளைக் குடிக்கும் போது அளவோடு கொடுப்பதையும் உறுதிசெய்து கொள்ளுங்கள், இதனால் பற்கள் நேரடியாகப் பாதிக்கப்படாது.

  MORE
  GALLERIES

 • 46

  குழந்தைகளின் பற்களை சேதப்படுத்தும் 5 மோசமான உணவு பொருட்கள் இதோ!

  பாப்கார்ன் :
  சோளத்தால் ஆன பாப்கார்ன் மிகவும் ஆரோக்கியமான சிற்றுண்டியாக இருந்தாலும், இது பெரும்பாலும் ஈறுகளின் அடியில் சிக்கி, ஈறு தொற்று வடிவத்தில் அழிவை ஏற்படுத்தும். எனவே பாப்கார்ன் சாப்பிட்ட பிறகு குழந்தைகளை பல் துலக்க சொல்வது மிகவும் நல்லது, ஏனெனில் இது ஈறுகளில் சிக்கியிருக்கும் துண்டுகளை அகற்ற உதவுகிறது.

  MORE
  GALLERIES

 • 56

  குழந்தைகளின் பற்களை சேதப்படுத்தும் 5 மோசமான உணவு பொருட்கள் இதோ!

  கார்பனேட்டட் பானங்கள் :
  குழந்தைகளுக்கு மென்மையான பற்கள் உள்ளன, எனவே அவை சூடான அல்லது குளிர் பானங்களுக்கு கூடுதல் உணர்திறன் கொண்டவையாக இருக்கும். கார்பனேட்டட் பானங்கள் உடலுக்கு மட்டுமல்ல, வாய்க்கும் தீங்கு விளைவிக்கும். இந்த பானங்களில் உள்ள கார்போனிக் அமிலத்தால் பற்கள் பாதிக்கப்படும், இது பற்களின் சேதத்திற்கு வழிவகுக்கிறது, மேலும் பற்கள் சிதைவதற்கும் வாய்ப்புள்ளது. எனவே கார்பனேட்டட் பானத்தை உட்கொண்ட பிறகு பற்களைக் கழுவுவது சிறந்த வழியாகும்.

  MORE
  GALLERIES

 • 66

  குழந்தைகளின் பற்களை சேதப்படுத்தும் 5 மோசமான உணவு பொருட்கள் இதோ!

  உருளைக்கிழங்கு சிப்ஸ் :
  உருளைக்கிழங்கு சிப்ஸ்களில் அதிக அளவு ஸ்டார்ச் உள்ளது, அவை இறுதியில் சர்க்கரையாக மாறி பற்களுக்கு தீங்கு விளைவிக்கும். இது தவிர, இந்த உணவுப் பொருட்கள் பற்களுக்கு இடையில் சிக்கிக்கொள்ளும் மற்றும் பற்களில் இருக்கும் பாக்டீரியாக்களை அதிகப்படுத்துகின்றன. இவை பற்களில் எவ்வளவு நேரம் ஒட்டிக்கொள்கிறதோ, அவ்வளவு நேரம் பாக்டீரியாக்கள் உற்பத்தியை பெருக்கும். எனவே இது போன்ற உணவுகள் சாப்பிட பின், உங்கள் குழந்தை சரியாக பல் துலக்குவதை உறுதிசெய்து கொள்ளுங்கள்.

  MORE
  GALLERIES