காய்ச்சல், தொண்டை புண், இருமல் மற்றும் சளி போன்ற அறிகுறிகள் அதிகமாக காணப்படும் மோசமான காற்று மாசு மற்றும் வானிலை மாற்றம் உள்ளிட்டவற்றாலும் ஏற்படலாம். மேற்கண்ட அறிகுறிகளை ஒருவர் எதிர்கொள்ளும் மருத்துவரை அணுகுவது நல்லது என்றாலும் லேசான காய்ச்சல் போன்ற அறிகுறிகளை சரியாக நிர்வகிக்க சில ஆயுர்வேத பொருட்களை பயன்படுத்தி செய்து கொள்ளும் வீட்டு வைத்தியங்கள் உள்ளன.
பழங்கால மருத்துவ நடைமுறைகளின் முக்கிய பகுதியாக இயற்கை மூலிகைகளின் பயன்பாடு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் இருக்கின்றன. ஜலதோஷம் மற்றும் சளியால் பாதிக்கப்படும் பலர் தங்கள் வீட்டிலேயே ஆயுர்வேத பொருட்களை பயன்படுத்தி நிவாரணம் காண்கின்றனர். சளி, ஜலதோஷம் மற்றும் இருமலில் இருந்து விடுபட உதவும் ஆயுர்வேத வீட்டு வைத்தியங்கள் இங்கே.
துளசி : காலங்காலமாக முக்கிய ஆயுர்வேத மருந்தாக இருக்கின்றன துளசி இலைகள். ஜலதோஷம் மற்றும் இருமலுக்கு எதிராக உடலின் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க உதவுகிறது துளசி. ஆன்டிபாடிகளின் சிந்தஸிஸை அதிகரிப்பதன் மூலம் தொற்றுகளின் விளைவை துளசி தாமதப்படுத்துகிறது. துளசியில் இருமலை போக்கும் பண்புகளை கொண்டுள்ளது. துளசி இலைகள் சளியை அகற்ற உதவி சுவாச பாதைகளை சுத்தமாக வைக்க உதவுகிறது. காலை நேரத்தில் வெறும் வயிற்றில் 5-6 துளசி இலைகளை மென்று சாப்பிட்டால், சளி, இருமல் போன்ற தொற்றுகளில் இருந்து தற்காத்து கொள்ளலாம். துளசி டீ உடலுக்கு நன்மை அளிக்கும்.
தேன் : தேனில் நிறைந்து இருக்கும் ஆன்டிபாக்டீரியல் குணங்கள் தொண்டை வலி மற்றும் புண்களை ஆற்ற உதவுகிறது. இருமலை திறம்பட குறைக்க தேன் உதவுகிறது. தடிமனான சளியை வெளியேற்ற உதவுவதன் மூலம் நுரையீரல் மற்றும் கீழ் சுவாசக் குழாய்களில் சளி குவியும் பிரச்சனையான Chest congestion-ஐ குறைக்கிறது. ஒரு நாளைக்கு 2 முறை தேன் சாப்பிடுவதன் மூலம் மாய்ஸ்ட் காஃபிங்கை (moist coughing) குறைக்கிறது. தேனுடன் இஞ்சி சாறு சேர்த்து எடுத்து கொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
அதிமதுரம் :ஸ்வீட்வுட் என்று அழைக்கப்படும் அதிமதுரம் இருமலை கட்டுப்படுத்தும் ஒரு சக்தி வாய்ந்த ஆயுர்வேத மருந்தாகும். அதிமதுர பொடியை பயன்படுத்துவதால் சுவாசக் குழாயில் உற்பத்தியாகும் அதிக சளியை கட்டுப்படுத்தலாம். இந்த மூலிகையானது இருமலுக்கு நிவாரணம் அளிக்கும் expectorant குணங்களை கொண்டுள்ளது. அதிமதுரம் பயன்படுத்துவதால் சுவாசக் குழாயில் உள்ள சளி மெலிந்து தளர்த்தப்பட்டு வெளியேறுகிறது. இருமலையும் எளிதாக கட்டுப்படுத்துகிறது. அதிமதுர பொடியை வெதுவெதுப்பான நீரில் கலந்து சாப்பிடலாம். அதிமதுர சாற்றை பயன்படுத்தி வாய் கொப்பளிப்பது தொண்டை புண் மற்றும் இருமலில் இருந்து விடுபட உதவுகிறது. அதிமதுர பவுடர் அல்லது சாற்றை டீ அல்லது கதாவில் சேர்க்கலாம்.
சீந்தில் : சீந்தில் இலைகள் புகைப்பனி அல்லது புகைமூட்டம் உள்ளிட்டவற்றால் ஏற்படும் ஒவ்வாமை எதிர்வினைகளான சளி மற்றும் இருமலை கட்டுப்படுத்த உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சிறந்த மூலிகையான சீந்திலானது டான்சில்லிடிஸ் (அடிநா அழற்சி) மற்றும் ஜலதோஷத்தை சரி செய்யவும் உதவுகிறது. பயனுள்ள அழற்சி எதிர்ப்பு குணங்களை கொண்டுள்ள சீந்தில் தொடர் இருமல் மற்றும் தொண்டை வலியை குறைக்கிறது.
திப்பிலி : சளி மற்றும் இருமலை குணப்படுத்துவதில் திப்பிலி நன்றாக வேலை செய்கிறது. சாதாரண ஜலதோஷத்தால் ஏற்படும் தலைவலியிலிருந்து விடுதலை தருகிறது. தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள் சளி தொல்லை இன்றி எளிதாக சுவாசிக்க அனுமதிக்கிறது. இருமல் அல்லது சளி தொந்தரவால் அவதிப்படும் போது இதனால் சிறந்த பலன்களை பெற திப்பிலி பொடியை ஒரு ஸ்பூன் தேனுடன் சேர்த்து எடுத்து கொள்ளலாம் அல்லது kadha-வில் சேர்க்கலாம்.