முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » ஒரே மாதத்தில் தொப்பையை குறைத்து ஸ்லிம்மாக மாற சில ஆயுர்வேத டிப்ஸ்..!

ஒரே மாதத்தில் தொப்பையை குறைத்து ஸ்லிம்மாக மாற சில ஆயுர்வேத டிப்ஸ்..!

ஆயுர்வேத வீட்டு வைத்தியங்கள் அனைத்தையும் நீங்கள் தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் தொப்பை கொழுப்பை குறைத்து உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவும்.

  • 17

    ஒரே மாதத்தில் தொப்பையை குறைத்து ஸ்லிம்மாக மாற சில ஆயுர்வேத டிப்ஸ்..!

    தொப்பை கொழுப்பு என்பது இன்று பலர் சந்தித்து வரும் ஒரு பிரச்சினையாக உள்ளது. என்னதான் முயற்சி செய்தாலும் தொப்பை குறையவே மாட்டேங்குது என்று சொல்லக்கூடிய பலர் உள்ளனர். எனினும் ஒரு சில ஆயுர்வேத முறைகள் மூலமாக தொப்பை கொழுப்பை எந்தவித பக்க விளைவுகளும் இல்லாமல், எளிதாக குறைக்கலாம். அப்படிப்பட்ட ஐந்து ஆயுர்வேத வீட்டு வைத்தியங்கள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

    MORE
    GALLERIES

  • 27

    ஒரே மாதத்தில் தொப்பையை குறைத்து ஸ்லிம்மாக மாற சில ஆயுர்வேத டிப்ஸ்..!

    திரிபலா பொடி : திரிபலா என்பது கடுக்காய், தான்றிக்காய் மற்றும் நெல்லிக்காய் ஆகிய மூன்று பழங்களின் கலவையாகும். இது பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. தொப்பை கொழுப்பை குறைப்பதற்கு வெதுவெதுப்பான ஒரு டம்ளர் தண்ணீரில் திரிபலா பொடியை கலந்து தூங்குவதற்கு முன்பு குடிக்க வேண்டும். இது செரிமானத்தை எளிதாக்கி உடல் எடையை குறைக்க உதவுகிறது. அது மட்டுமல்லாமல் திரிபலா பொடியானது ரத்தத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, வீக்கத்தையும் குறைக்க உதவுகிறது.

    MORE
    GALLERIES

  • 37

    ஒரே மாதத்தில் தொப்பையை குறைத்து ஸ்லிம்மாக மாற சில ஆயுர்வேத டிப்ஸ்..!

    வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு கலந்து பருகவும்: காலை எழுந்தவுடன் டீ, காபி குடிக்கும் பழக்கம் உங்களுக்கு இருந்தால் அதனை தவிர்த்து விட்டு அதற்கு பதிலாக வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு கலந்து குடிக்கும் பழக்கத்திற்கு வாருங்கள். இது உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து செரிமானத்தை தூண்டும். எலுமிச்சையில் காணப்படும் சிட்ரிக் அமிலம் கொழுப்பை உடைத்து பசியை அடக்குகிறது. மேலும் உடலில் உள்ள கெட்ட நச்சுக்கள் அனைத்தையும் வெளியேற்றி வயிற்று உப்புசத்திற்கு நிவாரணம் தருகிறது.

    MORE
    GALLERIES

  • 47

    ஒரே மாதத்தில் தொப்பையை குறைத்து ஸ்லிம்மாக மாற சில ஆயுர்வேத டிப்ஸ்..!

    இஞ்சி டீ பருகலாம் : இஞ்சி என்பது ஆயுர்வேதத்தில் பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு மருந்து ஆகும். இஞ்சி டீ குடிப்பது செரிமானத்தை மேம்படுத்துவதோடு, வீக்கத்தை குறைத்து, உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. இஞ்சியில் காணப்படும் ஜிஞ்சரால், ஷோகால் என்ற சேர்மங்கள் தொப்பையில் காணப்படும் கொழுப்பை எரித்து உடல் எடையை குறைக்க உதவுகிறது.

    MORE
    GALLERIES

  • 57

    ஒரே மாதத்தில் தொப்பையை குறைத்து ஸ்லிம்மாக மாற சில ஆயுர்வேத டிப்ஸ்..!

    குறைந்த கொழுப்பு கொண்ட உணவுகளை சாப்பிடவும்: ஆரோக்கியமான உணவு என்பது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பேணிகாக்க அவசியமான ஒன்று. அந்த வகையில் அதிக நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து நிறைந்த மற்றும் குறைந்த கொழுப்பு உணவுகளை சாப்பிடுவது தொப்பை கொழுப்பை குறைக்க பயனுள்ளதாக இருக்கும். பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், மெலிதான புரதங்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் போன்றவற்றை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். மேலும் பதப்படுத்தப்பட்ட மற்றும் நொறுக்கு தீனிகள் போன்றவற்றில் ஆரோக்கியமற்ற கொழுப்புகள் நிறைந்து இருப்பதால் அவற்றை முழுவதுமாக தவிர்த்து விடுங்கள்.

    MORE
    GALLERIES

  • 67

    ஒரே மாதத்தில் தொப்பையை குறைத்து ஸ்லிம்மாக மாற சில ஆயுர்வேத டிப்ஸ்..!

    யோகா பயிற்சி செய்யவும் : யோகா என்பது உடல் செயல்பாடு, மூச்சு பயிற்சி மற்றும் தியானம் ஆகிய அனைத்தும் கலந்த ஒரு உடற்பயிற்சி ஆகும். இது நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தி நமது நல்வாழ்விற்கு பங்களிக்கிறது. தினமும் யோகா செய்வது மன அழுத்தத்தை குறைத்து, செரிமானத்தை மேம்படுத்தும். மேலும் நமது தசைகள் வலுபெறும். படகு போஸ், கோப்ரா போஸ், பிளாங் போஸ் போன்றவற்றை தினமும் செய்வது குறிப்பாக தொப்பை கொழுப்பை குறைக்க பயனுள்ளதாக அமையும்.

    MORE
    GALLERIES

  • 77

    ஒரே மாதத்தில் தொப்பையை குறைத்து ஸ்லிம்மாக மாற சில ஆயுர்வேத டிப்ஸ்..!

    இந்த ஆயுர்வேத வீட்டு வைத்தியங்கள் அனைத்தையும் நீங்கள் தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் தொப்பை கொழுப்பை குறைத்து உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவும். இது மட்டுமல்லாமல் ஆரோக்கியமான உணவு மற்றும் அன்றாட உடற்பயிற்சி போன்றவற்றைப் பின்பற்றுவது உங்கள் உடல்நிலை உடல் இழப்பு இலக்கை விரைவில் அடைய உதவி செய்யும்.

    MORE
    GALLERIES