இரத்ததில் சர்க்கரை அளவு அதிகரிக்கும்போது உண்டாக்கும் இந்த நீரிழிவு நோய்க்கு ஒரே தீர்வு சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருப்பதுதான். அப்படி சில நேரங்களில் மாத்திரை எடுத்துக்கொள்ளாமல் தவிர்க்கும்போது, மன அழுத்தம் , சாப்பிட்ட உணவு இப்படி பல காரணங்களால் திடீரென சர்க்கரை அளவு அதிகரிக்கும். அந்த நேரத்தில் சில ஆயுர்வேத மூலிகை மருந்துகள் நமக்கு கைக்கொடுக்கின்றன. இவற்றை நீங்கள் சாப்பிட நினைத்தால் முதலில் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம். அவர் எந்த பக்க்விளைவுகளையும் ஏற்படுத்தாது, சாப்பிடலாம் என்று கூறினால் இவற்றை சாப்பிடுங்கள்.
நித்திய கல்யாணி : இது இந்தியாவில் பரவலாகக் காணப்படும் செடியாகும். ஆனால் இதன் மருத்துவ குணங்கள் எத்தனைப் பேருக்கு தெரியும்..? இது மலேரியா, தொண்டைப் புண், நீரிழிவு நோய் இப்படி பல பிரச்னைகளுக்கு தீர்வு அளிக்கிறது. இரத்ததில் சர்க்கரை அளவை சமநிலை செய்வதிலும் முகிய பங்கு வகிக்கிறது. இதன் இலைகளை கழுவி அப்படியே மென்றூ சாப்பிடலாம் அல்லது இரண்டு இலைகளை ஒரு கப் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கலாம். இதனால் சர்க்கரை அளவு சீராக இருக்கும்.
வேங்கை மரம் : வேங்கை இலை பொடி அல்லது வேங்கை இலை கிடைத்தால் அதை ஒரு கப் தண்ணீரில் கொதிக்க வைத்து காலையில் வெறும் வயிற்றில் குடியுங்கள். இவ்வாறு குடிப்பதால் நீங்கள் நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். அதுமட்டுமன்றி அடிக்கடி சிறுநீர் கழிப்பதையும் அடிக்கடி பசி எடுப்பதையும் கட்டுப்படுத்தலாம். இந்த மூலிகையில் ஆண்டி ஹைப்பர் லிப்டெமிக் பண்புகள் இருக்கின்றன. இது கொழுப்பை கரைக்கவும் உதவும்.
சிறுகுறிஞ்சான் : இது ஒவ்வமை, இறுமல், சளி, மலச்சிக்கல் போன்ற பல உடல் நல பாதிப்புகளுக்கு உதவுகிறது. இந்த தாவரத்தில் ஃபிலவனோல்ஸ் இருப்பதுதான் முக்கிய காரணியாக உள்ளது. எனவே இரத்தத்தில் குளுக்கோஸ் அளவை நிர்வகிக்க சாப்பிடுவதற்கு முன் ஒரு ஸ்பூன் சிறுகுறிஞ்சான் பொடியை ஒரு கிளாஸ் தண்ணீர் கலந்து குடித்தால் சீராக இருக்கும். இந்த பொடி நாட்டு மருந்து கடைகளில் கேட்கலாம்.