COVID-19 Vaccination : 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு முன்பு அவசியம் இதை பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்
முதல் டோஸ் பெற்று சரியாக 29 வது நாளில் இரண்டாவது டோஸ் பெறுவதற்கான ஆட்டோ திட்டமிடலின் அம்சத்தை நீக்க CoWIN இயங்குதளம் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
Web Desk | March 24, 2021, 11:46 AM IST
1/ 9
ஏப்ரல் 1ம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என கடந்த செவ்வாய்க்கிழமை மத்திய அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியுள்ளவர்கள் அனைவரும் உடனடியாக முன்பதிவு செய்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தடுப்பூசி விநியோகம் விரிவாக்கப்படுவதால், இந்த விஷயத்தில் அரசாங்கம் சில முக்கிய செய்திகளைக் கொண்டு வந்துள்ளது. அவை என்ன என்பது குறித்து காண்போம்.
2/ 9
இரண்டாம் டோஸ் போட்டுக்கொள்ளும் தேதியை நீங்களே முடிவு செய்துகொள்ளலாம்: முதல் டோஸ் பெற்று சரியாக 29 வது நாளில் இரண்டாவது டோஸ் பெறுவதற்கான ஆட்டோ திட்டமிடலின் அம்சத்தை நீக்க CoWIN இயங்குதளம் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பயனாளிகள் அவர்களின் வசதிக்கு ஏற்ப நான்கு முதல் எட்டு வாரங்கள் நீட்டிக்கப்பட்ட இடைவெளியில் இரண்டாவது டோஸ் பெறுவதற்கான தேதியை அவர்களே தீர்மானித்துக் கொள்ளலாம்.
3/ 9
8 வார இடைவெளிக்குள் 2வது டோஸை பெறுவது நல்லது: தடுப்பூசி போட்டுக்கொள்பவர்கள் முதல் டோஸ் பெற்ற தேதியில் இருந்து ஆறாவது அல்லது எட்டாவது வாரத்திற்குள் இரண்டாவது டோஸை பெற்றுக்கொள்ள வேண்டும். எட்டாவது வாரத்திற்கு அப்பால் தாமதப்படுத்தாமல் இருப்பது நல்லது. ஏனெனில் அவை உங்களை பாதிக்கக்கூடும்.
4/ 9
WWW.COWIN.GOV.IN இணையத்தில் உங்கள் தேதியை மறுபரிசீலனை செய்யலாம் : இரண்டாம் டோஸ் பெறும் தேதியை தேர்வு செய்யும் வசதியோடு, அதனை மறுபரிசீலனை செய்யும் வசதியும் தற்போது கிடைக்கும். முதல் டோஸ் போட்டுக்கொண்ட 29வது நாளில் 2ம் டோஸுக்கான ஆட்டோமேட்டிக்காக தேதி திட்டமிடப்பட்டிருந்தாலும் அதனை நீங்கள் மறுபரிசீலனை செய்யலாம். தடுப்பூசி போடுபவர்களுக்கு நீட்டிக்கப்பட்ட காலத்திற்கு இடையிலான வசதிக்கு ஏற்ப ஒரு நாள் மற்றும் தேதியைத் தேர்வுசெய்து, www.cowin.gov.in ஐப் பார்வையிடுவதன் மூலம் நியமன தேதி மறுபரிசீலனையை இலவசமாக செய்துக் கொள்ளலாம்.
5/ 9
Comorbidities பிரிவு நீக்கம் : கொமொர்பிடிட்டிகளைப் பொருட்படுத்தாமல், 45 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஜனவரி 1, 1977க்கு முன்பு பிறந்தவர்களுக்கு 45 + ஆண்டுகள் பிரிவின் கட்-ஆஃப் தேதி வரையறுக்கப்பட்டுள்ளது. மேலும் கணினி முறையை எளிமையாக்க கொமொர்பிடிடிஸ் பிரிவு அகற்றப்பட்டுள்ளது.
6/ 9
தடுப்பூசிக்கான பதிவு ஏப்ரல் 1 முதல் தொடக்கம் : ஏப்ரல் 1ம் தேதி முதல் CoWIN தளம் ஆன்லைனில் தடுப்பூசிகள் முன்பதிவிற்கும், ஒரு சந்திப்பை பதிவு செய்வதற்கும் 45 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து நபர்களையும் அனுமதிக்கிறது.
7/ 9
தடுப்பூசி பற்றாக்குறை இல்லை : நாட்டில் தடுப்பூசிகளுக்கு பஞ்சமில்லை என்றும் இதனால் மக்கள் தேவையில்லாமல் பீதி அடையக்கூடாது எனவும் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
8/ 9
தடுப்பூசி பெற்றதற்கான சான்றிதழை பெறுவது அவசியம் : தடுப்பூசி பெற்றுக்கொண்ட நபர்கள், அதனை பெற்றுக்கொண்டதற்கான ஒரு நகலை நேரடியாகவோ அல்லது டிஜிட்டல் நகல் மற்றும் லிங்கை பெறுவது மிக அவசியம். தனியார் மருத்துவமனைகளில், தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் கட்டணத்தில் சான்றிதலுக்கான கட்டணமும் சேர்க்கப்பட்டுள்ளது. எனவே, சான்றிதழ் பெறப்பட்டதா என்பதை உறுதிப்படுத்த ஒருவர் 30 நிமிட கண்காணிப்பு காலத்தைப் பயன்படுத்தலாம். அவை இல்லாமல் நீங்கள் வீடு திரும்ப வேண்டாம். மருத்துவமனை சான்றிதழ் வழங்காவிட்டால், தடுப்பூசி பெற்றவர் கட்டணமில்லா எண் 1075 இல் புகார் அளிக்கலாம்.
9/ 9
புகார்களுக்கு 1075 என்ற எண்ணை அழைக்கலாம் : தடுப்பூசி போடுவதற்கு ஒரு பயனாளி ஆன்லைன் சந்திப்பை CoWIN தளம் மூலம் பதிவு செய்திருந்தால், தனியார் அல்லது பொது மருத்துவமனைகளில் மேலதிக நியமனம் எடுக்க வேண்டிய அவசியமில்லை. தடுப்பூசியின் இந்த வழிகாட்டுதல்களை எந்த மருத்துவமனையும் பின்பற்றவில்லை என்றால், ஒருவர் கட்டணமில்லா எண் 1075 இல் புகார் அளிக்கலாம்.