இதயம் என்பது உடல் முழுவதும் தூய இரத்தத்தை பம்ப் செய்யும் உறுப்பு என அனைவருக்கும் தெரியும். அதில் தமனிகள் வழியாக இரத்தம் இதயத்தை அடைகிறது, ஆனால் அப்படிப்பட்ட தமனிகளில் கெட்ட கொலஸ்ட்ரால் சேர ஆரம்பித்தால் என்ன நடக்கும் என்று கொஞ்சம் சிந்தித்து பாருங்கள். கண்டிப்பாக அது இதயத்திற்கு ரத்தம் செல்லும் திசையில் தடையாகத்தான் இருக்கும்.
கொலஸ்ட்ரால் என்பது ஒரு வகை கொழுப்பு, இது அதிகரிப்பது காரணமாக, உடலில் பல ஹார்மோன்கள் மற்றும் செல் சவ்வுகள் உருவாகின்றன. ஆனால் கொலஸ்ட்ரால் நம் உடலில் தங்கவே இல்லை என்றால், நாம் நீண்ட நாட்கள் வாழ முடியாது. அதுவும் பல உடல்நலப் பிரச்னைகளை ஏற்படுத்தும். ஆனால் LDL எனப்படும் ஒருவகை கொலஸ்ட்ரால் நமக்கு மிகவும் மோசமானது. இதன் காரணமாக மாரடைப்பு உட்பட இதயம் தொடர்பான பல நோய்கள் ஏற்படுகின்றன. இரண்டு வகைப்பட்ட கொலஸ்ட்ராலில் LDL (low-density lipoproteins) அதாவது கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரித்தால் அது நமக்கு பிரச்னைதான்.
1. கை கால்களில் உணர்வின்மை மற்றும் வீக்கம்: உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது, அதன் தாக்கம் கை மற்றும் கால்களில் தெரியத் தொடங்கும். கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது, கை, கால்களில் இரத்த ஓட்டம் குறையத் தொடங்குகிறது. இதன் காரணமாக, நரம்புகளின் நிறம் மாறத் தொடங்குகிறது. கை மற்றும் கால்களில் வீக்கம் மற்றும் உணர்வின்மை ஆகியவை அவற்றில் வரத் தொடங்குகின்றன. இதனால் அதிக வலியும் ஏற்படுகிறது. மேலும் கைகளும் கால்களும் பலவீனமடையத் தொடங்குகின்றன.
2. தோலில் தடிப்புகள் தோன்றத் தொடங்கும் : கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால், இரத்தக் குழாய்களில் ஒருவிதமான ஒட்டும் திரவம் போல் சேரத் தொடங்குகிறது. இது தோலில் தடிப்புகள் அல்லது புடைப்புகளை கொண்டு வருகிறது. இந்த தடிப்புகள் உடலின் பல பாகங்களில் தெரியும். இதன் காரணமாக, உங்கள் கண்களின் கீழ், பின்புறம், கால்கள் மற்றும் உள்ளங்கைகளில் வீக்கம் தோன்றும்.
3. நகங்கள் சேதமடையத் தொடங்கும் : இரத்தத்தில் அதிக கொலஸ்ட்ரால் சேரத் தொடங்கும் போது, அது தமனிகளை விரிவடையச் செய்கிறது. இதனால் உடலின் பல்வேறு பகுதிகளுக்கு ரத்தம் செல்வதில்லை. அதன் விளைவாக நகங்களில் கருமையான கோடுகள் உருவாகத் தொடங்குகின்றன. சில நேரங்களில் நகங்கள் வெடிக்க ஆரம்பிக்கும். அதே நேரத்தில், நகங்கள் மெல்லியதாகவும் பழுப்பு நிறமாகவும் மாறத் தொடங்கும்.
கொலஸ்ட்ரால் அதிகரிக்காமல் இருக்க என்ன செய்வது? கொலஸ்ட்ரால் அதிகரிப்பதைத் தடுக்க, 20 வயதிலிருந்தே, ஆரோக்கியமான உணவு மற்றும் பானங்களை உடம்பில் சேத்துக் கொள்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும், முக்கியமாக கெட்ட பழக்கங்களை விட்டு விடுங்கள். சிகரெட், மது, பதப்படுத்தப்பட்ட உணவு, பீட்சா பர்கர்கள், பேக்கேஜ் செய்யப்பட்ட பொருட்கள் போன்றவற்றை உட்கொள்வதில் கட்டுப்பாடு அவசியம். அவற்றிற்கு பதில் எப்போதும் ஆரோக்கியமான உணவையே தேர்வு செய்யுங்கள். உதாரணமாக, பருவகால பச்சை காய்கறிகள், முழு தானியங்கள், பழங்கள் போன்றவற்றை உட்கொள்வதை அதிகரிக்கவும். வழக்கமான உடற்பயிற்சியின் மூலம் நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கலாம். பொரித்த உணவுகள், புகை மற்றும் மதுவை தவிர்ப்பதன் மூலமும் நல்ல கொலஸ்ட்ராலை நாம் அதிகரிக்கலாம். நல்ல கொலஸ்ட்ரால் குறைந்திருந்தால், மருத்துவர்களின் அறிவுரைப்படி சில மருந்துகளின் மூலம் அதை அதிகரிக்கவும் செய்யலாம் என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.