தாய்மை எப்போதுமே மகிழ்ச்சி அளிக்க கூடிய ஒன்று. ஆனால் இரண்டாவது முறையாக கருவுறும் தாய்மார்களுக்கு முதல்முறை கிடைத்த அனுபவத்தின் காரணமாக சில பயங்களும்,குழப்பங்களும் ஏற்படலாம். முதல் குழந்தையை வளர்த்துவிட்டதால், இரண்டாவது குழந்தையையும் எளிதில்வளர்த்துவிடலாம் என்பது கிடையாது. நீங்கள் ஏற்கனவே ஒருகுழந்தையை வளர்ப்பதில் அனுபவம் பெற்றிருந்தாலும்,இரண்டாவது குழந்தைக்கான பயணமும் அதேபோல் ஒரேமாதிரியாக இருக்காது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இரண்டாவது குழந்தையை எதிர்பார்த்து காத்திருக்கும்கர்ப்பிணி பெண்கள் மனதில் தோன்றும் மிகவும் முக்கியமானமற்றும் பொதுவான 4 அச்ச உணர்வுகளை பற்றி தான் தற்போதுபார்க்கப்போகிறோம்.
1. இரண்டாவது குழந்தை மீதான நேசம் : முதல் குழந்தையின் மீது பெற்றோர்கள் அன்பை பொழிந்துவளர்ப்பதை வார்த்தைகளால் வரையறுக்க முடியாது. முதல்முறையாக பெற்றோராகும் தம்பதியர் அனைத்தையும் முதன்முறையாக கற்றுக்கொள்வதால், குழந்தையின் மீதான கவனிப்புஅதிகமாக இருக்கும். இரண்டாவது முறையாக குழந்தையைஎதிர்பார்க்கும் போது, பெரும்பாலானோர் முதல் குழந்தையைபோலவே இரண்டாவது குழந்தையும் நேசிக்கவும்,பாரமரிக்கவும் முடியுமா? என்ற குழப்பத்திற்கு ஆளாகின்றனர்.தனது ஒவ்வொரு குழந்தையும் தாயின் மனதில் தனித்தனிஇடமுன்று, என இதைப் பற்றிய கவலைகளை கர்ப்பிணிகள்தவிர்த்துவிடுவது நல்லது.
2. இரண்டு குழந்தைகளை வளர்ப்பது எப்படி? குடும்பத்திற்குள் புதிதாக நுழையும் குட்டி உறுப்பினரைவரவேற்பது கூடுதல் பொறுப்புகளை கொடுக்கிறது. வீட்டில்இரண்டு குழந்தைகள் இருந்தால் அவர்களை கையாள்வதுதாய்மார்களுக்கு கொஞ்சம் எக்ஸ்ட்ரா வேலையாகவும்மாறிவிடுகிறது. முதல் குழந்தைக்கு, நீங்கள் அவர்களின்படிப்பையும் பள்ளியையும் நிர்வகிக்க வேண்டும், பின்னர்இரண்டாவது குழந்தையுடன் நீங்கள் தூக்கமில்லாதஇரவுகளைச் சமாளிக்க வேண்டியிருக்கும். இதில் நீங்கள்வேலைக்குச் செல்லும் தாய்மாராக இருந்தால், இந்த பிரச்சனைமேலும் உங்களை கவலை கொள்ளச்செய்யும்.
3. இரண்டு குழந்தைகளுக்கு இடையிலான பிணைப்பு : வீட்டில் புதிதாகப் பிறந்த குழந்தையின் வருகையால், குடும்பஉறுப்பினர்களின் கவனம் மூத்த குழந்தையின் மீது இருந்துசற்றுத் திரும்புகிறது. இதுவரை அனைத்து அன்பையும்கவனத்தையும் பெற்ற முதல் குழந்தை, இப்போது அதைமற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். பல நேரம்உடன்பிறந்த போட்டிக்கு வழிவகுக்கிறது. மூத்த குழந்தைஇளைய குழந்தையுடன் ஒரு பிணைப்பை உருவாக்குவதுகடினம், இது தாய்மார்களின் பொதுவான கவலைகளில்ஒன்றாகும்.
4. பொருளாதார தேவை : இரண்டாவது குழந்தையை எதிர்பார்த்து காத்திருக்கும்ஒவ்வொரு பெற்றோரின் முதல் கவலை பொருளாதாரமாக தான்இருக்கும். ஏனென்றால் கர்ப்பம் முதல் கல்வி வரை மற்றொருகுழந்தையை உலகிற்கு கொண்டு வருவதற்கு முன் எண்ணற்றவிஷயங்கள் உள்ளன. குழந்தை விஷயத்தில் பலவற்றைதிட்டமிட்டாலும், நிதி தேவை என்பது கணிக்க முடியாதஒன்றாகவே இருக்கும் என்பதால், கவலை அளிக்க கூடியவிஷயமாக உள்ளது.