சிஸ்டிடீஸ் என்றால் என்ன? சிறுநீர் பையில் அழற்சியை ஏற்படுத்தக் கூடிய சிறுநீர் பாதை தொற்றுக்குப் பெயர்தான் சிஸ்டிடீஸ் ஆகும். பொதுவாக சிறுநீர் கடந்து வரும் குழாயில் பாக்டீரியா கலப்பதன் காரணமாக இவ்வாறு நடைபெறுகிறது. பாலுறவின்போது இந்த பாக்டீரியா தொற்று ஏற்படலாம். கழிவறையை பயன்படுத்திய பின் பின்பக்கத்தில் இருந்து முன்பக்கமாக நோக்கி துடைப்பது, சிறுநீரக கல், கர்ப்பமாக இருப்பது, ஆண்களுக்கான விரைவீக்கம், பெண்களுக்கு நிகழும் மெனோபாஸ், நோய் எதிர்ப்பு சக்தி பலவீனம் போன்ற காரணங்களாலும் இது நிகழக் கூடும்.
கவுச்சி வாடை : பெண்களுக்கு பாக்டீரியா தொற்றுகள் காரணமாக பயங்கரமான கவுச்சி வாடை தென்படலாம். பெண்ணுறுப்பில் இருந்து ஏற்படும் க்ரே-ஒயிட் கலர் கசிவில் இருந்து இந்த வாடை தொன்றலாம். பாக்டீரியா தொற்று என்பது தீவிரத்தன்மை மிகுந்த விஷயமல்ல என்றாலும், நாள்பட்ட பிரச்சினையாக இருப்பின் மருத்துவரை அணுகவும். சிலருக்கு ஆண்டிபயாடிக் மருந்துகள் தேவைப்படலாம்.
பிற காரணங்கள் : உடலில் நீர்ச்சத்து பற்றாக்குறை ஏற்படுவதன் காரணமாகவும் சிறுநீரில் கெட்ட வாடை தென்படலாம். பூண்டு, தண்ணீர் விட்டான் கிழங்கு, காஃபி போன்ற உணவு மற்றும் பானங்களின் காரணமாகவும் வாடை ஏற்படலாம். பொதுவாக சிறுநீரில் ஏற்படக் கூடிய வாடை தற்காலிகமானதாகவும், சுயமாக குணமடையக் கூடியதாகவும் இருக்கும். ஆனால், சிறுநீர் கலரில் மாற்றம் மற்றும் வழக்கத்திற்கு மாறாக மிகுதியான வாடை போன்ற அறிகுறிகள் இருந்தால் மருத்துவர்களை அணுகவும்.