ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் வந்தாலே வரவிருக்கும் புதிய ஆண்டை வரவேற்க நாம் தயாராகிவிடுவோம். அதிலும் ஏதாவது விஷயத்தை மறக்காமல் செய்ய வேண்டும் என்றெல்லாம் தீர்மானம் எடுப்போம். ஆனால் மறக்காமல் பின்பற்ற முடிகிறதா? என்பது கேள்விக்குறித் தான். குறிப்பாக ஆண்கள் மற்றும் பெண்கள் இந்தாண்டாவது நிம்மதியான வாழ்க்கையைக் கிடைக்க வேண்டும் என்று நினைப்பதோடு, தவறாமல் ஜிம்மிற்கு சென்று உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்று நினைப்போம்.
இதற்காக டயட், தீவிர உடற்பயிற்சி போன்றவற்றையெல்லாம் கடைப்பிடிப்போம். இதனால் சில நேரங்களில் உடல் நிலை மோசமடைந்து மன நிம்மதியும் இல்லாத சூழல் ஏற்படும். இந்தாண்டு நீங்களும் உடல் மற்றும் மனத்தை ஆரோக்கியத்தோடு வைத்திருக்க வேண்டும் என்றுத தீர்மானம் எடுத்திருந்தால், இந்த விஷயங்களை மறக்காமல் பின்பற்றுங்கள் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் கீழே.
காலை உணவை சரியான நேரத்தில் எடுத்துக்கொள்ளுதல் : இன்றைக்கு உள்ள இயந்திர உலகத்தில் நாம் வசிப்பதே பெரும் சவால் தான். பணிக்குச் செல்லும் வேண்டும் என்பதற்காக முறையாக காலை உணவை நாம் சாப்பிடுவதில்லை. இதனால் சில மணி நேரங்களிலே உடல் மற்றும் மனச்சோர்வு ஏற்படுகிறது. பொதுவாக காலை உணவில் தான் புரதம் அதிகளவில் உள்ளது. எனவே உடல் எடைக்குறைக்கும் முயற்சியில் நீங்கள் இருந்தாலும் காலை உணவை எப்போதும் வேண்டாம் என்று ஒதுக்காதீர்கள். காலை உணவு தான் உங்களின் எடை இழப்பு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.
உணவைத்தவிர்ப்பது தவறு : நம்முடைய உணவு முறையால் அதிகரிக்கும் உடல் எடையைக் குறைப்பதற்கு சாப்பிடாமல் இருப்பது நல்லது என்று பலர் நினைக்கிறார்கள். இது தவறான செயல். நீங்கள் காலை, மதியம், இரவு என உங்களது உணவைச் சாப்பிடாமல் இருக்கும் போது குமட்டல், வயிற்றுப்போக்கு மற்றும் மலச்சிக்கலை ஏற்படுத்துகிறது. மேலும் ஊட்டச்சத்துக் குறைபாடுகளையும் நமக்கு ஏற்படுத்துகிறது.
இலக்குகளை அமைத்தல் : உடல் எடையை எப்போதும் ஆரோக்கியமான முறையில் தான் நாம் குறைக்க முயல வேண்டும். சீக்கிரமாக குறைக்க வேண்டும் என்று தீவிர உடற்பயிற்சி மற்றும் டயட்டில் இருக்கும் போது நம்முடைய உடல் நிலை மிகவும் மோசமடையும். ஒருவர் வாரந்தோறும் அரை கிலோ முதல் 1 கிலோ எடையைக் குறைக்கலாம் அதாவது மாதந்தோறும் 2 முதல் 3 கிலோ வரைக் குறைக்கலாம். அதற்குக் கீழ் செல்லும் போது உங்களது உடல் ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது.
சரிவிகித உணவை எடுத்துக்கொள்ளுதல் : இன்றைக்கு நாம் சாப்பிடும் எந்தவொரு உணவிலும் ஆரோக்கியம் என்பது கிடையாது. ஊட்டச்சத்துள்ள உணவுகளைச் சாப்பிட்டதால் தான் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு மற்றும் மனச்சோர்வை நீக்கும். எனவே உங்களது உணவு முறையில் புரதம், கார்போஹைட்ரேட்டுகள், கொழுப்புகள், வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்த உணவுகளை நாம் சாப்பிட வேண்டும். இதோடு அதிகளவு நீரை உட்கொள்ள வேண்டும். இது இயற்கையாகவே உங்களது எடையை சரிவிகித உணவுடன் உடல் எடையைக் குறைக்கலாம்.
சப்ளிமெண்ட்ல் எடுத்துக்கொள்ளுதல் : ஒரு சிலருக்கு மட்டுமே உணவுகளின் உதவியோடு உடல் ஆரோக்கியத்தைப் பேணிக்காக்க முடியும். ஒரு சில ஊட்டச்சத்துக்கள் உங்களுக்குத் தேவைப்படும் என்று நீங்கள் நினைத்தால், ஊட்டச்சத்துகள் நிறைந்த மாத்திரைகளை நீங்கள் சப்ளிமெண்ட்ஸாக எடுத்துக் கொள்ள வேண்டும். இது உங்களுக்கு ஆற்றலை அதிகரிப்பதோடு கொழுப்பை குறைத்து எடை இழப்பிற்கு உதவியாக உள்ளது.
மன ஆரோக்கியத்தை அதிகரித்தல் : மன ஆரோக்கியம் என்பது உணர்ச்சி, சமூக மற்றும் உடலியல் நலன்களை உள்ளடக்கியது மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு இன்றியமையாதது. உங்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் மற்றும் மோசமான மன ஆரோக்கியம் உடல் பருமன், இதய நோய் மற்றும் நீரிழிவு நோய்க்கு வழிவகுக்குகிறது. எனவே உங்களது மனம் நிம்மதியாக இருக்க வேண்டும் என்றால் தியானம், உடற்பயிற்சி, யோகா, நடனம் அல்லது ஏதாவது ஒரு பொழுதுபோக்கை மேற்கொள்ள கவனம் செலுத்தவும். இவ்வாறு செய்வதன் மூலம் மன ஆரோக்கியத்தோடு உடல் எடையை குறைக்கலாம்.