பெருமளவிலான மக்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளதாலும், மந்தை நோய் எதிர்ப்பு சக்தி (மொத்த மக்களின் நோய் எதிர்ப்பு கூட்டுதிறன்) அதிகரித்து உள்ளதாலும் கொரோனா தொற்று சமாளிக்க கூடிய நோயாக மாறியிருக்கிறது. எனினும் அடுத்தடுத்த உருவாக்கி கொண்டே இருக்கும் கொரோனா வைரஸின் வேரியன்ட்கள், கடந்த 1 வருட காலமாக ஏற்பட்ட மருத்துவ முன்னேற்றத்திற்கு தொடர்ந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றன.
2-வது அலையின் போது இந்தியாவில் அழிவை ஏற்படுத்திய டெல்டா மற்றும் ஒமைக்ரான் வேரியன்ட்கள் மற்றும் இவற்றின் வெவ்வேறு துணைக்குழுக்கள் மூன்றாவது அலைக்கு உலகை இட்டு சென்றன. இதனிடையே ஒமைக்ரான் வேரியன்ட்டின் கூடுதல் துணை குழுக்கள் (subsets of Omicron variant) தற்போது உருவாகி பரவ தூங்கி உள்ளன. தென்னாப்பிரிக்காவில் BA.4 மற்றும் BA.5 மற்றொரு அலைக்கு காரணமாக உள்ளன. BA.4 மற்றும் BA.5 உள்ளிட்ட புதிய வேரியன்ட்கள் தற்போது எந்த பெரிய ஆபத்தையும் ஏற்படுத்தவில்லை என்று நிபுணர்கள் கூறினாலும், ஒமைக்ரான் வேரியன்ட்டின் இந்த 2 துணைக்குழுக்களும் முன்பு கண்டறியப்பட்ட BA.2-ஐ விட அதிகம் தொற்றும் தன்மை கொண்டது என கூறப்படுகிறது. மேலும் இவை நோய் எதிர்ப்பு சக்தியிலிருந்தும் தப்பிக்க கூடும்.
ZOE கோவிட் ஸ்டடி ஆப்-ன் தலைவரான பேராசிரியர் டிம் ஸ்பெக்டர், சமீபத்தில் YouTube-ல் 2 முக்கிய கோவிட் அறிகுறிகளை பற்றி பகிர்ந்துள்ளார். மேலும் மக்கள் இந்த 2 அறிகுறிகளை தீவிரமாக எடுத்து கொள்ள வேண்டும், அலட்சியம் காட்ட கூடாது என்று அறிவுறுத்தி உள்ளார். அவர் கூறியுள்ள முக்கிய 2 அறிகுறிகளை கீழே பார்க்கலாம்..
வாசனை இழப்பு மற்றும் காது இரைச்சல்: இதில் முதல் அறிகுறியான வாசனை உணர்வு இழப்பு என்பது ஆரம்பகால கோவிட் நோயாளிகளில் காணப்பட்டு வரும் ஒரு முக்கிய அறிகுறியாகும். வைரஸால் பாதிக்கப்பட்ட ஒரு நபர் திடீரென்று வாசனை உணர்வை அனுபவிக்க தவறினால் அல்லது வாசனைகளுக்கு இடையிலான வேறுபாட்டைக் கண்டறிய முடியாவிட்டால் உடனடியாக நிபுணரை அணுக பேராசிரியர் ஸ்பெக்டர் அறிவுறுத்தி உள்ளார். சில சந்தர்ப்பங்களில் ஒருவர் தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்த பிறகும் இந்த அறிகுறி அவர்களுக்கு தொடர் கூடும் என்றும் கூறியுள்ளார்.
மறுபுறம் டின்னிட்டஸ் (Tinnitus) என்பது தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களிடையே ஒப்பீட்டளவில் புதிய நிலையாக உருவெடுத்துள்ளது. டின்னிட்டஸ் என்றால் காது இரைச்சல் என்று பொருள். வெளியில் சத்தம் ஏதும் இல்லாத போதும் காதின் உட்புறத்தில் கேட்கும் சத்தம் அல்லது இரைச்சல் ஒரு தீவிரமான பிரச்சனை. மேலும் தொற்றால் உடலின் மற்றொரு பகுதி பாதிக்கப்படுவதை இது அறிவுறுத்துகிறது என்றுள்ளார். தவிர தங்களது குழுவினர் நடத்திய கணக்கெடுப்பில் 5 கோவிட் நோயாளிகளில் ஒருவருக்கு காது தொடர்பான பிரச்சனை இருப்பதை கண்டறிந்ததாக பேராசிரியர் ஸ்பெக்டர் குறிப்பிட்டுள்ளார். எனவே இதிலிருந்து இந்த அறிகுறி எவ்வளவு சீரியசானது என்பதை அறிந்து கொள்ளுமாறு கூறியுள்ளார்.