ஒவ்வொரு நாளும் உடல் எடையை குறைக்க பல கோடி பேர் ஏராளமான முயற்சிகளை செய்து வருகின்றனர். தவறான வாழ்க்கை முறையினால் ஏற்பட்ட பாதிப்புகளில் முக்கியமானவை உடல் பருமன் தான். பலருக்கு எதற்காக உணவு சாப்பிடுகிறோம், எதற்காக வேலை செய்கிறோம், எதற்காக தூங்குகிறோம், எதற்காக சம்பாதிக்கிறோம் என்பதை பற்றி தெரிவதில்லை. இவற்றை சரிவர புரிந்து இருந்தால் இன்று உடல் பருமன் பிரச்சனையை பலர் தவிர்த்து இருக்கலாம். மோசமான உணவு பழக்கத்தால் தான் அதிக படியான பேருக்கு உடல் பருமன் வருகிறது. அதே போன்று நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து இருப்பதாலும் உடல் பருமன் வருகிறது.
இன்று உடல் எடையை குறைக்க பலர் செய்கின்ற முக்கிய செயலாம் ட்ரெட்மில்லில் ஓடுவது. நேர கணக்கில் ட்ரெட்மில்லில் ஓடுவதால் உடல் எடை குறைவதாக சொல்லப்படுகிறது. இதை 12-3-30 என்கிற ட்ரெட்மில் விதியின் மூலம் வகைப்படுத்தி உள்ளனர். லாரன் ஜிரால்டோ என அழைக்கப்படும் இன்ப்ளுயன்சர் ஒருவர் இந்த முறையை அறிமுகம் செய்து வைத்தார். இதன் மூலம் இவர் மிகவும் பிரபலமடைந்து விட்டார்.
12-3-30 ட்ரெட்மில் விதி : பொதுவாக உடற்பயிற்சியின் செய்பவர்கள் அடிப்படையில் நடைபயிற்சி மூலம் தொடங்குவார்கள். ஆனால் அதற்கு சில நிபந்தனைகளை தற்போது அறிமுகம் செய்துள்ளனர். அதை தான் 12-3-30 ட்ரெட்மில் விதி என்று கூறுகின்றனர். '12' என்பது ஒருவர் டிரெட்மில்லை அமைக்க வேண்டிய சாய்வைக் குறிக்கிறது. ‘3’ என்பது ஒருவர் ஓட வேண்டிய டிரெட்மில்லின் வேகமாகும். மேலும் ‘30’ என்பது உடற்பயிற்சியின் கால அளவை குறிக்கிறது.
இந்த புதிய ட்ரெட்மில் ட்ரெண்டை நவம்பர் 2020 ஆண்டில் வீடியோவாக லாரன் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், இந்த புதிய வழிமுறை எப்படி உருவானது என்பதையும் லாரன் குறிப்பிட்டுள்ளார். மேலும் இது சிறப்பாக உதவுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டதில் இருந்து, 52,000-க்கும் மேற்பட்ட ஃபாலோவர்ஸை கொண்ட ஒரு முழுமையான பக்கமாக இவரின் பக்கம் மாற்றப்பட்டுள்ளது.
அதில் அவரின் உடலில் ஏற்பட்டுள்ள சிறப்பான மாற்றத்தை கண்கூடாக காண முடிகிறது. அதே போன்று மக்களும் அவர்களின் 'முன்-பின்' புகைப்படங்களை அதிகமாக பகிர்ந்து வருகின்றனர். ஒர்க் அவுட்டின் பின்னால் உள்ள அறிவியல் என்னவென்றால், நீங்கள் ஒரு சாய்ந்த விமானத்தில் நடக்கும்போது, ஈர்ப்பு விசை என்பது உங்கள் உடலை கீழே இழுக்க முயற்சிக்கிறது. இதன் விளைவாக, சாய்ந்த நிலையில் 30 நிமிடம் ட்ரெட்மில்லில் ஓடினால், சாதாரண மேற்பரப்பில் 30 நிமிடங்கள் நடப்பதை விடவும் அதிகப்படியான கலோரிகள் எரிக்கப்படுகிறது.