சமீப நாட்களாக கோடை வெயில் மண்டையை பிளந்தது கொண்டிருக்கிறது. அதுவும் காலை 7 மணிக்கே வெயில் கொளுத்துவதால் வேலை, பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்வோர் கடும் அவதியடைந்து வருகின்றனர். கொளுத்தி வரும் கோடை வெயில் பலருக்கும் அடிக்கடி நீரிழப்பு ஏற்படுவது மற்றும் ஆபத்தான பிற உடல்நல பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. எனவே தான் கோடை மாதங்களில் ஆரோக்கியமாக இருக்க போதுமான ஊட்டச்சத்துக்கள் கொண்ட உணவுகளை உட்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. உடலை ஹைட்ரேட்டாகவும், வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும் உதவும் சில சீசன் உணவுகளை இங்கே பார்க்கலாம்..
வெள்ளரி: வெள்ளரிக்காயில் 95% தண்ணீர் உள்ளது மற்றும் ஒரு கப் வெள்ளரிக்காயில் இருக்கும் கலோரி எண்ணிக்கை 16 மட்டுமே. பகல் நேரத்தில் இதை சாப்பிடும் போது உடலை ஹைட்ரேட்டாக வைக்க உதவுகிறது. வெள்ளரியை சாப்பிடும் போது அதன் தோலை அகற்றாமல் சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில் இதில் வைட்டமின் சி உள்ளது. முடிந்த போதெல்லாம் வெள்ளரி சாப்பிடுவது UVA / UVB கதிர்களால் ஏற்படும் ஸ்கின் கேன்சரை தடுக்க உதவுகிறது.
மாம்பழம்: கோடை சீசனில் மக்களால் விரும்பி சாப்பிடப்படும் சுவை மிகுந்த கனியான மாம்பழத்தில் 20-க்கும் மேற்பட்ட வெவ்வேறு வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அடங்கி உள்ளன. மாம்பழத்தில் புரொட்டின்ஸ், வைட்டமின்கள் ஏ, பி6, சி, இரும்பு, ஃபோலேட், மெக்னீசியம், ரைபோஃப்ளேவின் மற்றும் உணவு நார்ச்சத்துக்கள் போன்ற ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஊட்டச்சத்துக்கள் நிரம்பிய இருக்கிறது. மாம்பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் சி போன்ற சருமத்திற்கு உகந்த ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இந்த பழம் குளிர்ச்சியான பண்புகளை கொண்டிருப்பதால் ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படாமல் தடுக்க உதவும்.
மர ஆப்பிள் (wood apple): வெப்ப காலத்தில் ஏற்படும் வயிற்றுப்போக்கு மற்றும் செரிமானம் தொடர்பான பிற பிரச்சனைகளுக்கு இந்த கோடைகால பழம் ஒரு சிறந்த தீர்வாக இருக்கும். செரிமானத்தை மேம்படுத்த, மலச்சிக்கலைப் போக்க உதவுகிறது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.