என்னதான் சீரான வாழ்க்கை முறை பழக்கங்கள், உணவுமுறைகளை கடைப்பிடித்தாலும் இரவுத் தூக்கம் இல்லை எனில் அவை எதுவுமே பலன் அளிக்காது. ஏனெனில் உடலானது உங்கள் ஆழந்த தூக்கத்தின் போதுதான் தன்னை பழுது நீக்கம் செய்கிறது. அதன் வேலைகளை முழுமையாக செய்கிறது. அவை தடைபடும்போது உடல் பின்விளைவுகளாக நோய்களை அளிக்கிறது.
உங்களுக்கு தூக்கத்தில் தொந்தரவு, தூக்கமின்மை கோளாறு , தூங்கும்போது பதட்டம் போன்ற பிரச்சனைகள் இருந்தால் உங்கள் மனதை வசியம் செய்யக் கூடிய சில பயிற்சிகளை செய்யுங்கள். உங்களை நீங்களே மறக்கடிக்கச் செய்யும் விஷயத்தில் கவனம் செலுத்துங்கள். உங்களை ஆழ்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் இசையை கேளுங்கள். கதை கேளுங்கள்.
தூங்குவதற்கு 30- 60 நிமிடங்களுக்கு முன்பு சில சப்ளிமெண்ட்ஸ் சாப்பிட பரிந்துரைக்கிறார். 145mg Magneisum Threonate அல்லது 200mg Magnesium Bisglycinate, 50mg Apigenin, 100-400mg Theanine ஆகிய மாத்திரைகளை எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கிறார். ஆனால் இவற்றை உங்கள் மருத்துவரின் பரிந்துரை, அறிவுரையின்றில் எடுத்துக்கொள்ளக் கூடாது.