பெண்கள் எவ்வளவு வலிமை மிகுந்தவர்களாக இருந்தாலும் இந்த மாதவிலக்கு என்பது அவர்களுக்கு சிரமம் ஏற்படுத்துகின்ற விஷயம் தான். அதுவும் மாதவிலக்கு வலி மிகுந்ததாகவோ அல்லது சீரற்றதாகவோ இருந்தால் அதனால் அவர்கள் எதிர்கொள்ளும் பாதிப்புகள் ஏராளம். தசை பிடிப்பு, வயிறு உப்புசம், மனச் சோர்வு போன்ற காரணங்களால் பெண்கள் மிகவும் அவதி அடைவார்கள். குறிப்பாக, இனிப்பான எந்த உணவும் இந்த சமயத்தில் அவர்களுக்கு கசப்பான அனுபவத்தை ஏற்படுத்தக் கூடியதாகவே அமையும். மாதவிலக்கு அறிகுறிகள் ஒவ்வொரு நபருக்கு மாறுபடுகிறது. அதே சமயம், உரிய முறையில் கவனமெடுத்து எச்சரிக்கையுடன் செயல்பட்டால் ஒவ்வொரு மாதமும் மாதவிலக்கு சீரான கால அளவில் நடைபெறும்.