ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » பணக்காரர்களிடம் இருந்து நாம் கற்று கொள்ள வேண்டிய சில சிக்கன பழக்கங்கள்..

பணக்காரர்களிடம் இருந்து நாம் கற்று கொள்ள வேண்டிய சில சிக்கன பழக்கங்கள்..

பணக்காரர்கள் கடைபிடிக்கும் பழக்கங்களை நீங்களும் பின்பற்ற விரும்புகிறீர்களா.?

 • 19

  பணக்காரர்களிடம் இருந்து நாம் கற்று கொள்ள வேண்டிய சில சிக்கன பழக்கங்கள்..

  ஒரு அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்தாலும் சரி, தனியாக பிசினஸ் செய்து கொண்டிருந்தாலும் சரி பலரது ஆசை எப்படியும் பணக்காரராக வேண்டும் என்பதாகவே இருக்கும். உங்கள் எண்ணமும் கூட எப்படி பணக்காரர் ஆவது என்பதாக இருக்கலாம். அப்படி என்றால் நிச்சயமாக உங்களுக்கு புத்திசாலித்தனம் தேவை. அதே நேரத்தில் நீங்கள் கைவிட அல்லது பின்பற்ற வேண்டிய சில பழக்கங்களும் உள்ளன.

  MORE
  GALLERIES

 • 29

  பணக்காரர்களிடம் இருந்து நாம் கற்று கொள்ள வேண்டிய சில சிக்கன பழக்கங்கள்..

  ஏனென்றால் உலகின் மிகவும் வசதி படைத்தவர்களில் சிலர் கோடிகளை குவித்த பிறகும் கூட பணக்காரர் ஆவதற்கு முன்னர் மிகுந்த எச்சரிக்கையுடன் பணத்தை செலவழித்ததை போலவே செலவுகளை கையாளுகிறார்கள் மற்றும் சிக்கனமாக இருக்கிறார்கள். பணக்காரர்கள் கடைபிடிக்கும் பல பழக்கங்கள் அல்லது நடைமுறைகளை நீங்களும் பின்பற்ற விரும்புகிறீர்களா.? அப்படியானால் பணக்காரர்கள் கடைபிடிக்கும் சில சிக்கன பழக்கங்களின் பட்டியல் இங்கே...

  MORE
  GALLERIES

 • 39

  பணக்காரர்களிடம் இருந்து நாம் கற்று கொள்ள வேண்டிய சில சிக்கன பழக்கங்கள்..

  பட்ஜெட்: சாமானிய மற்றும் நடுத்தர வர்க்க மக்கள் மட்டுமல்ல ஒரு சில பணக்காரர்களும் பட்ஜெட்டையொட்டி தங்களது செலவுகளை வரையறுக்கிறார்கள். மாதம் தோறும் குறிப்பிட்ட தொகையை சேமிப்பாக மாற்றுகிறார்கள். தவிர பணத்தை எதற்கெல்லாம் செலவழித்துள்ளோம், பஜெட்டை தாண்டி செலவினங்கள் சென்றால் அதை அடுத்த முறை எப்படி கட்டுப்படுத்துவது என்று சிந்தித்து அதற்கேற்ப திட்டமிடுகிறார்கள்.

  MORE
  GALLERIES

 • 49

  பணக்காரர்களிடம் இருந்து நாம் கற்று கொள்ள வேண்டிய சில சிக்கன பழக்கங்கள்..

  ரிவார்ட்ஸ் மற்றும் கூப்பன்கள்: சிறிய வழியாக இருந்தாலும் அதன் மூலம் பணத்தை சேமிப்பது மிக முக்கியம். அதை பணக்காரர்கள் செய்ய தவறுவதில்லை. எனவே உங்கள் கைகளுக்கு கிடைக்கும் அனைத்து கூப்பன்கள் மற்றும் ரிவார்ட்ஸ்களை ஷாப்பிங், உணவு ஆர்டர் உள்ளிட்டவற்றின் போது சரியாக பயன்படுத்தி கொள்ளுங்கள்.

  MORE
  GALLERIES

 • 59

  பணக்காரர்களிடம் இருந்து நாம் கற்று கொள்ள வேண்டிய சில சிக்கன பழக்கங்கள்..

  தேவைகளில் மட்டுமே கவனம்: புத்திசாலியான பணக்காரர்கள் கையில் காசு இருக்கிறது என்பதற்காக ஆசைப்படும் பொருட்கள் அனைத்தையுமே வாங்கி குவிப்பதில்லை. தங்களுக்கு அந்த பொருள் பயன்படுமா, அத்தியாவசியமா என்பதை யோசித்தே வாங்குவார்கள். தங்களுக்கு தேவையானதை மட்டும் வாங்குவதன் மூலம் பணத்தை பெருமளவு மிச்சப்படுத்துகிறார்கள்.

  MORE
  GALLERIES

 • 69

  பணக்காரர்களிடம் இருந்து நாம் கற்று கொள்ள வேண்டிய சில சிக்கன பழக்கங்கள்..

  வசதிக்கு கீழே வாழ்க்கை: பல பெரும் பணக்காரர்கள் தங்கள் வசதியை ஆடம்பரமாக வெளிப்படுத்துவதில்லை. அவர்கள் சாதாரண வீடுகளில் வாழ்கிறார்கள் அல்லது பணம் இருக்கிறது என்பதற்காக வேறு வேறு வீடுகளுக்கு மாறாமல் பல ஆண்டுகளாக ஒரே வீட்டில் வசிக்கிறார்கள். சாதாரண கார்களையே ஓட்டுகிறார்கள், விமானத்தில் எகானமி கிளாஸில் பயணம் செய்கிறார்கள். இன்னும் சிலர் டிரைவரை கூட வைத்து கொள்ளாமல் தாங்களே கார்களை ஓட்டுகிறார்கள். EMI கட்டும் சக்தி இல்லாவிட்டால் கடனில் வீடு வாங்க வேண்டாம். கடனாகவோ அல்லது வாடகையாகவோ 40% வீதத்திற்கு மேல் செலவழிப்பது புத்திசாலித்தனம் இல்லை.

  MORE
  GALLERIES

 • 79

  பணக்காரர்களிடம் இருந்து நாம் கற்று கொள்ள வேண்டிய சில சிக்கன பழக்கங்கள்..

  குறைவான செலவு: சில பெரிய செல்வந்தர்கள் கூட தங்கள் உடைகள், காலணிகள், உணவு போன்ற அத்தியாவசியத்திற்கு தேவையான அளவே செலவிடுகிறார்கள். டிசைனர் உடைகள், பிராண்டட் ஷூக்கள் அல்லது ஆக்சஸரீஸ்கள் மீது பெரிதாக ஆர்வம் காட்ட மாட்டார்கள். உங்களுக்கு பிடித்தால் இவற்றுக்கு காசு செலவழிப்பது  தவறில்லை. ஆனால் இதற்காக மட்டுமே பணம் செலவிடும் பட்டியலில் நீங்கள் இருந்தால் செலவை குறைத்து கொள்ளலாம்.

  MORE
  GALLERIES

 • 89

  பணக்காரர்களிடம் இருந்து நாம் கற்று கொள்ள வேண்டிய சில சிக்கன பழக்கங்கள்..

  முதலீடு:பணக்காரர்கள் தங்களிடம் சேரும் பணத்தை மேற்கொண்டு பெருக்க அதை புத்திசாலித்தனமாக முதலீடு செய்கிறார்கள். இந்த பழக்கம் அவர்களுக்கு எதிர் கால இலக்குகளை அடைய அல்லது செலவுகளை சமாளிக்க உதவுகிறது.

  MORE
  GALLERIES

 • 99

  பணக்காரர்களிடம் இருந்து நாம் கற்று கொள்ள வேண்டிய சில சிக்கன பழக்கங்கள்..

  சேமிப்பு:ஹெல்த் இன்ஷுரன்ஸ், லைஃப் இன்ஷுரன்ஸ் முதல் ப்ராவிடன்ட் ஃபன்ட் வரை நீங்கள் சேமிக்கும் பணத்தை பயன்படுத்துவதற்கான வழிகளை தேடுங்கள். ஏனென்றால் அவை உங்களை வருமான வரியில் இருந்தும் பாதுகாக்கின்றன.

  MORE
  GALLERIES