அனைவருக்கும் பொருளாதார ரீதியாக மிகவும் வலுவான நிலையை அடைய வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அனைவருக்கும் அது சாத்தியப்படுவதில்லை. நம்முடைய பழக்கவழக்கங்களும், திட்டமிடாமல் செலவுகளை மேற்கொள்ளும் முறையினாலும் பலராலும் தங்களது பொருளாதார நிலையை சீராக வைத்துக் கொள்ள முடிவதில்லை. ஆனால் பொருளாதார நிலையில் வலுவாக உள்ள சிலர் எப்போதும் தங்களுக்கு என குறிப்பிட்ட கொள்கைகள் மற்றும் வரைமுறைகளை வகுத்து அதன்படியே தங்கள் வாழ்க்கையை வழி நடத்துகின்றனர். இவ்வாறு பொருளாதார நிலையில் வலுவாக இருக்கும் நபர்கள் கடைபிடிக்கும் சில பழக்க வழக்கங்களை பற்றி இப்போது பார்ப்போம்
கொள்முதல்களை திட்டமிடுவார்கள் : பொருட்களை வாங்குவதற்கு எவ்வளவு செலவு செய்ய வேண்டும் என்று திட்டத்தை முன்கூட்டியே வகுத்து வைத்திருப்பார்கள். குறிப்பிட்ட நிறுவனம் அல்லது குறிப்பிட்ட பொருளை வாங்க முடிவு செய்து இருந்தால் முடிந்த வரை அந்த பொருளின் விலை குறையும் வரை காத்திருந்து அதன் பிறகே அதனை வாங்குவார்கள்.