காதல், திருமண உறவு எல்லாமே சிக்கலானது தான். அவ்வப்போது உறவில் கருத்து வேறுபாடுகள் தோன்றும், தீவிரமான வாக்குவாதம் ஏற்படும். நான் சொல்வதைத்தான் நீ கேட்க என்று இருவருமே போட்டி போட்டுக் கொண்டு சண்டையிட்டுக் கொள்வார்கள். ஆனாலும், காதலும் அன்பும் இல்லாமல் வாழவே முடியாது. மனகசப்பு, முரண்பாடு, சண்டைகள் என்று அடிக்கடி நடக்கும் போது, உறவை அழகாக்குவது, நீடிப்பது கொஞ்சம் சவாலகாவே இருக்கிறது. உங்களுடைய ரிலேஷன்ஷப்பை மேலும் அழகாக்க, வலுவாக்க, தடைகளைத் தாண்டி வென்ற தங்கள் காதல் வாழ்க்கையையே உதாரணமாக காட்டுகிறார்கள் பிரபல ஜோடிகள்.
பேலன்ஸ், சப்போர்ட் மற்றும் நேரம் ஒதுக்குதல் - சோனம் கபூர் அஹுஜா மற்றும் ஆனந்த் அஹுஜா : பாலிவுட் திருமணங்கள் என்றாலே பிரம்மாண்டமாகத்தான் இருக்கும். அதேபோல அனில் கபூரின் மூத்த மகளான சோனம் கபூரின் திருமணம் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. தற்போது வரை அந்த திருமணத்தை வியந்து பேசுபவர்கள் உள்ளனர். ஆனால் திருமணம் மட்டும் இவ்வளவு பிரமாண்டமாக நடத்தினால் போதுமா? சோனம் கபூர் மற்றும் ஆனந்த் அஹுஜா இருவருமே பல ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்களின் காதல் உறவை வெற்றிகரமாக கொண்டு செல்வது இருவருக்கும் இருக்கும் அற்புதமான புரிதல். இவர்களின் காதல் வாழ்க்கை வெற்றிகரமாக இருப்பதற்கு மூன்று காரணங்கள் உள்ளன. முதலாவது இருவரும் மற்றவர்களின் வேலைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இரண்டாவதாக மற்றவருக்காக நேரம் ஒதுக்குகிறார்கள், ஒருவரை ஒருவர் ஊக்கப்படுத்தி கொண்டிருக்கிறார்கள். அதேபோல வேலை மற்றும் குடும்பம் இரண்டையும் சரியாக பேலன்ஸ் செய்து கொண்டிருக்கிறார்கள்.
உங்கள் சோல்மேட் உங்களுக்காகக் காத்திருக்கிறார், கங்கனா ரனாவத் : திருமணமானவர்கள்தான் உறவுகளுக்கான அழகான ஆலோசனைகளை வழங்க முடியும் என்று இல்லை. மிகவும் தைரியமான நடிகை என்று பாலிவுட்டில் பெயரெடுத்த கங்கனா ரனாவத், இன்னும் சிங்கிள் தான். ஆனால், உறவுகளைப் பற்றி நன்றாகப் புரிந்து வைத்துள்ளார். உங்கள் காதல் பிரேக் அப் ஆனாலும் அல்லது திருமணம் விவாகரத்தில் முடிந்தாலும், அதற்காக நீங்கள் உங்களை வருத்திக்கொள்ள வேண்டிய தேவையும் இல்லை. ஒரு உறவில் விரிசல் விழுந்துவிட்டது அல்லது பிரிந்துவிட்டீர்கள் என்றால் உங்களுக்கான சோல்மேட் நிச்சயமாக இருக்கிறார் என்று கங்கனா ரணாவத் கூறியிருக்கிறார்.
எல்லாவற்றையும் விட, என் பார்ட்னர் முக்கியம், அனுஷ்கா ஷர்மா மற்றும் விராட் கோலி : இந்தியாவின் நட்சத்திர தம்பதிகளான பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா மற்றும் இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான விராட் கோலி இருவருக்குமே எவ்வளவு வேலையாக இருந்தாலும் எந்த நாட்டில் இருந்தாலும், ஒருவருக்கொருவர் நேரம் ஒதுக்கிக்கொண்டு, தங்கள் உறவுக்கு முக்கியத்துவம் கொடுப்பதிலும் தவறுவதில்லை.
காதல், கணவன் மனைவி என்பதைத் தாண்டிய நட்பு, தீபிகா மற்றும் ரன்வீர் : நண்பர்கள் எப்படி திருமணம் செய்து கொள்ளலாம் என்று இன்னும் விவாதங்கள் நடைபெற்று வருகிறது! ஆனால் கணவன் மனைவிக்குள் அழகான நட்பு இருப்பது அந்த உறவுக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும். ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோனே இருவருமே பாலிவுட் ஸ்டார்கள். இவர்கள் நீண்ட காலமாக நண்பர்களாக இருந்து, பின் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். காதல் திருமண உறவு என்பதைக் கடந்து இவர்களுக்கிடையே இருக்கும் அழகான நட்பு தான் இந்த உறவை பலப்படுத்துகிறது. ஒரு உறவில் சிறந்த நண்பர்களாக இருப்பது ஒருவரைப் பற்றி ஒருவர் முழுவதுமாக புரிந்து கொள்ள உதவும்..
நம்பிக்கை மற்றும் உண்மை தான் ஆணிவேர், பிபாஷா பாசு மற்றும் கரண் சிங் : பிபாஷா பாசு மற்றும் கரன் சிங் குரோவர் இருவருமே தங்கள் உறவில் மிகப்பெரிய பிரேக் அப்பை கடந்து வந்துள்ளனர். பிபாஷா பத்தாண்டு கால லிவின் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வெளியே வந்தவர். அதேபோல கரன் சிங் குரோவர் காதலித்து திருமணம் செய்து கொண்டு விவாகரத்து பெற்றவர். பிரேக் அப் ஆனாலோ விவாகரத்து ஆனாலோ நமக்கு பிடித்த வாழ்க்கைத்துணை மீண்டும் அமையாது என்பதை இவர்கள் தவறு என்று நிரூபித்துள்ளனர். இவர்கள் உறவின் அஸ்திவாரமாக இருப்பது நம்பிக்கை மற்றும் உண்மை.