முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » வீட்டில் பல்லிகள் தொல்லையால் அவதிப்படுறீங்களா... இனி கவலையே வேண்டாம்... விரட்ட எளிய வழிகள் இதோ...!

வீட்டில் பல்லிகள் தொல்லையால் அவதிப்படுறீங்களா... இனி கவலையே வேண்டாம்... விரட்ட எளிய வழிகள் இதோ...!

பலரும் வீட்டில் பல்லிகளின் தொல்லையால் அவதிபடுவோம், அதில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ் இதோ..

  • 19

    வீட்டில் பல்லிகள் தொல்லையால் அவதிப்படுறீங்களா... இனி கவலையே வேண்டாம்... விரட்ட எளிய வழிகள் இதோ...!

    பொதுவாக பூச்சிகளுக்கு அஞ்சும் நபர்கள் நம்மிடையே பலரும் உண்டு. குறிப்பாக பல்லியைக் கண்டால் பலரும் பதறியடித்து சிலர் அலறுவார்கள். ஆனால் அந்த பல்லிகளோ எல்லா வீட்டிலும் எங்காவது சுவரில் தென்பட்டு பயத்தையும் சலிப்பையும் ஏற்படுத்தும்.

    MORE
    GALLERIES

  • 29

    வீட்டில் பல்லிகள் தொல்லையால் அவதிப்படுறீங்களா... இனி கவலையே வேண்டாம்... விரட்ட எளிய வழிகள் இதோ...!

    அந்த பல்லி எப்போது எங்கு விழும் என்ற சந்தேகமும் பலருக்கு பீதியை உருவாக்கும். காரணம் பல்லி விழுவதை வைத்து சில நம்பிக்கைகளை பின்பற்றுவர்களும் இருக்கிறார்கள். எனவே, பல்லி இருக்கும் பகுதிக்கு பயந்து அங்கு வராமல் அவற்றை ஒழிக்க பல முயற்சிகள் எடுக்கப்பார்கள்.

    MORE
    GALLERIES

  • 39

    வீட்டில் பல்லிகள் தொல்லையால் அவதிப்படுறீங்களா... இனி கவலையே வேண்டாம்... விரட்ட எளிய வழிகள் இதோ...!

    என்னதான் முயற்சி எடுத்தாலும், பலராலும் பல்லி வருவதை தடுக்க முடியாது. காரணம் அவை பெரும்பாலும் வீட்டின் சுவர்களில் சிறிய பூச்சிகளை உட்கொள்ள வருகின்றன. எனவே, தொல்லை தரும் பல்லிகளை எப்படி வீட்டில் இருந்து அகற்றுவது என்பதை இங்கு தெரிந்துகொள்வோம்.

    MORE
    GALLERIES

  • 49

    வீட்டில் பல்லிகள் தொல்லையால் அவதிப்படுறீங்களா... இனி கவலையே வேண்டாம்... விரட்ட எளிய வழிகள் இதோ...!

    முதலில் வீட்டை தொடர்ந்து சுத்தம் செய்து எப்போதும் சுத்தமாக வைத்திருங்கள். உட்புற சுவர்கள் மற்றும் தரையை கிருமி நாசினி மூலம் தொடர்ந்து சுத்தம் செய்ய வேண்டும். ஜன்னல்களை சுத்தமாக வைத்திருங்கள். அப்போது பூச்சிகள் அண்டாமல் இருக்கும். இதனால் பல்லி வருவது குறையும்.

    MORE
    GALLERIES

  • 59

    வீட்டில் பல்லிகள் தொல்லையால் அவதிப்படுறீங்களா... இனி கவலையே வேண்டாம்... விரட்ட எளிய வழிகள் இதோ...!

    வெங்காயத்தின் கடுமையான வாசனையை பல்லிகள் விரும்புவதில்லை. வெங்காயத்தை வெட்டியோ வைத்தாலோ அல்லது சாற்றை சுவர்களில் தெளித்தால் பல்லிகள் போய்விடும்.

    MORE
    GALLERIES

  • 69

    வீட்டில் பல்லிகள் தொல்லையால் அவதிப்படுறீங்களா... இனி கவலையே வேண்டாம்... விரட்ட எளிய வழிகள் இதோ...!

    மயில் இறகுகள் பல்லிகளை பயமுறுத்துகின்றன. எனவே மயில் இறகுகளை வீட்டில் வைத்திருந்தால் அந்த பகுதிகளை பல்லிகள் அணுகாது. அதேபோல, காபி மற்றும் தக்காளி பொடியை தண்ணீரில் கலந்து பேஸ்ட் செய்து அவற்றை வைத்தாலும் பல்லிகள் அங்கு வராது.

    MORE
    GALLERIES

  • 79

    வீட்டில் பல்லிகள் தொல்லையால் அவதிப்படுறீங்களா... இனி கவலையே வேண்டாம்... விரட்ட எளிய வழிகள் இதோ...!

    சுவர்களுக்கு எதிராக மரச்சாமான்களை வைக்கக்கூடாது. அங்குள் அதிகம் பல்லி அண்ட வாய்ப்பு உள்ளது. நாம் சாப்பிட்டு வீசும் முட்டை ஓடுகளை வைத்தால் அங்கெல்லாம் பல்லி வராது. அந்த வாசனைக்கு பல்லிகள் வீட்டை விட்டு ஓட்டம் பிடித்துவிடும்.

    MORE
    GALLERIES

  • 89

    வீட்டில் பல்லிகள் தொல்லையால் அவதிப்படுறீங்களா... இனி கவலையே வேண்டாம்... விரட்ட எளிய வழிகள் இதோ...!

    நாப்தலின் உருண்டைகளின் (அந்துருண்டை) வாசனையில் பல்லிகள் ஓடிவிடும். எனவே, வீடு முழுவதும் அவற்றை ஆங்காங்கே வைப்பதன் மூலம் பல்லி தொல்லைகளில் இருந்து விடுபடலாம்.

    MORE
    GALLERIES

  • 99

    வீட்டில் பல்லிகள் தொல்லையால் அவதிப்படுறீங்களா... இனி கவலையே வேண்டாம்... விரட்ட எளிய வழிகள் இதோ...!

    கற்பூரவல்லி இலை வாசனைக்கு பல்லி வராது. எனவே, இந்த தழைகளை எரித்து அதன் புகைகளை வீட்டில் பரவ விட்டால் பல்லி தொல்லை இருக்காது.

    MORE
    GALLERIES