முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » உலக இட்லி தினம் இன்று.. இட்லி வரலாறு தெரியுமா?

உலக இட்லி தினம் இன்று.. இட்லி வரலாறு தெரியுமா?

Idli day | உலக இட்லி தினம் கடந்த 2015ம் ஆண்டு முதல் முதலாக சென்னையில்தான் கொண்டாடப்பட்டது. கடந்த 17ம் நூற்றாண்டிலேயே தமிழ்நாட்டு மக்கள் இட்லி என்ற வார்த்தையை பயன்படுத்தி வருகின்றனர்.

  • 17

    உலக இட்லி தினம் இன்று.. இட்லி வரலாறு தெரியுமா?

    உலக இட்லி தினம் இன்று கொண்டாடப்படுகிறது. மிகவும் ஆரோக்கியமான உணவுளில் ஒன்றான இட்லியின் சிறப்புகளையும், அதன் வரலாறு பற்றியும் இந்த சிறப்பு தொகுப்பில் காணலாம்.

    MORE
    GALLERIES

  • 27

    உலக இட்லி தினம் இன்று.. இட்லி வரலாறு தெரியுமா?

    "இட்லி" தென்னிந்தியாவில் இந்த மூன்றெழுத்து உணவு இல்லாத ஹோட்டல்களே இல்லை என்று கூறி விடலாம். சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு வரை தீபாவளி போன்ற சிறப்பு தினங்களில் மட்டுமே வீடுகளில் அத்திப் பூத்தது போல் சமைக்கப்பட்ட இந்த இட்லியை, தமிழகத்தில் இன்று இட்லி வேகாத வீடுகளும், ஹோட்டல்களும் இல்லை என்ற அளவுக்கு நம்மவர்களின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்துவிட்டது.

    MORE
    GALLERIES

  • 37

    உலக இட்லி தினம் இன்று.. இட்லி வரலாறு தெரியுமா?

    ஆவியில் வேக வைத்து தயாரிக்கப்படும் இட்லி, இடியாப்பம், புட்டு போன்ற ஆரோக்கியமான உணவு வகைகளில், தமிழ்நாட்டின் முதல் சாய்ஸ் இட்லி தான். கொழுப்புச் சத்து அறவே இல்லாத இட்லிக்கு, பல்வேறு வகையான சைட் டிஷ் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப தயாராகிறது. கிராமப் புறங்களில் இன்றளவும் பல வீடுகளில் கறிக் குழம்பும், ஆவி பறக்கும் இட்லியும் தான் ஞாயிற்றுக் கிழமை காலை நேரங்களில் ஸ்பெஷல் டிஷ் ஆக திகழ்கின்றன.

    MORE
    GALLERIES

  • 47

    உலக இட்லி தினம் இன்று.. இட்லி வரலாறு தெரியுமா?

    சாம்பாரில் மட்டுமின்றி பல வகை சட்னிகளுடன் இட்லி சாப்பிடுவதை சைவப் பிரியர்கள் பெரிதும் விரும்புவர். தமிழகத்தில் சாலையோர தள்ளு வண்டிக் கடை முதல் ஸ்டார் ஹோட்டல்கள் வரை இட்லி கிடைக்காத உணவகங்களே இல்லை எனக் கூறலாம். சென்னை போன்ற பெரு நகரங்களில் இட்லிக்காகவே பிரத்யேக உணவகங்களும் வியாபித்திருக்கின்றன. இட்லியில் இத்தனை வெரைட்டியா? என்று ஆச்சரியப்படும் அளவுக்கு பல்வேறு ரகங்களை இந்த உணவகங்களில் ருசிக்க முடியும்.

    MORE
    GALLERIES

  • 57

    உலக இட்லி தினம் இன்று.. இட்லி வரலாறு தெரியுமா?

    ஜீரண சக்தி குறைவாக இருக்கும் மழலையர்களுக்குக் கூட தாய்ப் பாலுக்கு அடுத்தபடியாக இட்லியை தயக்கமின்றி ஊட்டுவார்கள் தமிழகத் தாய்மார்கள். மருத்துவமனைகளில் நோயாளிகளாக இருப்பவர்களுக்கும் மருத்துவர்களின் உணவு லிஸ்ட்டில் இடம்பெறும் முதல் சாய்ஸ் இட்லி தான். உலகளவில் ஆரோக்கியமான உணவுகளை பட்டியலிட்டால் முதல் 10 இடங்களில் இட்லியும் இடம்பிடிக்கும்.

    MORE
    GALLERIES

  • 67

    உலக இட்லி தினம் இன்று.. இட்லி வரலாறு தெரியுமா?

    இத்தனை சிறப்புகளை பெற்ற இட்லியை தயாரிப்பதிலும் சிக்கல்கள் இல்லாமல் இல்லை. இன்ஸ்டண்ட் உணவுகள் போல் சுவையான இட்லியை சில நிமிடங்களில் தயாரித்து விட முடியாது. இட்லி அரிசியை குறைந்தது 4 முதல் 5 மணி நேரம் நீரில் ஊற வைத்து, அதனுடன் வெந்தயம் மற்றும் உளுந்து சேர்த்து, குறிப்பிட்ட பதத்தில் அரைத்து, அதனை குறைந்தது 8 மணி நேரம் புளிக்க வைத்தால் மட்டுமே மல்லிகைப் பூ போன்ற இட்லி கிடைக்கும். தமிழ்நாட்டில் பிரபல நடிகையான குஷ்புவின் பெயரிலும் உருவாக்கப்பட்ட இட்லி, திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளில் விரும்பப்படும் உணவாக மாறியது.

    MORE
    GALLERIES

  • 77

    உலக இட்லி தினம் இன்று.. இட்லி வரலாறு தெரியுமா?

    இத்தனை சிறப்புகள் வாய்ந்த இட்லியை சிறப்பிக்கும் வகையில் உலக இட்லி தினம் கடந்த 2015ம் ஆண்டு முதல் முதலாக சென்னையில்தான் கொண்டாடப்பட்டது. கடந்த 17ம் நூற்றாண்டிலேயே தமிழ்நாட்டு மக்கள் இட்லி என்ற வார்த்தையை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், இந்தோனேஷியா தான் இட்லியின் பிறப்பிடமாக கருதப்படுகிறது. சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தோனேஷியாவில் இட்லி தயாரிக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. பல ஆயிரம் ஆண்டு வரலாற்றை உள்ளடக்கிய ஆவி பறக்கும் இட்லி இன்று தென்னிந்தியாவை, குறிப்பாக தமிழகத்தில் நீக்கமற எங்கும் நிறைந்துள்ளது. எண்ணெய் மற்றும் கொழுப்புச் சத்து இல்லாத ஆரோக்கிய உணவான இட்லியை கொண்டாடுவதில் பெருமை கொள்வோம்.

    MORE
    GALLERIES