முகப்பு » புகைப்பட செய்தி » உலக இட்லி தினம் 2023 : இட்லி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை பற்றி தெரியுமா..?

உலக இட்லி தினம் 2023 : இட்லி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை பற்றி தெரியுமா..?

World Idli Day 2023 : தென்னிந்தியாவை சுற்றிப் பார்க்க வருவோரும் இட்லி சாம்பார் காம்போவை நிச்சயம் சுவைப்பார்கள். ஆனால் ஆவியில் வேக வைத்து எடுக்கப்படும் இட்லி வெறும் சுவை மட்டுமல்ல.. அதில் நன்மைகளும் அடங்கியுள்ளன.

  • 15

    உலக இட்லி தினம் 2023 : இட்லி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை பற்றி தெரியுமா..?

    இட்லி, வடை , சாம்பார்.. இந்த காம்பினேஷன்தான் தென்னிந்திய உணவின் பெஸ்ட் காலை உணவு. அது வெறும் உணவு மட்டுமல்ல.. உணர்வு என்பார்கள் உணவுக் காதலர்கள். அதேபோல் தென்னிந்தியாவை சுற்றிப் பார்க்க வருவோரும் இட்லி சாம்பார் காம்போவை நிச்சயம் சுவைப்பார்கள். ஆனால் ஆவியில் வேக வைத்து எடுக்கப்படும் இட்லி வெறும் சுவை மட்டுமல்ல.. அதில் நன்மைகளும் அடங்கியுள்ளன. அவை என்னென்ன பார்க்கலாம்.

    MORE
    GALLERIES

  • 25

    உலக இட்லி தினம் 2023 : இட்லி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை பற்றி தெரியுமா..?

    உடல் எடையை குறைக்கிறது : சாஃப்ட் மற்றும் உப்பி புஸ் புஸ் என இருக்கும் இட்லி கலோரிகள் குறைவான உணவு. ஊட்டச்சத்து நிபுணர்களும் டயட் லிஸ்டில் இட்லியை சேர்க்கலாம் என பரிந்துரைப்பார்கள். 3 இட்லிகள் சாப்பிட்டாலே போதும் நீண்ட நேரத்துக்கு பசியும் எடுக்காது. இதனால் அடிக்கடி ஏற்படும் பசி உணர்வு இருக்காது.

    MORE
    GALLERIES

  • 35

    உலக இட்லி தினம் 2023 : இட்லி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை பற்றி தெரியுமா..?

    நார்ச்சத்து மற்றும் இரும்பு சத்து நிறைந்தது : இட்லி மாவு நார்ச்சத்து நிறைந்தது என்பதால் செரிமானிக்கவும் எளிதாக இருக்கும். எனவேதான் உடல் நிலை சரியில்லாத போது, காய்ச்சலின் போது இட்லி சாப்பிட கொடுப்பார்கள். அதோடு இதில் இரும்பு சத்தும் உள்ளது.

    MORE
    GALLERIES

  • 45

    உலக இட்லி தினம் 2023 : இட்லி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை பற்றி தெரியுமா..?

    புரதச்சத்து நிறைந்தது : மும்பை கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையின் தலைமை உணவியல் நிபுணர் பக்தி சமந்த், இட்லியின் சில நன்மைகளை india.com உடன் பகிர்ந்து கொண்டுள்ளார். அதில், ” முதல் தர புரதம் விலங்கு மூலங்களிலிருந்து கிடைக்கிறது. அதோடு அதில் உள்ள அமினோ அமிலங்களை உடலால் எளிதாக உறிஞ்சப்படுகிறது. இரண்டாம் தர புரதம் தாவர மூலங்களிலிருந்து கிடைக்கிறது. தானியங்கள் மற்றும் பருப்புகளில் தனித்தனியாக சில அமினோ அமிலங்கள் இல்லாததால், அவை இரண்டாம் தர புரதங்களாகக் கருதப்படுகின்றன. ஆனால், இட்லியுடன் சாம்பார் , வடை என ஒரு கலவையாக எடுத்துக் கொள்ளும்போது, தேவையான அனைத்து அத்தியாவசிய அமினோ அமிலங்களும் பெறப்பட்டு, அது முதல் வகுப்பு புரதத்திற்குச் சமமாகிறது” என்று கூறியுள்ளார்.

    MORE
    GALLERIES

  • 55

    உலக இட்லி தினம் 2023 : இட்லி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை பற்றி தெரியுமா..?

    குடல் ஆரோக்கியத்திற்கு நல்லது: நொதித்தல் செயல்முறை காரணமாக, இட்லி புரோபயாடிக்குகளின் நல்ல மூலமாகும். இதனால் ஒருவரின் குடல் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது. புரோபயாடிக்குகள் நேரடி நுண்ணுயிரிகளாகும், அவை சிறந்த செரிமானம் முதல் உணவில் இருந்து நுண்ணூட்டச்சத்துக்களை மேம்படுத்துதல் வரை பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குவதாக கூறப்படுகிறது.

    MORE
    GALLERIES