புதிதாக திருமணம் செய்து கொண்டவர்கள் சில வாரங்கள் அல்லது மாதங்களுக்கு கர்ப்ப தடை முறைகளை கையாண்டு, வாழ்க்கையை குதூகலமாக கழிக்க விரும்பினாலும், அதற்குப் பிறகு தங்களுக்கு என்று ஒரு குழந்தை வேண்டும் என்ற ஆவல் பிறந்துவிடும். அத்தகைய சூழலில், ஆணுறை போன்ற கர்ப்ப தடை சாதனங்களைத் தவிர்த்து விட்டு, இயற்கையான முறையில் இல்லற வாழ்க்கையை தொடங்குவார்கள்.
சால்மன் மீன் : சால்மன் மீனில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் நிறைந்துள்ளது. தமிழகத்தில் இந்த மீனை காளை கெண்டை என்று குறிப்பிடுகின்றனர். இந்த மீன் சாப்பிடுவதால் உங்களது இனப்பெருக்க நலன் மேம்படும். இதில், மிக அதிகப்படியான புரதம் இருக்கிறது. உடலுக்கு தீங்கு விளைவிக்கும் மெர்க்குரி என்பது ஒருசில மீன்களில் உண்டு என்றாலும், இந்த சால்மன் மீன்களில் அந்தப் பிரச்சனை கிடையாது.
முழு முட்டைகள் : புரதச்சத்து நிரம்பியது என்பதால் கர்ப்பம் தரிப்பதற்கான ஆகச் சிறந்த உணவுகளில் ஒன்றாக முட்டை இருக்கிறது. இதில் விட்டமின் பி12 மற்றும் இ போன்ற சத்துக்களும் நிரம்பியுள்ளன. சிலர் முட்டையின் மஞ்சள் கருவை தூக்கி எறிந்து விடுவார்கள். ஆனால், மஞ்சள் கருவில் தான் நீங்கள் கர்ப்பம் அடைவதற்கான சத்துக்கள் நிரம்பியுள்ளன என்பதை மறக்காதீர்கள்.