சீரான மற்றும் அதிக வேலைகளுக்கு மத்தியில் மூட்டு வலி அல்லது மூட்டு பாதிப்புகள் பலரும் சமாளிக்கும் ஒரு பொதுவான நிலையாக மாறி பல ஆண்டுகள் ஆகிறது. குறிப்பாக குளிர்காலத்தில் மூட்டு வலி மற்றும் மூட்டு விறைப்பு சிக்கல் சிலருக்கு அதிகரிக்கிறது. எனினும் குளிர் சீசனில் வெப்பநிலை கணிசமாக குறைவதால் மூட்டு வலி அல்லது பாதிப்புகள் மோசமடைகிறதா என்பதை தீர்மானிக்க கூடுதல் ஆராய்ச்சி அவசியம் என்கிறார்கள் நிபுணர்கள்.
சரியான மருத்துவ கவனிப்பு, சத்தான ஆகாரங்கள் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை மாற்றங்களை செய்வதன் மூலம் மூட்டு சார்ந்த சிக்கல்களை சமாளிக்கலாம் என்று சிலர் நினைக்கிறார்கள். எனினும் ஆர்த்ரைடிஸ் அல்லது பிற மூட்டு தொடர்பான பிரச்சனைகளை திறம்பட நிர்வகிக்க நிரூபிக்கப்பட்ட டயட் எதுவும் இல்லை என்றாலும் பல உணவுகள் வீக்கத்தை குறைப்பது மற்றும் எலும்புகளை வலுப்படுத்துவது மற்றும் ஒட்டுமொத்த சிறந்த ஆரோக்கியத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்த உணவுகளை அடக்கடி டயட்டில் சேர்த்து கொள்வதன் மூலம் மூட்டு வீக்கத்தை குறைக்கலாம். மூட்டு வலி மற்றும் மூட்டு விறைப்பை குளிர்காலத்தில்ஒருவர் சேர்த்து கொள்ள வேண்டிய உணவுகள் கீழே...
கிரீன் டீ : கிரீன் டீ-யில் பாலிபினால்ஸ், மினரல்ஸ் மற்றும் வைட்டமின்ஸ் உட்பட ஏராளமான ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ்கள் உள்ளன. இவை உட்புற வீக்கம் மற்றும் மூட்டுப்பகுதி தசை குருத்தெலும்பு சிதைவை குறைக்க உதவும். தவிர இந்த டீயில் இருக்கும் எபிகல்லோகேடசின்-3-கேலேட் (EGCG) எனப்படும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் முடக்கு வாதம் (RA) உள்ளவர்களுக்கு மூட்டு சேதத்தை ஏற்படுத்தும் சேர்மங்களின் உற்பத்தியை நிறுத்தலாம் என நிபுணர்கள் கூறுகிறார்கள்.
ஆலிவ் ஆயில் : குளிர்காலத்தில் வெஜிடபிள் ஆயில், சன்ஃபிளவர் ஆயில் மற்றும் பீனட் ஆயில்களை தவிர்க்க வேண்டும், ஏனெனில் இவை அனைத்தும் வீக்கத்திற்கு வழிவகுக்கும். இதற்கு பதில் சாலட் டிரஸ்ஸிங்ஸ் தயார் செய்து, சில டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயுடன் சமையல் செய்யவும். குறைவான ப்ராசஸிங் செய்யப்பட்ட எக்ஸ்ட்ரா விர்ஜின் ஆலிவ் ஆயில் வெரைட்டியை தேர்ந்தெடுக்கவும். இதில் உள்ள பாலிபினால் எக்ஸ்ட்ராக்ட் மூட்டு வீக்கம், செல் மைக்ரேஷன், குருத்தெலும்பு சிதைவு மற்றும் எலும்பு அரிப்பு ஆகியவற்றைக் குறைக்கும். மேலும் ஆலிவ் ஆயில் ஒமேகா 3-ன் மற்றொரு முக்கிய ஆதாரமாகும்.
பூண்டு : பூண்டின் முக்கிய உயிரியக்க கூறான Diallyl disulfide (DADS) அழற்சி எதிர்ப்பு, ஆன்டிஆக்சிடன்ட் , நுண்ணுயிர் எதிர்ப்பு, இருதய பாதுகாப்பு, நரம்பியல் மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு நடவடிக்கைகள் உட்பட பல பயனுள்ள உயிரியல் செயல்பாடுகளைக் கொண்டுள்ளது. ரசம், சூப், சாசேஜ் என பல வகை உணவுகளில் பூண்டுகளை சேர்த்து கொள்ளலாம். அழற்சி எதிர்ப்பு கலவையான Diallyl disulfide பூண்டில் இருப்பதால் அது சைட்டோகைன்ஸ்களின் விளைவுகள் மற்றும் அசௌகரியத்தை குறைக்கலாம்.
பருப்பு வகைகள் மற்றும் பீன்ஸ் : பொதுவாக பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகள் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளாக அறியப்படுகின்றன. இவை அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள், புரோட்டின் மற்றும் ஃபைபர் உள்ளிட்ட பலவற்றின் சிறந்த மூலமாகும். எழும் இவை ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளன. வீக்கத்தை குறைக்கும் தனித்துவ ஃபிளாவனாய்டான அந்தோசயினின்ஸ் (Anthocyanins) கருப்பு பீன்ஸ், பின்டோ பீன்ஸ், கொண்டைக்கடலை மற்றும் பருப்பு உள்ளிட்ட பலவற்றில் உள்ளன.
முழு தானிய உணவுகள் : ரீஃபைன்ட் செய்யப்பட்ட தானியங்களில் (ஒயிட் பிரெட், வெள்ளை அரிசி மற்றும் ரெகுலர் பாஸ்தா போன்றவற்றில்) காணப்படும் புரோட்டின்கள் விளைவாக உடல் வீக்கமடைய கூடும் என ஆராய்ச்சி கூறுகிறது. நார்ச்சத்து உள்ள முழு தானியங்கள் வீக்கத்தைக் குறைக்கும் கொழுப்பு அமிலங்களை உற்பத்தி செய்ய உதவுகின்றன. தொடர்ந்து முழு தானியங்களை சாப்பிடுவது நல்லது.
டார்க் சாக்லேட் : சாக்லேட்டில் இருக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மிக அதிகம். டார்க் சாக்லேட்டில் சேர்க்கப்படும் அடிப்படை மூலப்பொருளான cocoa-வானது இன்சுலின் ரெசிஸ்டென்ஸ் மற்றும் அழற்சிக்கான மரபணு முன்கணிப்பை எதிர்த்துப் போராடும் ஆன்டி-ஆக்சிடென்ட்ஸ்களை கொண்டுள்ளது. எனவே அதிக கோகோ உள்ளடக்கத்துடன் கூடிய சாக்லேட் வலுவான அழற்சி எதிர்ப்பு விளைவை கொண்டுள்ளது. எனினும் சில நேரங்களில் சாக்லேட்டில் கொழுப்பு மற்றும் சர்க்கரை அதிகமாக இருக்கலாம். அவற்றை தவிர்த்து குறைந்தது 70% cocoa உள்ளடக்கம் கொண்ட சாக்லேட்டை தேர்வு செய்யலாம்.