முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » சளி, இருமலுக்கு இந்தியர்கள் செய்யும் வீட்டு வைத்தியம் இதுதான்… உங்களுக்கான 8 வகை பானங்கள்

சளி, இருமலுக்கு இந்தியர்கள் செய்யும் வீட்டு வைத்தியம் இதுதான்… உங்களுக்கான 8 வகை பானங்கள்

Winter Drinks : நாடெங்கிலும் பல்வேறு பிராந்தியங்களில் உள்ள மக்கள் தங்களுக்கே சொந்தமான ஸ்பெஷலான மற்றும் ஆரோக்கியமான பானங்களை தன்வசம் கொண்டுள்ளனர், அவைகள் அனைத்துமே வெவ்வேறு மசாலாப் பொருட்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்றன.

  • 19

    சளி, இருமலுக்கு இந்தியர்கள் செய்யும் வீட்டு வைத்தியம் இதுதான்… உங்களுக்கான 8 வகை பானங்கள்

    குளிர்காலத்தின் கடைசி படிக்கட்டில் நாம் அமர்ந்து இருக்கிறோம். இந்த நேரத்தில் ஒரு சூடான பானத்தை கையில் எடுத்துக்கொண்டு, அதை மெதுவாக குடித்து, நம்மை நாமே சூடேற்றி கொள்வதை விரும்பாத ஆட்களே இல்லை எனலாம்.

    MORE
    GALLERIES

  • 29

    சளி, இருமலுக்கு இந்தியர்கள் செய்யும் வீட்டு வைத்தியம் இதுதான்… உங்களுக்கான 8 வகை பானங்கள்

    இது மட்டுமின்றி, தற்போது நிலவும் கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக நம்மை நாமே ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள சில வீட்டு வைத்தியங்களுக்கான பரிந்துரைகளும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. பொதுவாகவே இந்தியர்கள் மசாலா மற்றும் மூலிகைகளை மிகவும் தனித்துவமாகப் பயன்படுத்துவதில் நிபுணத்துவம் பெற்றவர்கள். உணவு வகைகள் தொடங்கி சூடான பானங்கள் வரை எதிலுமே மசாலா சேர்ப்பதில் இந்தியர்கள் கில்லாடி!

    MORE
    GALLERIES

  • 39

    சளி, இருமலுக்கு இந்தியர்கள் செய்யும் வீட்டு வைத்தியம் இதுதான்… உங்களுக்கான 8 வகை பானங்கள்

    நாடெங்கிலும் பல்வேறு பிராந்தியங்களில் உள்ள மக்கள் தங்களுக்கே சொந்தமான ஸ்பெஷலான மற்றும் ஆரோக்கியமான பானங்களை தன்வசம் கொண்டுள்ளனர், அவைகள் அனைத்துமே வெவ்வேறு மசாலாப் பொருட்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்றன. ஒருவேளை நீங்கள் உங்கள் குளிர்கால இரவுகளை இன்னும் இதமானதாக மாற்ற விரும்பினால் அல்லது ஒரு மந்தமான காலைப் பொழுதை "சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ்" போல ஆரம்பிக்க விரும்பினால், அதற்கு உதவும் சில பிரபலமான பானங்களின் பட்டியல் இதோ:

    MORE
    GALLERIES

  • 49

    சளி, இருமலுக்கு இந்தியர்கள் செய்யும் வீட்டு வைத்தியம் இதுதான்… உங்களுக்கான 8 வகை பானங்கள்

    மசாலா டீ (Masala Tea) : இந்த பட்டியலின் முதல் இடத்தில் அனைவருக்கும் பிடித்த மசாலா டீ உள்ளது. கிராம்பு, இலவங்கப்பட்டை, இஞ்சி, ஜாதிக்காய், துளசி இலைகள் போன்ற மிதமான மசாலாப் பொருட்களின் கலவையில் தயாரிக்கப்படும் இந்த தேநீர் கிட்டதட்ட நாடு முழுவதும் கிடைக்கும் ஒரு பானம் என்பதால் இதற்கு பெரிய அறிமுகம் தேவை இல்லை. அதேபோல இதன் ஆரோக்கிய நன்மைகளை பற்றியும் பெரிய விளக்கம் தேவையில்லை.

    MORE
    GALLERIES

  • 59

    சளி, இருமலுக்கு இந்தியர்கள் செய்யும் வீட்டு வைத்தியம் இதுதான்… உங்களுக்கான 8 வகை பானங்கள்

    ஹல்டி தூத் (Haldi Doodh) : பட்டியலில் அடுத்ததாக உள்ள பானம் ஒவ்வொரு இந்திய குடும்பத்திலும் மிகவும் பொதுவானது மற்றும் கிட்டத்தட்ட அனைத்து இந்தியர்களுமே ஒருமுறையாவது இதை அருந்தி இருப்பார்கள். ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ், ஆன்டி இன்ஃப்ளேமேட்டரி பண்புகள் நிரம்பிய ஹல்டி தூத் தாய்மார்களுக்கு மிகவும் பிடித்த ஒரு வீட்டு வைத்தியம் ஆகும். இது உடல் வலியை குணப்படுத்தும் அதே சமயம் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. தவிர இது தொண்டை புண், சளி இருமல், காய்ச்சல், வைரஸ் தாக்கம் போன்ற பாதிப்புகளையும் சரி செய்யும்.

    MORE
    GALLERIES

  • 69

    சளி, இருமலுக்கு இந்தியர்கள் செய்யும் வீட்டு வைத்தியம் இதுதான்… உங்களுக்கான 8 வகை பானங்கள்

    ரசம் (Rasam) : மிகவும் பாரம்பரியமான ஒரு தென்னிந்திய பானமான ரசம், பூண்டு, ஜீரகம், மிளகு, புளி மற்றும் காய்கறிகளின் ஒரு கலவையாகும், இதில் கடுகு, கறிவேப்பிலையையும் சேர்க்கலாம். குளிர்காலத்திற்கு மிகவும் உகந்த மற்றும் விரும்பத்தக்க இந்த பானத்தில் பல்வேறு மசாலாப் பொருட்கள் சேர்க்கப்படுவதால் இதுதொண்டைப்புண், காய்ச்சல், சளி, இருமல் போன்றவற்றையும் குணப்படுத்துகிறது.

    MORE
    GALLERIES

  • 79

    சளி, இருமலுக்கு இந்தியர்கள் செய்யும் வீட்டு வைத்தியம் இதுதான்… உங்களுக்கான 8 வகை பானங்கள்

    காஷ்மீரி கஹ்வா (Kashmiri Kahwa) : க்ரீன் டீ இலைகள், குங்குமப்பூ, இலவங்கப்பட்டை, ஏலக்காய் மற்றும் உலர் பழங்கள், கிராம்பு ஆகியவைகளை உள்ளடக்கிய இந்த "கிளாசிக்" காஷ்மீரி தேனீர் (கஹ்வா) ஆனது உடலை சூடாக வைத்து இருக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் மிகவும் உதவியாக இருக்கிறது.

    MORE
    GALLERIES

  • 89

    சளி, இருமலுக்கு இந்தியர்கள் செய்யும் வீட்டு வைத்தியம் இதுதான்… உங்களுக்கான 8 வகை பானங்கள்

    மல்லெட் ஒயின் (Mulled Wine) : கோவா மற்றும் கேரளாவில் மிகவும் பொதுவாக உட்கொள்ளப்படும் பிரபலமான கிறிஸ்துமஸ் பானம் தான் - மல்லெட் ஒயின். இது ஜாதிக்காய், இலவங்கப்பட்டை, ஸ்டார் அனிஸ், உலர்ந்த ஆரஞ்சு போன்ற மசாலாப் பொருட்களுடன் ஒயினை கலந்து தயாரிக்கப்படுகிறது. இது சூடாகவும், குளிராகவும் பரிமாறப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 99

    சளி, இருமலுக்கு இந்தியர்கள் செய்யும் வீட்டு வைத்தியம் இதுதான்… உங்களுக்கான 8 வகை பானங்கள்

    பஜ்ரா ராப் (Bajra Raab) : இது ஒரு பிரபலமான ராஜஸ்தானி பானமாகும். இது ஊட்டச்சத்துக்கள், தாதுக்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவும். இது பஜ்ரா (தினை மாவு) நெய், வெல்லம், இஞ்சி மற்றும் கரம் விதைகள் மூலம் தயாரிக்கப்படுகிறது.

    MORE
    GALLERIES