நாம் இப்படி குப்பையில் வீசி எறியும் காலிஃபிளவர் இலைகள் சமைக்க பயன்படுத்தப்பட்ட அந்த காயின் அளவிற்கு சமமாக இருக்கும். ஆனால் இப்படி கழிவு பொருளாக நாம் தூக்கி எறியும் காலிஃபிளவர் இலைகள் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. இது தெரியாமல் நம்மில் பலரும் இவற்றின் ஊட்டச்சத்து திறனை போதுமான அளவு பயன்படுத்தி கொள்ளாமல் இருக்கிறோம். காலிஃபிளவர் இலைகளை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.
ப்ரோட்டீன் நிறைந்தது: காலிஃபிளவர் இலைகளில் ப்ரோட்டீன் மற்றும் மினரல்ஸ் அதிகம் உள்ளன. காலிஃபிளவரில் உள்ளதை விட காலிஃபிளவர் இலைகளில் இரண்டு மடங்கு ப்ரோட்டீன் சத்து உள்ளது. இவை குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு முக்கியமானவை. குழந்தைகளின் உயரம், எடை மற்றும் ஹீமோகுளோபின் வளர்ச்சிக்கு காலிஃபிளவர் இலைகளை அவர்களின் டயட்டில் சேர்ப்பது பெரிதும் உதவுகிறது. தினசரி காலிஃபிளவர் இலைகளை உட்கொள்வது ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இரும்பு சத்து: காலிஃபிளவர் இலையில் இரும்புச் சத்து அதிகம் உள்ளது. 100 கிராம் அளவிலான ஃபிரெஷ்ஷான காலிஃபிளவர் இலைகளில் 40mg இரும்புச் சத்து உள்ளது. மேலும் காலிஃபிளவருடன் ஒப்பிடும் போது அதன் இலைகளில் உள்ள பாஸ்பரஸின் அளவு 2 மடங்கு அதிகம் ஆகும். அதே போல காலிஃபிளவரில் உள்ளதை விட3 மடங்கு மினரல்ஸ்களை காலிஃபிளவர் இலைகள் வழங்குகின்றன.