பேக்கிங் செய்யப்பட்டு வரும், உண்பதற்குத் தயாராக இருக்கும் எந்த உணவும் உங்கள் உடலுக்கு ஆரோக்கியமானது அல்ல. உலகம் வேகமாக சுழலும் காலகட்டத்தில், துரித உணவுகள் மிகப்பெரிய உதவியாக இருக்கின்றது என்ற தோற்றத்தைக் கொண்டுள்ளது. ஆனால், தொடர்ச்சியாக இவ்வகையான உணவை உண்பதால் ஏற்படும் நீண்ட கால உடல் நலக்கோளாறுகளை கவனிக்கத் தவறி விடுகிறோம். நம் உடல் ஆரோக்கியத்தை பல விதமாக பாதிக்ககூடிய, நீண்ட கால நோய்களை உண்டாக்கக் கூடிய உணவுகளில் முக்கியமானது வெள்ளை பிரெட்.
சுவையான வெள்ளை பிரெட் ஆபத்தானது : அவசர நேரத்தில் கைகொடுக்கும் துரித உணவு. சமைக்காமலும் உண்ணலாம். வித விதமாக சமைத்தும் உண்ணலாம். அதிக நேரம் எடுக்காது. காலை நேர உணவாக பெரும்பாலானோர், குறிப்பாக குழந்தைகளும் பிரெட்டை சாப்பிடுகின்றனர். ஜாம் அல்லது சாக்லேட் சாஸ் சேர்த்து கொடுத்தால், குழந்தைகள் எத்தனை பிரெட்டை சாப்பிட்டார்கள் என்ன எண்ணிக்கை கூட மறந்து விடும் அளவுக்கும் பிரெட் விரும்பப் படுகிறது. இல்லத்தரசிகளும், சான்ட்விச், டோஸ்ட் என்பதைத் தவிர்த்து, பிரெட்டை பயன்படுத்தி நம் பாரம்பரிய வழக்கமான உணவு வகைகளை முயற்சி செய்கின்றனர். உதாரணமாக, பிரெட்டை பொறித்து உண்ணும் உணவு வகைகள் கூடுதல் ஆபத்தானவை.
வெள்ளை பிரெட் எப்படி தயாரிக்கப்படுகிறது : வெள்ளை பிரெட் ஏன் ஆபத்தானது என்பதை புரிந்து கொள்ள, அது எப்படி தயாரிக்கப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். மேற்புற தோல் மற்றும் ஜெர்ம் லேயர்கள் நீக்கப்பட்ட கோதுமை மாவிலிருந்து வெள்ளை பிரெட் தயாரிக்கப்படுகிறது. சுத்திகரிக்கப்படாத முழு கோதுமை தான் ஆரோக்கியமானது. ஆனால், பிரெட் தயாரிப்பில், முழு கோதுமை சேர்க்கப்படுவதில்ல்லை.
பிரெட் நீண்ட காலம் கெடாமல் இருப்பதற்காக மாவில் ரசாயனங்கள் சேர்க்கப்பட்டுகிறது. மாவு அரைத்தல், சலித்தல் செயல்முறை, வெள்ளை நிறத்துக்காக பாலீஷ் செய்தல் அல்லது பளபளப்புக்காக ரசாயனம் சேர்த்தல் ஆகியவற்றின் போது, இயற்கையாக அதில் காணப்படும் எண்ணெய், வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துகள் அனைத்தும் நீக்கப்படுகிறது.