முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » அளவுக்கு மீறினால் வெள்ளரிக்காயும் சிக்கல்தான்... இவ்வளவு பக்கவிளைவுகள் இருக்கு!

அளவுக்கு மீறினால் வெள்ளரிக்காயும் சிக்கல்தான்... இவ்வளவு பக்கவிளைவுகள் இருக்கு!

Cucumber | வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் ஏராளமான நன்மைகள் நமக்கு தெரியும். ஆனால், அதனால் ஏற்படும் பக்கவிளைவுகளை பலரும் அறிந்திருப்பதில்லை.

  • 16

    அளவுக்கு மீறினால் வெள்ளரிக்காயும் சிக்கல்தான்... இவ்வளவு பக்கவிளைவுகள் இருக்கு!

    வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் ஏராளமான நன்மைகள் நமக்கு தெரியும். ஆனால், அதனால் ஏற்படும் பக்கவிளைவுகளை பலரும் அறிந்திருப்பதில்லை. அதற்காக வெள்ளரிக்காயை சாப்பிடக்கூடாது என கூறவில்லை. எப்போது சாப்பிட வேண்டும், எவ்வளவு எடுத்துக்கொள்ள வேண்டும் என தெரிந்துகொண்டால், அதனால் ஏற்படும் பக்கவிளைவுகள் வராமல் தடுக்கலாம்.

    MORE
    GALLERIES

  • 26

    அளவுக்கு மீறினால் வெள்ளரிக்காயும் சிக்கல்தான்... இவ்வளவு பக்கவிளைவுகள் இருக்கு!

    இரவு நேரத்தில் சாப்பிட வேண்டாம் : இரவு நேரங்களில் வெள்ளரிக்காய் சாப்பிட வேண்டாம் என பெற்றோரும், தாத்தா, பாட்டியும் கூறுவதை கேட்டிருப்போம். ஆனால், அவர்கள் எதற்காக சொல்கிறார்கள் என ஒருமுறையாவது யோசித்திருக்கிறோமா?. இரவு நேரங்களில் நீங்கள் வெள்ளரிக்காயை சாப்பிட்டால், அது உங்களின் தூக்கத்தையும், ஜீரணிக்கும் சக்தியையும் பாதிக்கும். அதனால், எப்போதும், உறங்க செல்வதற்கு 2 அல்லது 3 மணி நேரங்களுக்கு முன்பாக வெள்ளரிக்காயை சாப்பிடுவது நல்லது. தூங்க செல்வதற்கு முன்பு மற்ற உணவுகளுடன் சேர்த்து வெள்ளரிக்காயை சாப்பிட்டால், ஜீரணிப்பதற்கு நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளும்.

    MORE
    GALLERIES

  • 36

    அளவுக்கு மீறினால் வெள்ளரிக்காயும் சிக்கல்தான்... இவ்வளவு பக்கவிளைவுகள் இருக்கு!

    நீரிழப்பை ஏற்படுத்தும் : உடலில் நீரிழப்பு ஏற்படக் கூடாது என்பதற்காக வெள்ளரிக்காயை சாப்பிடுகிறோம், அதனால் எப்படி நீரிழப்பு ஏற்படும் என நீங்கள் யோசிக்கலாம். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழியை கேள்விபட்டிருப்போம். அதைப்போல், வெள்ளரி விதையில் குக்குர்பிட்டின் (cucurbitin) என்ற மூலப்பொருள் உள்ளது. இதில் டையூரிடிக் பண்பு இருப்பதால் அளவுக்கு அதிகமாக சாப்பிடும்போது உடல் சமநிலையை பாதிப்பு நீரிழப்புக்கு வழிவகுக்கும். வைட்டமின் கே மற்றும் ஆன்டி ஆக்சிடன்டுகள் இருந்தாலும், அதிகமாக வெள்ளரியை உட்கொள்ளும்போது இத்தகைய பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும்.

    MORE
    GALLERIES

  • 46

    அளவுக்கு மீறினால் வெள்ளரிக்காயும் சிக்கல்தான்... இவ்வளவு பக்கவிளைவுகள் இருக்கு!

    வயிறு உப்புசம், வாயு தொல்லை  : ஏற்கனவே வாயு மற்றும் ப்ளோடிங் பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள் சரியான அளவில் வெள்ளரிக்காயை எடுத்துக்கொள்ள வேண்டும். ஏற்கனவே கூறியதுபோல், வெள்ளரி விதையில் இருக்கும் குக்குர்பிட்டின் ஜீரண மண்டலத்தில் செரிமானத்தை பாதித்து, வாயு மற்றும் ப்ளோடிங் பிரச்சனைகளுக்கு வழிவகுத்துவிடும். வெள்ளரி சாப்பிட்டபிறகு உங்கள் வயிற்றில் ஏதாவது அசௌகரியத்தை உணர்ந்தால், நீங்கள் தேவைக்கு அதிகமான வெள்ளரிக்காயை எடுத்து இருக்கிறீர்கள் என்பதை அறிந்துகொள்ளலாம்.

    MORE
    GALLERIES

  • 56

    அளவுக்கு மீறினால் வெள்ளரிக்காயும் சிக்கல்தான்... இவ்வளவு பக்கவிளைவுகள் இருக்கு!

    சைனஸ் பிரச்சனை : வெள்ளரிக்காய் உடலை குளிர்விக்கும் உணவு பொருளாகும். ஏற்கனவே நாள்பட்ட சைனஸ் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி வெள்ளரிக்காயை சாப்பிடுவது நல்லது. இல்லையென்றால் உங்களின் சைனஸ் தொல்லை மேலும் அதிகமாகி, வேண்டாத தொந்தரவுகளை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவீர்கள். பொதுவாக, சைனஸ் பிரச்சனைகள் இருப்பவர்கள் குளிர்ச்சியாக இருக்கும் உணவுகளை தவிர்ப்பது சிறந்தது.

    MORE
    GALLERIES

  • 66

    அளவுக்கு மீறினால் வெள்ளரிக்காயும் சிக்கல்தான்... இவ்வளவு பக்கவிளைவுகள் இருக்கு!

    தோல் ஒவ்வாமை : வெள்ளரிக்காயில் இருக்கும் குக்குர்பிட்டின் என்சைம் சிலருக்கு தோல் சார்ந்த ஒவ்வாமைகளை ஏற்படுத்தலாம். அமெரிக்கன் அகாடமி ஆப் அலர்ஜி நடத்திய ஆய்வில் வெள்ளரிகாய், முலாம்பழம், சூரியகாந்தி விதைகள் ஆகியவற்றை சாப்பிடும்போது ஏதாவது தோல் சார்ந்த பிரச்சனைகளை எதிர்கொண்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என பரிந்துரைத்துள்ளது.

    MORE
    GALLERIES