முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » World Breastfeeding Week 2021 : ‘இனியும் தயங்காதீங்க’ | பால் அல்ல… குழந்தைகளின் உயிர்காக்கும் மருந்து… உயிர்காக்கும் ‘தாய்ப்பால் வங்கி’ குறித்து தெரியுமா?

World Breastfeeding Week 2021 : ‘இனியும் தயங்காதீங்க’ | பால் அல்ல… குழந்தைகளின் உயிர்காக்கும் மருந்து… உயிர்காக்கும் ‘தாய்ப்பால் வங்கி’ குறித்து தெரியுமா?

பால் தானம் செய்ய வரும் பெண்களிடம் இருந்து பால் சேகரிக்கும் முன்பு அவர்களை நன்கு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே பால் வங்கிகளுக்கு அனுப்படுகின்றனர்.

  • 16

    World Breastfeeding Week 2021 : ‘இனியும் தயங்காதீங்க’ | பால் அல்ல… குழந்தைகளின் உயிர்காக்கும் மருந்து… உயிர்காக்கும் ‘தாய்ப்பால் வங்கி’ குறித்து தெரியுமா?

    தாய்ப்பால் என்பது தாய்க்கும் சேய்க்குமான ஒரு உறவுப்பாலம் என்றே சொல்லலாம். அது, குழந்தைகளுக்கான முதல் தடுப்பு மருந்து; குழந்தைகளுக்கான ஓர் தன்னிகரற்ற உணவும் கூட. உலக தாய்ப்பால் வாரம் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 7ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இதன் நோக்கம், தாய்ப்பால் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தாய்ப்பாலின் முக்கியத்துவம், உன்னதம் குறித்து எடுத்துரைக்கும் வகையிலும் உலக சுகாதார அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் உலக தாய்ப்பால் வாரத்தை கடைப்பிடிக்கிறது. குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்துக்குள் தாய்ப்பால் கொடுக்க வேண்டியது தாயின் முழுமுதல் கடமை. இது 22 சதவீத பிரசவத்துக்குப் பிந்தைய குழந்தை இறப்புகளை தடுக்கும் என்பது ஒரு ஆய்வின் தகவல் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

    MORE
    GALLERIES

  • 26

    World Breastfeeding Week 2021 : ‘இனியும் தயங்காதீங்க’ | பால் அல்ல… குழந்தைகளின் உயிர்காக்கும் மருந்து… உயிர்காக்கும் ‘தாய்ப்பால் வங்கி’ குறித்து தெரியுமா?

    முழுமையாக ஒரு வருடத்திற்கு தாய் தனது குழந்தைக்கு பாலூட்ட வேண்டும். இரத்த தானம் போலவே தாய்ப்பாலையும் தானமாக முன்வந்து அளிக்கும் பெண்கள் பற்றியும், ‘ஹியூமன் மில்க் பேங்க்’-ன் மகத்துவம் பற்றியும் மருத்துவர்கள் கூற கேட்போம். இந்தியாவில் சராசரியாக 45% குழந்தைகளுக்கு மட்டுமே பிறந்த ஒரு மணிநேரத்தில் தாய்ப்பால் ஊட்டப்படுகிறதாம். 60% குழந்தைகளுக்கு மட்டுமே 6 மாதம் வரை தாய்மார்கள் தாய்ப்பால் ஊட்டுகின்றனர் என்கிற அதிர்ச்சி தகவலும் உண்டு.

    MORE
    GALLERIES

  • 36

    World Breastfeeding Week 2021 : ‘இனியும் தயங்காதீங்க’ | பால் அல்ல… குழந்தைகளின் உயிர்காக்கும் மருந்து… உயிர்காக்கும் ‘தாய்ப்பால் வங்கி’ குறித்து தெரியுமா?

    ‘ஹ்யூமன் மில்க் பேங்க்’ (Human Milk Bank): பிறந்த குழந்தைக்கு அடிப்படையான உணவு தாய்ப்பால். இனம்புரியாத ஒரு சூழலில் சில தாய்மார்களுக்குப் பால் அதிகமாகச் சுரக்காமல் போகும் நிலையிலும், பிரசவத்தின்போது தாய் இறப்பதால் தவிக்கும் குழந்தைக்கு பால் கிடைக்காத நிலையையும் சமாளிக்க 2014ஆம் ஆண்டில் ‘ஹ்யூமன் மில்க் பேங்க்’ (Human Milk Bank) திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகள் பெரிதும் பயனடைந்து வருகிறார்கள். உலகிலேயே மிக சிறந்த மருந்தும், மிக அதிக ஊட்டசத்தும், கலப்படமின்றியும் கிடைக்கும் ஒரே உணவு தாய்ப்பால் மட்டுமே. ஹ்யூமன் மில்க் பேங்க் தொடங்க காரணம், பொதுவாகவே 20-25% குழந்தைகள் இரண்டரை கிலோவுக்கும் குறைவாக பிறக்கின்றனர். மேலும், மற்ற 20-25% குறைப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகள் தாயின் மார்புகளின் பால் சப்புவதற்கான சத்து இன்மையால் தாய்க்கு பால்கட்டும் நிலைமையும் ஏற்படுகிறது. மேலும், சில நேரங்களில் சில தாய்மார்களுக்குப் பால்அதிகமாகச் சுரக்காமல் போகும் நிலையும் ஏற்படும். எனவே, இந்த இருநிலைகளை சமாளிக்க மருத்துவமனைகளில் பால் வங்கி தொடங்குவதே இதற்கு சரியான தீர்வாக இருக்க முடியும் என்பதை உணர்ந்ததால் இந்த ஹ்யூமன் மில்க் பேங்க் தொடங்கப்பட்டது. தமிழகத்தில் 50க்கும் மேற்பட்ட பால் வங்கிகள் இயங்குகின்றன.

    MORE
    GALLERIES

  • 46

    World Breastfeeding Week 2021 : ‘இனியும் தயங்காதீங்க’ | பால் அல்ல… குழந்தைகளின் உயிர்காக்கும் மருந்து… உயிர்காக்கும் ‘தாய்ப்பால் வங்கி’ குறித்து தெரியுமா?

    ‘ஹ்யூமன் மில்க் பேங்க்’ எவ்வாறு செயல்படுகிறது? பால் தானம் செய்ய வரும் பெண்களிடம் இருந்து பால் சேகரிக்கும் முன்பு அவர்களை நன்கு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே பால் வங்கிகளுக்கு அனுப்படுகின்றனர். பால் சேகரித்த பின்னர் அந்த பாலை பரிசோதித்த பின் பதப்படுத்தப்படுகிறது. பதப்படுத்தப்பட்ட பின் குழந்தைக்கு தரப்படுவதால் ஒருசில சத்துக்கள் குறைந்தாலும் அவைகளுக்கு தேவையான அடிப்படை ஊட்டசத்துக்கள் கிடைக்கின்றன. பிறந்தவுடன் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதில் இந்தியா இன்றும் பின்தங்கியுள்ளது. ஏனென்றால், நம் வாழ்க்கை நாமரிகமடைந்ததே காரணம். ஒரு தாய்க்கு, குழந்தைக்கு பால் கொடுக்கவேண்டும் என்கிற ஆர்வமும், மகிழ்ந்திருத்தலும், நல்ல உணவு பழக்கமுமே பாலை நன்கு சுரக்கவைக்கிறது. தாய்ப்பால் ஊட்டுதலில் முன்னோடிகளாக ஜிப்ஸிகள் திகழ்கின்றனர். ஏனென்றால், அவர்கள் சத்தான உணவை உட்கொள்ளாமல் இருந்தும் கூட பாலூட்ட வேண்டும் என்கிற மிகுதியான ஆர்வமே பால் நன்றாக சுரக்கவைக்கிறது. 2019ஆம் ஆண்டு தரவின்படி தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களிலுள்ள மாவட்ட மருத்துவமனைகளில் தாய்ப்பால் வங்கி உள்ளது. சென்னையில் மட்டும் 5 இடங்களில் தாய்ப்பால் வங்கி உள்ளது. தீவிர சிகிச்சை தேவைப்படும் பச்சிளம் குழந்தைகளுக்கு கண்டிப்பாக தாய்ப்பால் அவசியமாகிறது. கொரோனா காலகட்டம் என்பதால் நன்கு பரிசோதனைக்குப் பின் தாய்மார்களிடமிருந்து பெறப்படும் தாய்ப்பால், பதப்படுத்தப்படுகிறது. ஆறு மாதம் வரை கூட அதனை பதப்படுத்த முடியும் என்கின்றனர் மருத்துவர்கள். ஒருவரிடமிருந்து, பெறப்படும் பால் முழுமையான பரிசோதனைகளுக்குப் பிறகே குழந்தைகளுக்கு கொடுக்கப்படுகிறது. அதனால், நோய்த் தொற்று குறித்த அச்சம் இல்லை.

    MORE
    GALLERIES

  • 56

    World Breastfeeding Week 2021 : ‘இனியும் தயங்காதீங்க’ | பால் அல்ல… குழந்தைகளின் உயிர்காக்கும் மருந்து… உயிர்காக்கும் ‘தாய்ப்பால் வங்கி’ குறித்து தெரியுமா?

    தாய்ப்பால் வங்கி எனும் வரப்பிரசாதம்: தாய்ப்பால் கொடுப்பதனால் ஏற்படும் இமாலய நன்மைகளுள் ஒன்று ஊட்டச்சத்து மிகுந்த உணவு குழந்தைக்கு போய்ச்சேரும், தாய்-சேய் பிணைப்பு ஊக்குவிக்கப்படுகிறது. 6 மாதங்களாவது முழுக்க முழுக்க தாய்ப்பால் கொடுக்க வேண்டியது கடமை. குழந்தையின் எடையை அதிகரிக்க உதவும், குழந்தைகளின் வாழ்வாதாரத்தை கட்டமைக்கும் பங்கும் தாய்ப்பாலுக்கு உண்டு. மேலும், பொது இடங்களில் தாய்மார்கள் குழந்தைக்கு பாலூட்ட ஆங்காங்கே பாலூட்டும் மையங்கள் 4 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. பொதுவாக தாய்மார்கள் பாலூட்ட சிரமப்படுவதற்கு காரணம், ஆடையை மிக இறுக்கமாக அணிவதே. எனவே, ஆடையை இறுக்கமாக அணிவதை தவிர்த்து, தளர்வான ஆடைகளை அணிந்தால் சிரமமின்றி குழந்தைக்கு பாலூட்ட முடியும். எப்படி இரத்தத்தை செயற்கையாக தயாரிக்க முடியாதோ, அதேபோல தாய்ப்பாலையும் முழுமையாக செயற்கை முறையில் தயாரிக்க முடியாது. அதாவது, முழுமை எனப்படுவது தாய்ப்பாலில் இருக்கக்கூடிய பந்தம், அதில் இருக்கக்கூடிய இயற்கையான நோய் எதிர்ப்பு எந்த பாலிலும் கிடையாது. குழந்தைக்கு தாய்ப்பால் எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்கு குழந்தைக்கு பாலூட்டுவதும் தாய்க்கு மிக முக்கியம். தாய்ப்பால் ஊட்டாத பெண்களுக்கு கர்ப்பப்பை மற்றும் மார்பக புற்றுநோய் வரும் அபாயம் அதிகமாக உள்ளது.

    MORE
    GALLERIES

  • 66

    World Breastfeeding Week 2021 : ‘இனியும் தயங்காதீங்க’ | பால் அல்ல… குழந்தைகளின் உயிர்காக்கும் மருந்து… உயிர்காக்கும் ‘தாய்ப்பால் வங்கி’ குறித்து தெரியுமா?

    தாய்ப்பால் ஊட்டுவதற்கு தடையாக இருக்கும் சில காரணங்கள்: தாய்ப்பால் ஊட்டும் தாயின் சத்து குறைபாடு, பொது இடங்களில் தாய்ப்பால் ஊட்டுவதற்கு கூச்சப்படுவது, வேலைக்கு செல்லும் தாய்மார்களின் குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்ட நேரமின்மை, தாய்ப்பால் ஊட்டுவதை ஓரிருமாதங்களில் விட்டுவிடுவது, தாய்ப்பால் பற்றி சரியான விழிப்புணர்வு இல்லாமல் இருப்பது ஆகும். குழந்தைக்கு இரண்டு மணிநேரத்திற்கு ஒருமுறை தாய்ப்பால் தரவேண்டும். பால் சுரக்கும் நேரங்களில் தாய்க்கு அதிகச்சத்து தேவைப்படுகிறது என்பதனால் அதிக பழங்கள், பச்சை காய்கறிகள், கீரைகள், பால், தண்ணீர் போன்றவற்றை சரியான விகிதத்தில் எடுத்துக் கொள்ளவேண்டும். தாய்ப்பால் அழகை குறைக்காது; அழகை கூட்டும் என்பதை தாய்மார்கள் புரிந்துகொள்ள வேண்டும். தன்னலமின்றி உதவிக்கரங்கள் நீட்டும் மனம் கொண்ட கொடையாளர்களை போற்றுவோம்.

    MORE
    GALLERIES