முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » முட்டையில் இத்தனை வகையாக சமைக்கலாமா..!! டயட் இருப்போர் இதை டிரை பண்ணலாம்..

முட்டையில் இத்தனை வகையாக சமைக்கலாமா..!! டயட் இருப்போர் இதை டிரை பண்ணலாம்..

நீங்கள் சுவையான ஆம்லெட்டை சாப்பிட்ட வேண்டுமானால், பொதுவாக அதன் சுவையை அதிகரிக்க அதில் நிறைய வெண்ணெய் பயன்படுத்துவீர்கள். இது உங்கள் எடை இழப்பு திட்டங்களை சீரழிக்கும் வகையில் அமையும்.

 • 17

  முட்டையில் இத்தனை வகையாக சமைக்கலாமா..!! டயட் இருப்போர் இதை டிரை பண்ணலாம்..

  உடல் எடையை குறைப்பதற்கு, முட்டை உங்களுக்கு சிறந்த உணவாக இருக்கும். முட்டைகள் நம் உடலின் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதோடு, நீண்ட நேரம் நம் பசியை போக்க வல்லது என ஆராய்ச்சிகள் கூறுகிறது. நம் காலை உணவில் முட்டைகளைச் சேர்த்துக்கொள்வதால், தினசரி நாம் கூடுதல் கலோரிகள் உட்கொள்வதைத் தடுக்கவும் இது உதவும். பிரபலங்கள், நடிகர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் தங்கள் உணவில் குறிப்பாக காலை உணவிற்கு முட்டைகளை சேர்த்து கொள்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.

  MORE
  GALLERIES

 • 27

  முட்டையில் இத்தனை வகையாக சமைக்கலாமா..!! டயட் இருப்போர் இதை டிரை பண்ணலாம்..

  நீங்கள் சுவையான ஆம்லெட்டை சாப்பிட்ட வேண்டுமானால், பொதுவாக அதன் சுவையை அதிகரிக்க அதில் நிறைய வெண்ணெய் பயன்படுத்துவீர்கள். இது உங்கள் எடை இழப்பு திட்டங்களை சீரழிக்கும் வகையில் அமையும். தற்போது ஒரு துளி எண்ணெய் கூட பயன்படுத்தாமல், சுவையான முட்டை ரெசிபிகளை வீட்டிலேயே நம்மால் தயார் செய்ய முடியும். இதுபோன்ற சுவையான மற்றும் ஆரோக்கியமான ரெசிபிகளை பற்றி இதில் பார்ப்போம்.

  MORE
  GALLERIES

 • 37

  முட்டையில் இத்தனை வகையாக சமைக்கலாமா..!! டயட் இருப்போர் இதை டிரை பண்ணலாம்..

  வேகவைத்த முட்டைகள் : வேகவைத்த முட்டைகள் நாம் தயாரிக்கும் எளிதான முட்டை ரெசிபிகளில் ஒன்றாகும். இவற்றில் புரதம் அதிகமாகவும் கலோரிகள் குறைவாகவும் இருக்கும். இருப்பினும், இது போன்ற ரெசிப்பிகள் சலிப்பாக இருந்தால், இதனுடன் நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி இலைகள், ஆர்கனோ மற்றும் அரைத்த சிவப்பு மிளகாய் தூவி சாப்பிடலாம்.வேகவைத்த முட்டைகளை இரண்டு பகுதிகளாக வெட்டி, மஞ்சள் கருவை வெளியே எடுத்துவிட்டு, சிறிது பால், பனீர் மற்றும் மசாலா சேர்த்து பிசைந்து கொள்ளவும். இந்த சுவையான மஞ்சள் கரு கலவையை முட்டையின் வெள்ளை கருவிற்குள் சேர்க்கவும் இதோ சுவையான முட்டை தயார்.

  MORE
  GALLERIES

 • 47

  முட்டையில் இத்தனை வகையாக சமைக்கலாமா..!! டயட் இருப்போர் இதை டிரை பண்ணலாம்..

  கிரீமி-வடிவிலுள்ள முட்டைகள் : நீங்கள் ஒரு மஞ்சள் கருவை சாப்பிட்ட விரும்பினால், உங்கள் உணவில் எண்ணெய் இல்லாத முட்டைகளை பயன்படுத்த இது ஒரு சிறந்த வழியாகும். அவற்றை வெறும் 5 நிமிடங்களில் தயார் செய்யலாம். ஒரு ஆரோக்கியமான காலை உணவுக்கு ஒரு துண்டு பிரவுன் அல்லது மல்டிகிரேன் ரொட்டியுடன் வெள்ளை மற்றும் மஞ்சள் கரு என இரண்டையும் சேர்த்துக்கொள்வது அவசியம். முட்டையிலுள்ள, மஞ்சள் கருவை சிதைக்காமல் ஒரு சிறிய கிண்ணத்தில் சேர்க்கவும். ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீரை கொதிக்க வைத்து அதில் சிறிது உப்பு மற்றும் வினிகர் சேர்க்கவும். இப்போது மஞ்சள்கரு நீக்கப்பட்ட முட்டையை தண்ணீரில் போடவும். சில நிமிடங்களில், முட்டை மேலே மிதந்து, மேகம் போன்ற வடிவத்தில் காணப்படும். அதை தண்ணீரில் இருந்து எடுத்து உடனடியாக பரிமாறவும்.

  MORE
  GALLERIES

 • 57

  முட்டையில் இத்தனை வகையாக சமைக்கலாமா..!! டயட் இருப்போர் இதை டிரை பண்ணலாம்..

  முட்டைகளை பேக்கிங் செய்தல் : சாதாரணமாக முட்டைகள், உப்புடன் ஒட்டாமல் இருந்தால் பேக்கிங் செய்த முட்டைகள் நன்றாக இருக்கிறது என்று தெரிந்துகொள்ளலாம். அடுப்பில் அடிப்பகுதி கனமாக இருக்கும் கிண்ணத்தை வைத்து அதில் முட்டைகளை ஊற்றவும். பின் நறுக்கிய வெங்காயம், தக்காளி, மிளகுத்தூள் அல்லது உங்களுக்கு விருப்பமான காய்கறிகளைச் சேர்க்கவும். பின் சிவப்பு மிளகாய், ஆர்கனோ, மிளகு தூள் மற்றும் உப்பு போன்ற மசாலாப் பொருட்களை தேவைக்கேற்ப சேர்க்கவும். இப்போது அதை 5-10 நிமிடங்கள் அடுப்பில் அப்படியே வைத்து பின் வேறொரு பாத்திரத்தில் மாற்றி பரிமாறவும். உங்கள் சுவையான முட்டைகள் தயார்!

  MORE
  GALLERIES

 • 67

  முட்டையில் இத்தனை வகையாக சமைக்கலாமா..!! டயட் இருப்போர் இதை டிரை பண்ணலாம்..


  ஆம்லெட்டை வேகவைத்தல் : ஒரு துளி எண்ணெய் அல்லது வெண்ணெய் பயன்படுத்தாமல் சுவையான ஆம்லெட்டை வேகவைக்கலாம். இந்த செய்முறையில், அடுப்பில் ஒரு கடாயில் தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் சிறிது வினிகர் சேர்க்கவும். முட்டைகளை கொதிக்கும் நீரில் போட்டு அதில் சுவைக்கு தகுந்தபடி உப்பு சேர்க்கவும். முட்டைகள் கொதிக்கும் நீரில் மிதப்பதை நீங்கள் பார்க்கலாம். இதை அப்படியே சிறிது நேரம் வேக வைத்து பின் எடுக்கவும்.பிறகு அதன் மேல் நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி இலைகள் தூவலாம். குறைந்த கலோரியுடைய ஆம்லெட் காலை உணவுக்கு தயாராக உள்ளது.

  MORE
  GALLERIES

 • 77

  முட்டையில் இத்தனை வகையாக சமைக்கலாமா..!! டயட் இருப்போர் இதை டிரை பண்ணலாம்..

  ஈஸியான முட்டை துருவல் : பல வகையான சுவையான துருவல் முட்டைகள், நிறைய வெண்ணெய் அல்லது தேசி நெய் சேர்த்து தான் தயாரிக்கப்படுகின்றன. தற்போது இந்த ரெசிப்பியை எண்ணெய் பயன்படுத்தாமல் செய்யலாம் வாருங்கள். அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் சிறிதளவு தண்ணீர், 2 முட்டை மற்றும் 3 தேக்கரண்டி பால் சேர்த்து, முட்டைகள் கிரீமியாக மாறும் வரை அனைத்து பொருட்களையும் நன்றாக கலக்கவும். முட்டைகள் ஏறக்குறைய வெந்துவிட்டதாக தோன்றும்போது நீங்கள் அடுப்பை அணைக்கலாம், ஏனெனில் அடுப்பு அணைக்கப்பட்ட பின்பும் அந்த உணவு தொடர்ந்து சமைக்கப்படும். உப்பு மற்றும் மிளகு சுவைக்கு ஏற்ப சேர்க்கவும். உங்கள் துருவல் முட்டைகளை காய்கறிகளால் செய்யப்பட்ட சாலட்டுடன் சேர்த்து சாப்பிடலாம்.

  MORE
  GALLERIES