ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » அரிசி சாதத்தை இப்படி எல்லாம் கூட சமைக்கலாமா..? சுவையை அதிகரிக்க டிப்ஸ்...

அரிசி சாதத்தை இப்படி எல்லாம் கூட சமைக்கலாமா..? சுவையை அதிகரிக்க டிப்ஸ்...

நான் அன்றாடம் வீட்டில் சமைக்கும் அரிசி சாதத்தில் சில குறிப்பிட்ட பொருட்களை சேர்ப்பதன் மூலமும், சில குறிப்பிட்ட முறைகளை பயன்படுத்தியும் அரிசி சாதத்தின் சுவையைக் கூட்டுவதோடு உடலுக்கு ஆரோக்கியமாகவும் மாற்ற முடியும்.

 • 18

  அரிசி சாதத்தை இப்படி எல்லாம் கூட சமைக்கலாமா..? சுவையை அதிகரிக்க டிப்ஸ்...

  இந்தியாவில் பெரும்பாலும் அனைத்து குடும்பங்களிலும் அரிசி உணவு தான் முக்கிய உணவாக விரும்பப்படுகிறது. ஆனால் பல காலமாக ஒரே சுவையுடனும் ஒரே விதமாகவும் பரிமாறப்படும் இந்த உணவு சிலருக்கு சலிப்பையும் வெறுப்பையும் ஏற்படுத்தலாம். அந்த வகையில் சில சமையல் முறைகளின் மூலம் இந்த அரிசி உணவில் சுவையையும் ஆரோக்கியத்தையும் அதிகரிக்க செய்யலாம்.

  MORE
  GALLERIES

 • 28

  அரிசி சாதத்தை இப்படி எல்லாம் கூட சமைக்கலாமா..? சுவையை அதிகரிக்க டிப்ஸ்...

  காய்கறி கழிவுகளை பயன்படுத்தலாம் ; பெரும்பாலான வீடுகளில் சமைக்கும்போது காய்கறியின் மேல் தோலை நீக்கி அவற்றை குப்பையில் தான் போடுகின்றனர்.. ஆனால் அந்தத் தோலையே நீங்கள் அரிசி அல்லது சாதம் வடித்த கஞ்சியுடன் சேர்த்து வகையாக சேர்த்து சூப் செய்யலாம். குழம்புகளிலும் இந்த காய்கறி தோலை சேர்க்கலாம். இப்படிப்பட்ட காய்கறி கழிவுகளை உணவில் சேர்த்துக் கொள்ளும்போது அவை அதிலுள்ள ஊட்டச்சத்துக்களை அதிகப்படுத்தி உடலுக்கு ஆரோக்கியத்தை கூட்டுகின்றன.

  MORE
  GALLERIES

 • 38

  அரிசி சாதத்தை இப்படி எல்லாம் கூட சமைக்கலாமா..? சுவையை அதிகரிக்க டிப்ஸ்...

  கருவேப்பிலை மசாலா :  காய்ந்த கருவேப்பிலைகள், துவரம் பருப்பு, கருப்பு மிளகு, உப்பு, காய்ந்த மிளகாய், கொத்தமல்லி விதைகள், உலர் மாம்பழத் தூள், சீரகம் இவற்றுடன் நெய் சேர்த்து வதக்க வேண்டும். பின்பு அரிசி சாதம் சமைக்கும் போது அதனோடு இந்த மசாலாவை சேர்த்து சமைக்கும் போது சுவை கூடுதலாக இருக்கும்.

  MORE
  GALLERIES

 • 48

  அரிசி சாதத்தை இப்படி எல்லாம் கூட சமைக்கலாமா..? சுவையை அதிகரிக்க டிப்ஸ்...

  எலுமிச்சை சாறு : நீங்கள் சாதம் சமைக்கும் போது அதனுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்க்கலாம். இது அரிசிக்கு உறுதி தன்மையை அதிகரிப்பதோடு ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொள்ளாமலும் பார்ப்பதற்கு அழகாகவும் இருக்கும்.

  MORE
  GALLERIES

 • 58

  அரிசி சாதத்தை இப்படி எல்லாம் கூட சமைக்கலாமா..? சுவையை அதிகரிக்க டிப்ஸ்...

  கரம் மசாலா: சிறிதளவு கரம் மசாலா எடுத்துக்கொண்டு அதனை எண்ணெய் அல்லது நெய்யில் சேர்த்து வதக்கி அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்க்க வேண்டும். பின்பு அரிசியை சமைக்கும் போது அதனோடு இந்த மசாலாவை சேர்த்தால் வித்தியாசமான அதேசமயம் விரும்பத்தக்க சுவையோடு இருக்கும்.

  MORE
  GALLERIES

 • 68

  அரிசி சாதத்தை இப்படி எல்லாம் கூட சமைக்கலாமா..? சுவையை அதிகரிக்க டிப்ஸ்...

  பச்சை பட்டாணி மற்றும் சோளம்: அரிசி சமைக்கும்போது அதனுடன் பச்சை பட்டாணி மற்றும் சோளம் ஆகியவற்றை சேர்த்து சமைக்கலாம். பார்ப்பதற்கு கலர்ஃபுல்லாகவும் அதே சமயம் உடலுக்கு ஊட்டச்சத்துநிறைந்தும் இருக்கும்.

  MORE
  GALLERIES

 • 78

  அரிசி சாதத்தை இப்படி எல்லாம் கூட சமைக்கலாமா..? சுவையை அதிகரிக்க டிப்ஸ்...

  சர்க்கரை மற்றும் மசாலா சேர்க்கலாம் : சிறிது எண்ணெய் அல்லது நெய்யை கடாயில் விட்டு அதோடு சிறிதளவு சர்க்கரை சேர்க்க வேண்டும். பிறகு அதனுடன் நட்சத்திர சோம்பு, ஏலக்காய், இலவங்க பட்டை, கிராம்பு ஆகியவற்றை சேர்த்து வளர்க்க வேண்டும். சர்க்கரை உருகி அந்த மசாலா பொருட்களுடன் நன்றாக கலக்கும் வரை இதனை வதக்க வேண்டும் பின்பு இதனுடன் ஊறவைத்த அரிசியை சேர்த்து சமைக்க வேண்டும். இறுதியில் அரிசியானது பழுப்பு நிறமாகவும் அதேசமயம் சுவையாகவும் இருப்பதை உணரலாம்.

  MORE
  GALLERIES

 • 88

  அரிசி சாதத்தை இப்படி எல்லாம் கூட சமைக்கலாமா..? சுவையை அதிகரிக்க டிப்ஸ்...

  வெங்காயம் மற்றும் பூண்டு : ஒரே விதமான அரிசி சாதத்தை உண்டு வெறுத்துப் போனவர்களுக்கு வறுத்த பூண்டு அல்லது வெங்காயம் சேர்த்து அரிசியை சமைக்கலாம். வேண்டும் என்றால் தேவையான அளவு உப்பு மற்றும் மிளகுத்தூள் மேலே தூவி விட்டு சமைக்கலாம். இந்த அரிசி சாதமானது அனைத்து விதமான குழம்புகளுக்கும் ஏற்றதாக இருக்கும். முக்கியமாக மசாலாக்கள் நிறைந்த உணைவை விரும்புபவர்களுக்கு பிடித்தமான ஒரு உணவாக இறக்கும்.

  MORE
  GALLERIES