தர்பூசணிகள் அதிக வாட்டர் கன்டென்ட்-ஐ கொண்டிருக்கும் என்பதைத் தவிர, அது ஊட்டச்சத்துக்கள், ஆன்டிஆக்ஸிடென்ட்கள் மற்றும் வைட்டமின் ஏ மற்றும் சி ஆகியவற்றாலும் நிரம்பியுள்ளன. இது எல்லாவற்றை விடவும் மிகவும் சுவாரசியமான விடயம் என்னவென்றால், நம் நாட்டில் சுமார் 25 வகை தர்பூசணிகள் விளைகின்றன என்பது தான்! ஆம், நீங்கள் கேட்டது சரிதான். உத்தரப்பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான், ஒரிசா, குஜராத், பஞ்சாப், ஹரியானா, அசாம், மேற்கு வங்காளம், கர்நாடகா, ஒரிசா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய சில மாநிலங்களில் மட்டுமே தர்பூசணிகள் பயிரிடப்படுகின்றன. அதில் மிகவும் முக்கியமான சில வகை தர்பூசணிகளைப் பற்றி இங்கே பார்ப்போம்:
அர்கா முத்து (Arka Muthu) : ஆரம்ப காலத்திலேயே முதிர்ச்சியடையும் தன்மை கொண்ட இந்த வகை தர்பூசணி ஆனது பொதுவாக 75-80 நாட்களில் பழுத்து விடும். இந்த வகை தர்பூசணி ஆனது ஓவல் மற்றும் வட்ட வடிவங்களில் வளரும் மற்றும் அடர் சிவப்பு நிறத்துடன் அடர் பச்சை நிற பட்டையுடன் வளரும். அர்கா முத்து தர்பூசணி ஆனது சராசரியாக, 2.5 முதல் 3 கிலோ வரை எடையும், அதன் சர்க்கரை உள்ளடக்கம் 12 முதல் 14 பிரிக்ஸ் வரையும் இருக்கும்.
அர்கா ஆகாஷ் (Arka Akash) : அர்கா ஆகாஷ் என்பது அதிக மகசூல் தரும் வகையாகும், இந்த கலப்பின வகை ஆனது பொதுவாக வட்டமானது முதல் ஓவல் வரையிலான வடிவத்தில் வளரும், இதன் தோல் வெளிர் பச்சை நிறத்தில் கரும் பச்சை நிற கோடுகளுடன் இருக்கும் மற்றும் இதன் சதைப்பகுதி அடர் சிவப்பு நிறத்தில் இருக்கும், இது வழக்கமாக 90 முதல் 95 நாட்களில் பழுக்கும். மேலும் இதன் சர்க்கரை அளவு 12 பிரிக்ஸ் ஆகும்.
அர்கா மாணிக் (Arka Manik) : 4-6 கிலோ எடை வரை வளரும் அர்கா மானிக் தர்பூசணி ஆனது கரும் பச்சை நிற கோடுகளுடன் வெளிர் பச்சை நிற தோலையும், ஓவல் வடிவத்தையும் கொண்டுருக்கும். இதன் சதை கருஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். அர்கா மாணிக்கில் சர்க்கரை அளவு 12 முதல் 15 பிரிக்ஸ் வரை என மிகவும் அதிகமாக இருக்கும்.