The Conversation இன் அறிக்கையின்படி, உலகெங்கிலும் உள்ள உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளும் கட்டுப்பாட்டாளர்களும் சமைக்கும் முன் பச்சையாக இருக்கும் கோழி இறைச்சியை கழுவ வேண்டாம் என்று பரிந்துரைக்கின்றனர். சிக்கனை கழுவினால், சமையலறையைச் சுற்றி ஆபத்தான பாக்டீரியாக்கள் பரவக்கூடும் என்பதால் அவ்வாறு செய்வது தவறான முறை என்கின்றனர். அதற்கு பதிலாக சிக்கனை கழுவாமல் நன்றாக சமைப்பது சிறந்தது. அதுவே பாதுகாப்பான வழியாக கருதப்படுகிறது.
சிக்கனை கழுவ என்ன காரணம்..? உணவில் பரவும் நோய்க்கான இரண்டு முக்கிய காரணங்கள் கேம்பிலோபாக்டர் (காம்பிலோபாக்டர்) மற்றும் சால்மோனெல்லா (சால்மோனெல்லா) ஆகிய பாக்டீரியாக்கள்தான். அவை பொதுவாக கோழி இறைச்சிகளில் காணப்படுகின்றன. சிக்கனை கழுவும்போது அந்த பாக்டீரியாக்கள் சமையலறையில் எல்லா இடங்களிலும் பரவுகின்றன. இதன் காரணமாக நோய்களின் ஆபத்து அதிகரிக்கிறது.
ஆஸ்திரேலியாவில், கடந்த இரண்டு தசாப்தங்களில் கேம்பிலோபாக்டர் மற்றும் சால்மோனெல்லாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளன. வருடத்திற்கு 220,000 கேம்பிலோபாக்டர் நோய்த்தொற்றுகள் ஏற்படுகின்றன, 50,000 கோழி இறைச்சியிலிருந்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாதிக்கப்படுகின்றனர்.
மாற்று வழி..? எனவே சிக்கனை கழுவுவதற்கு பதிலாக குறைந்த வெப்ப அளவிலான கொதி நீரில் சிக்கனை கழுவலாம் . அந்த நீரில் சிக்கனை அலசி சுத்தம் செய்ய வேண்டும். அப்போது அந்த வெப்ப நீரில் கிருமிகள் அழிந்து விடும் என்றும் கூறப்படுகிறது. அந்த சுடு நீரில் கொஞ்சம் எலுமிச்சை சாறு, மஞ்சள் சேர்த்து சிக்கனை கழுவலாம். சிக்கன் கழுவிய நீரை வீட்டு சிங்க் தொட்டியிலேயே ஊற்றாமல் வெளிப்புறத்தில் ஊற்றுவது நல்லது.