வால்நட்ஸ்களில் ப்ரோட்டீன், ஃபைபர் , வைட்டமின்ஸ் மற்றும் மினரல்ஸ்கள் உள்ளன. இதிலிருக்கும் நிறைவுறா கொழுப்புகள் இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கிறது. உடல் மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு எண்ணற்ற நன்மைகளை அளிக்கும் வால்நட்ஸ்களை தினசரி டயட்டில் சேர்த்து கொள்வதால் ஏராளமான பலன்களை பெறலாம். மேலே குறிப்பிட்டதை போல வால்நட்ஸ் சருமத்திற்கு எவ்வளவு நல்லது என்று பலருக்கும் தெரியாது. சூப்பர்ஃபுட்டாக இருக்கும் வால்நட்ஸ்களை டயட்டில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் சரும நன்மைகளை பற்றி இங்கே தெரிந்து கொள்ளலாம்.
நீண்ட நேரம் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை பார்ப்பதன் காரணமாக அல்லது சரியாக தூங்காவிட்டால் கண்களுக்கு கீழே கருவளையங்கள் ஏற்படும். நீண்ட ஸ்கிரீனிங் டைம் காரணமாக பலருக்கு கண்கள் எளிதில் சோர்வடைவதோடு கருவளையங்களும் ஏற்படுகின்றன. ஆனால் தினசரி டயட்டில் வால்நட்ஸ்களை சேர்த்து கொள்வது கருவளையங்களை குறைப்பதோடு சருமத்தை புதுப்பிக்கவும் உதவும்.
வால்நட்ஸில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கஸ் சருமத்தை ஹைட்ரேட்டாக மற்றும் ஆரோக்கியமாகவும் வைத்திருப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன. இந்த நட்ஸில் காணப்படும் ஏராளமான வைட்டமின்கள் சருமத்தில் கருமையான திட்டுகள் மற்றும் பிக்மென்டேஷன் உருவாவதை குறைக்கின்றன. எனவே பளபளப்பான சருமம் வேண்டும் என நீங்கள் நினைத்தால் உங்கள் டயட்டில் தினசரி 4-5 வால்நட்ஸ்களை சேர்த்து கொள்ளுங்கள்.