முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ’வைட்டமின் சி ’ : எந்தெந்த உணவுகளில் நிறைவாக உள்ளது..?

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ’வைட்டமின் சி ’ : எந்தெந்த உணவுகளில் நிறைவாக உள்ளது..?

Vitamin C : ஆரஞ்சு மற்றும் எலுமிச்சையில் வைட்டமின் சி சத்து அதிகமாக உள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்த விஷயம்.

 • 18

  நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ’வைட்டமின் சி ’ : எந்தெந்த உணவுகளில் நிறைவாக உள்ளது..?

  வைட்டமின் சி நமது உடலுக்கு தேவையான முக்கியமான ஊட்டச்சத்துக்களில் ஒன்றாகும். இந்த வைட்டமின் எளிதில் நீரில் கரையக்கூடியது. நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் ஆன்டி ஆக்ஸிடண்ட்களாகவும் செயல்படுகின்றன. நோய் எதிர்ப்பு சக்தி குறைப்பாடு, சரும பிரச்சனைகள், கண் சார்ந்த நோய்களுக்கு வைட்டமின் சி குறைபாடு காரணமாக அமைகிறது.

  MORE
  GALLERIES

 • 28

  நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ’வைட்டமின் சி ’ : எந்தெந்த உணவுகளில் நிறைவாக உள்ளது..?

  வைட்டமின் டி போலல்லாமல், மனித உடலால் வைட்டமின் சி உற்பத்தி செய்யவோ அல்லது சேமிக்கவோ முடியாது, அதனால்தான் அதை நல்ல அளவில் உட்கொள்வது அவசியம். இந்த ஊட்டச்சத்து சிறிய இரத்த நாளங்கள், எலும்புகள், பற்கள் மற்றும் கொலாஜன் திசுக்களுக்கும் அவசியம். உடலின் இயல்பான செயல்பாட்டிற்காகவும், குறைபாட்டின் அபாயத்தைத் தவிர்க்கவும், குறைந்தபட்சம் 90mg வைட்டமின் சியை எடுத்துக்கொள்ள வேண்டுமென ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

  MORE
  GALLERIES

 • 38

  நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ’வைட்டமின் சி ’ : எந்தெந்த உணவுகளில் நிறைவாக உள்ளது..?

  ஆரஞ்சு மற்றும் எலுமிச்சையில் வைட்டமின் சி சத்து அதிகமாக உள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்த விஷயம். 100 கிராம் ஆரஞ்சு அல்லது எலுமிச்சை எடுத்துக்கொண்டால் அதன் மூலமாக உடலுக்கு 53.2 மில்லி கிராம் முதல் 53 மில்லி கிராம் வரையிலான வைட்டமின் சி சத்து கிடைக்கிறது. அதேசமயம் இந்த இரண்டு பழங்களைத் தவிர வைட்டமின் சி சத்து நிறைந்த பிற பழங்கள் மற்றும் காய்கறிகள் பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். வைட்டமின் சி பற்றாக்குறைய தடுத்து, உடலுக்கு அதிக அளவிலான வைட்டமின் சியை தரக்கூடிய பழங்கள் பற்றி தற்போது பார்க்கலாம்..

  MORE
  GALLERIES

 • 48

  நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ’வைட்டமின் சி ’ : எந்தெந்த உணவுகளில் நிறைவாக உள்ளது..?

  1. அன்னாச்சி பழம் : அன்னாச்சி பழத்தை பொறுத்தவரை சிலர் ஜூஸ் ஆக குடிப்பார்கள், சிலர் அதனை துண்டாக்கி சாப்பிடுவார்கள், சில உணவு பிரியர்களோ பீட்சாவில் கூட சேர்த்து சாப்பிடுகிறார்கள். இதனை நீங்கள் எப்படி சாப்பிடுகிறீர்கள் என்ற கவலையை ஒதுக்கிவைத்துவிட்டு, அன்னாச்சியை உணவில் சேர்த்துக்கொள்ளவது கட்டாயம். ஏனென்றால் வைட்டமின் சி சத்து நிறைந்த பழங்களில் அன்னாச்சியும் ஒன்று, இதில் 79 மில்லி கிராம் அளவுக்கும் அதிகமாக வைட்டமின் சி சத்து உள்ளது. கூடுதலாக இது ரத்தத்தில் சர்க்கரை அளவை பராமரிப்பதோடு, எலும்புகளுக்கும் வலிமை அளிக்கிறது.

  MORE
  GALLERIES

 • 58

  நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ’வைட்டமின் சி ’ : எந்தெந்த உணவுகளில் நிறைவாக உள்ளது..?

  2. பப்பாளி : மாதவிடாய் பிரச்சனை உள்ள பெண்களுக்கு மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் பழம். பப்பாளி, நார்ச்சத்து நிறைந்த ஆதாரமாக இருந்தாலும், ஒரு கப் பப்பாளி 88 மில்லி கிராம் வைட்டமின் சி உள்ளது. எனவே இதை உணவில் சேர்த்துக்கொள்வது அதிக அளவிலான வைட்டமின் சி கிடைக்க உதவியாக இருக்கும்.

  MORE
  GALLERIES

 • 68

  நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ’வைட்டமின் சி ’ : எந்தெந்த உணவுகளில் நிறைவாக உள்ளது..?

  3. கொய்யா : கொய்யாவில் ஆரஞ்சு பழத்தில் இருப்பதை விட 4 மடங்கு அதிகமான வைட்டமின் சி உள்ளது. ஒரு கொய்யா பழத்தில் 126 மில்லி கிராம் அளவிற்கு வைட்டமின் சி சத்து உள்ளது. இதை சாப்பிடுவதால் உடலுக்குத் தேவையான வைட்டமின் சி சத்து கிடைப்பதோடு, நீரழிவு நோய் தடுப்பு, இதய ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு சக்தி, கண்பார்வை மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு ஆரோக்கியத்திற்கு உறுதுணையாக இருக்கிறது. கொய்யாவில் மாங்கனீசும் நிறைந்துள்ளது, இது நாம் உண்ணும் உணவில் இருந்து மற்ற முக்கிய ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கு உடலுக்கு உதவுகிறது. கொய்யா ஒரு குறைந்த கலோரி கொண்ட பழம் என்பதால் அனைத்து வயதினரும் எடுத்துக்கொள்ள உகந்தது. மேலும் நார்ச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட், ஃபோலிக் ஆசிட், வைட்டபின் பி-9 உள்ளிட்ட சத்துக்களும் இதில் நிறைந்துள்ளன.

  MORE
  GALLERIES

 • 78

  நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ’வைட்டமின் சி ’ : எந்தெந்த உணவுகளில் நிறைவாக உள்ளது..?

  4. கிவி : அடர்-பச்சை நிறத்தில் புளிப்பும், இனிப்பும் கலந்த சுவையுள்ள கிவி பழத்தில் நீங்கள் எதிர்பாராத அளவுக்கு வைட்டமின் சி சத்து நிறைத்துள்ளது. ஒரு துண்டு கிவி பழத்தில் 273 மில்லி கிராம் வைட்டமின் சி அடங்கியுள்ளது. கிவி பழத்தின் வைட்டமின் சி சத்து மட்டுமின்றி வைட்டமின் ஏ, நார்ச்சத்து, கால்சியம் உள்ளது. மேலும் இந்த பழம் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளதால் சர்க்கரை நோயாளிகள் மற்றும் டயட் இருப்பவர்கள் உணவு பட்டியலியல் இடம் பிடிக்கின்றன.

  MORE
  GALLERIES

 • 88

  நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ’வைட்டமின் சி ’ : எந்தெந்த உணவுகளில் நிறைவாக உள்ளது..?

  5. குடைமிளகாய் : சிகப்பு, மஞ்சள் மற்றும் பச்சை நிற குடைமிளகாயில் அதிக அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. நடுத்தர அளவிலான சிவப்பு நிற குடைமிளாகயில் 152 மில்லி கிராமும், பச்சை நிற குடைமிளகாயில் 96 மில்லி கிராமும் மற்றும் மஞ்சள் நிற குடைமிளகாயில் 218 மில்லிகிராமும் வைட்டமின் சி உள்ளது. உங்களது கண்கள் மற்றும் இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த இது உதவுகிறது. உங்கள் உடலில் வைட்டமின் சி ஊட்டச்சத்தின் அளவை அதிகரித்து நுரையீரல் புற்றுநோய் ஏற்படாமல் ஏற்படாமல் தடுத்திட குடைமிளகாய் உதவுகிறது.

  MORE
  GALLERIES