முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » நரம்புத்தளர்ச்சியால் அவதியா.? பலவீனமான நரம்புகளுக்கு உயிர் கொடுக்கும் இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க..!

நரம்புத்தளர்ச்சியால் அவதியா.? பலவீனமான நரம்புகளுக்கு உயிர் கொடுக்கும் இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க..!

வைட்டமின் பி12 குறைபாடு காரணமாக நரம்புகள் பலவீனமடைகின்றன. இதன் காரணமாக, நரம்புதளர்ச்சி ஏற்ப்படலாம். வைட்டமின் பி 12 எந்தெந்த உணவுகளில் உள்ளது என்பதை பார்க்கலாம்..

 • 16

  நரம்புத்தளர்ச்சியால் அவதியா.? பலவீனமான நரம்புகளுக்கு உயிர் கொடுக்கும் இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க..!

  வைட்டமின் பி12 குறைபாடு : நம் உடலுக்கு பல ஊட்டச்சத்துக்கள் தேவை. சத்து குறைவினால் பல்வேறு நோய்கள் வர ஆரம்பிக்கும். அதேபோல், நரம்புகளின் பலவீனமும் பல பிரச்சனைகளை உருவாக்கும். இதன் காரணமாக, கைகளில் உணர்வின்மை மற்றும் கூச்ச உணர்வு ஏற்படுவது மட்டுமல்லாமல், பல சிக்கல்களையும் ஏற்படுத்தும். WebMD படி, வைட்டமின் B12-இன் குறைபாடு நரம்புத்தளர்ச்சிக்கு வழிவகுக்கும் என கூறப்படுகிறது. அப்படிப்பட்ட பலவீனமான நரம்புகளுக்கு உயிர் கொடுக்க வேண்டுமானால் இந்த 5 உணவுகளை, இன்றே உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். வைட்டமின் பி 12 எந்தெந்த உணவுகளில் உள்ளது என்பதை பார்க்கலாம்..

  MORE
  GALLERIES

 • 26

  நரம்புத்தளர்ச்சியால் அவதியா.? பலவீனமான நரம்புகளுக்கு உயிர் கொடுக்கும் இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க..!

  முட்டை : வேகவைத்த முட்டையில் சுமார் 0.6 மைக்ரோகிராம் பி12 உள்ளது. இருப்பினும், உங்களுக்கு வைட்டமின் பி12-இல் கடுமையான குறைபாடு இருந்தால், அதனை அதிகரிப்பதற்கு முட்டை மட்டும் போதாது. முட்டைகள் குறுகிய காலத்தில் வைட்டமின் பி12 அளவை கணிசமாக அதிகரிக்க முடியும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை, இருப்பினும் அவை தினசரி டயட்டில் சேர்ப்பது நல்லது.

  MORE
  GALLERIES

 • 36

  நரம்புத்தளர்ச்சியால் அவதியா.? பலவீனமான நரம்புகளுக்கு உயிர் கொடுக்கும் இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க..!

  பால் பொருட்கள்: பசுவின் பாலில் வைட்டமின் பி12 உள்ளது. இது இந்த வைட்டமின் குறைபாடை சரிசெய்ய மிகவும் நன்மை பயக்கும், எனவே உங்கள் உணவில் பால் மற்றும் தயிர் கண்டிப்பாக சேர்த்துக் கொள்ளலாம்.

  MORE
  GALLERIES

 • 46

  நரம்புத்தளர்ச்சியால் அவதியா.? பலவீனமான நரம்புகளுக்கு உயிர் கொடுக்கும் இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க..!

  கடல் உணவுகள்: வைட்டமின் பி12 மீன் மற்றும் பிற கடல் உணவுகளில் ஏராளமாக உள்ளது. இது அனைத்து கடல் உணவுகளிலும் வெவ்வேறு அளவில் காணப்படுகிறது. அதனால் வைட்டமின் பி12 குறைபாடுள்ளவர்கள் கடல் உணவுகளை சாப்பிடுவதன் மூலம் அதிகபட்சமான பலன்களை பெற முடியும்.

  MORE
  GALLERIES

 • 56

  நரம்புத்தளர்ச்சியால் அவதியா.? பலவீனமான நரம்புகளுக்கு உயிர் கொடுக்கும் இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க..!

  சோயா பால் : பால் பொருட்கள் ஒவ்வாமை உள்ளவர்கள் மற்றும் அவற்றை விரும்பாதவர்களுக்கு சோயா பால் வைட்டமின் பி 12 இன் சக்திவாய்ந்த ஆதாரமாக இருக்கும். சோயா பால் உட்கொள்வதன் மூலமும் வைட்டமின் பி12 ஐ அதிகரிக்கலாம்.

  MORE
  GALLERIES

 • 66

  நரம்புத்தளர்ச்சியால் அவதியா.? பலவீனமான நரம்புகளுக்கு உயிர் கொடுக்கும் இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க..!

  சிவப்பு இறைச்சி : வைட்டமின் பி12 சிவப்பு இறைச்சியில் அதிக அளவில் காணப்படுகிறது. இருப்பினும், அதிகப்படியான சிவப்பு இறைச்சி உண்ணும் பட்சத்தில் அவை உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கலாம். குறிப்பாக இதயம் மற்றும் இரத்த நாள பிரச்னைகள் மேலும் சில வகையான புற்றுநோய் இவற்றில் அடங்கும். அதனால் இவற்றை அளவாக எடுத்துக் கொள்வது அவசியம்.

  MORE
  GALLERIES