மழை என்றாலே மனதிற்கு ஒருவிதமான புத்துணர்வை நமக்கு ஏற்படுத்தும். ஜில்லென்ற காற்று, சொட்ட சொட்ட மழைத்துளிகளோடு நம் மனதை வருடிச்செல்லும் இந்த காலங்கள் நமக்கு வசந்தம் தான் என்றாலும், பாதுகாப்பான உணவுமுறைகளை பின்பற்றாவிடில் தேவையற்ற உடல்நலப்பிரச்சனைகளைத் தான் நாம் சந்திக்க நேரிடும் என்கின்றனர் மருத்துவர்கள். ஆம் பொதுவாக மழை பெய்தாலே பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகள் அதிகளவில் காணப்படும். இந்நேரத்தில் மழைக்கு இதமாக நாம் செய்து சாப்பிடும் உணவுப்பொருள்களால் தேவையற்ற உடல் உபாதைகளை நாம் சந்திக்க நேரிடும்.
எனவே உடல் நலத்திற்கு ஏற்றவாறு ஆரோக்கியமான உணவுகளை நீங்கள் உட்கொள்வதை மனதில் கொள்ள வேண்டும் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். இது குறித்து ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் ரோகினி பாட்டீல் தெரிவிக்கையில், மழைக்காலம் மற்றும் குளிர்காலம் தான் பல்வேறு நுண்ணுயிரிகள் மற்றும் பாக்டீரியாக்களின் இனப்பெருக்கத்திற்கு சரியான நேரமாகும். இதன் காரணமாகவே பச்சை காய்கறிகள் எளிதில் பாதிக்கப்படும்.
எனவே நீங்கள் ஊட்டச்சத்துள்ள உணவுகளை சாப்பிடுவதற்கு முன்னதாக அதில் உள்ள பாக்டீரியாவை கொல்லவதற்கு குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் வேகவைத்து உட்கொள்ள வேண்டும் என்பதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். இருந்தப்போதும், இந்த சீசனில் நீங்கள் தவிர்க்க வேண்டிய சில காய்கறிகளின் பட்டியல் குறித்து இங்கே தெரிந்துக்கொள்வோம்.
காலிஃபிளவர்: மழைக்காலங்களில் காலிஃபிளவர் தவிர்க்கப்பட வேண்டிய காய்கறிகளில் ஒன்றாகும். ஏனென்றால் அதில் குளுக்கோசினோலெட்டுகள் எனப்படும் கலவைகள் அதிகளவில் உள்ளதால், உடல் ஒவ்வாமை அல்லது சென்டிசிடிவ் திறன் உள்ளவர்களுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும். எனவே இந்த சீசனில் நீங்கள் காலிஃபிளவர் உட்கொள்வதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. இல்லாவிடில் நன்றாக சமைத்து உட்கொள்ளவும்.
குடை மிளகாய்: மழைக்காலத்தில் குடை மிளகாயை உணவில் சேர்த்துக்கொள்வது உங்களுக்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். இவற்றில் குளுக்கோசினோலெட்டுகள் எனப்படும் பொருள்களைக் கொண்டிருக்கின்றன. எனவே காய்கறிகளை நறுக்கி சமைக்கும் போது ஐசோதியோசயேனட்டுகளாக மாறும். எனவே இதனை பச்சையாகவே அல்லது சமைத்தோ உட்கொள்ளும் போது நமக்கு குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் சுவாசக்கோளாறுகளை நமக்கு ஏற்படுத்தும். எனவே பருவக்காவங்களில் இதுப்போன்ற உணவு முறைகளிலிருந்து விலகி இருப்பது உடல் நலத்திற்கு நல்லது
கத்திரிக்காய் : கத்தரிக்காயில் உள்ள ஆல்கலாய்டு பூச்சிகள் மற்றும் பிற பூச்சிகளுக்கு எதிராக தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களை உற்பத்தி செய்யும் என கூறப்படுகிறது. எனவே மழைக் காலங்களில் கத்திரிக்காய் அல்லது பைங்கன் உட்கொள்வதைக் குறைக்க வேண்டும். இல்லாவிடில் ஆல்கலாய்டுகளுக்கு ஒவ்வாமை மற்றும் படை நோய், தோலில் அரிப்பு, குமட்டல் மற்றும் தோல் வெடிப்புகளை ஏற்படுத்தும் உடல் நலப்பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.