கோடைகாலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதிலும் அக்னி வெயில் வந்தால், உடலில் இருக்கும் நீர்ச்சத்துக்கள் எல்லாம் வெயிலால் உறிஞ்சப்பட்டு சோர்வு ஏற்படும். இந்த காலத்தில் தண்ணீர்ச்சத்து மட்டுமின்றி, உப்புச் சத்து குறைபாடும் ஏற்படும். அதனால் நாம் உண்ணும் உணவிலும் காய்கறிகளிலும் நீர்ச்சத்துக்கள் அதிகம் உள்ளதாக பார்த்து சாப்பிடுவது நல்லது. அத்தகைய காய்கறிகள் என்னவென்று இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்...
சுரைக்காய்: சுரைக்காய் என்பது அதிக நீர்ச்சத்து கொண்ட, கோடை காலத்தில் விளையக் கூடிய காய். இந்த காயானது, உடலுக்கு ஏராளமான நன்மைகளை கொடுக்கக் கூடியதாகும். சுரைக்காயில் சுமார் 96 சதவீதம் நீர்ச்சத்து நிரம்பியுள்ளது. இதனால், நம் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளவும், போதுமான நீர்ச்சத்து வழங்கி புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ளவும் இது உதவிகரமாக இருக்கிறது. இந்த காய்கறி உடல் வறட்சியை நீக்குவது மட்டுமின்றி, கண் பார்வையையும் கூர்மையாக்கும்.