முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » கொலஸ்ட்ரால், சுகர் குறையும்.. சிவப்பு அரிசியில் கொட்டிக்கிடக்கும் பலன்கள்..

கொலஸ்ட்ரால், சுகர் குறையும்.. சிவப்பு அரிசியில் கொட்டிக்கிடக்கும் பலன்கள்..

சிவப்பு அரிசியில் (Brown Rice) உள்ள கார்போஹைட்ரேட்டு, மெக்னீசியம் போன்ற பல்வேறு சத்துக்கள் உடல் ஆரோக்கியத்திற்கு உதவியாக உள்ளது.

 • 16

  கொலஸ்ட்ரால், சுகர் குறையும்.. சிவப்பு அரிசியில் கொட்டிக்கிடக்கும் பலன்கள்..

  இன்றைக்கு மக்களிடையே உணவு முறை என்பது முற்றிலும் மாறிவிட்டது. தெரியாத பெயர்களில் உள்ள உணவுகளை வாங்கி நாம் சாப்பிட தொடங்கியதன் விளைவு தான் தற்போது புதிய புதிய நோய்களையும் நாம் சம்பாதித்துக்கொள்கிறோம். கொரோனா தொற்று தாக்கத்திற்குப்பிறகு இதுப்போன்ற நடைமுறைகள் கொஞ்சம் கொஞ்சமாக மாறிவருகிறது.

  MORE
  GALLERIES

 • 26

  கொலஸ்ட்ரால், சுகர் குறையும்.. சிவப்பு அரிசியில் கொட்டிக்கிடக்கும் பலன்கள்..

  உடல் நலத்தை எப்படி பாதுகாப்பாக வைத்துக்கொள்வது? முறையான உடற்பயிற்சி மேற்கொள்வது என பல்வேறு நடைமுறைகளை பின்பற்றத்தொடங்கியுள்ளனர். இப்படி உடல் நலத்திற்கான பயிற்சிகளை செய்வதோடு நல்ல உணவுமுறைகளையும் நாம் கையாள்வது முக்கியமான ஒன்று. அதில் ஒரு உணவு முறையைத்தான் இப்போது நாம் இன்றைக்குப் பார்க்கப்போகிறோம்..

  MORE
  GALLERIES

 • 36

  கொலஸ்ட்ரால், சுகர் குறையும்.. சிவப்பு அரிசியில் கொட்டிக்கிடக்கும் பலன்கள்..

  பிரவுன் அரிசி என்று ஆங்கிலத்தில் அறியப்படும் பழுப்பு அல்லது சிவப்பு அரிசியில் எண்ணற்ற ஊட்டசத்துக்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக இந்த அரிசியில் கார்போஹைட்ரேட்டு, மெக்னீசியம் அதிகளவில் உள்ளதால், சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள உதவுகிறது.

  MORE
  GALLERIES

 • 46

  கொலஸ்ட்ரால், சுகர் குறையும்.. சிவப்பு அரிசியில் கொட்டிக்கிடக்கும் பலன்கள்..

  மேலும் சிவப்பு அரிசியில் இருக்கும் எண்ணெய், நம் உடலில் இருக்கும் எல்.டி.எல் என்கிற கெட்ட கொழுப்பைக்குறைக்கவும் உதவுவதால் டயட்டில் உள்ள பலர் இந்த அரிசியை உணவில் சேர்த்துக்கொள்கின்றனர்

  MORE
  GALLERIES

 • 56

  கொலஸ்ட்ரால், சுகர் குறையும்.. சிவப்பு அரிசியில் கொட்டிக்கிடக்கும் பலன்கள்..

  இதில் உள்ள தாது உப்புக்கள் கூந்தல், பற்கள், நகங்கள், தசைகள் மற்றும் எலும்புகள் ஆகியவற்றின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகிறது எனக்கூறப்படுகிறது.

  MORE
  GALLERIES

 • 66

  கொலஸ்ட்ரால், சுகர் குறையும்.. சிவப்பு அரிசியில் கொட்டிக்கிடக்கும் பலன்கள்..

  இதோடு சிவப்பு அரிசியில் சிறுநீர்ப்பை, கல்லீரல், உணவுக்குழாய் மற்றும் இரத்தப்புற்றுநோய் வராமல் தாக்கக்கூடிய தன்மைகள் இருக்கின்றன. இப்படி பல்வேறு நன்மைகளைக் கொண்டுள்ள இந்த அரிசியை சமைப்பதற்கு நேரம் எடுக்கும். ஆனால் இதில் ஏராளமான பலன்கள் கிடைக்கின்றன.

  MORE
  GALLERIES