91% கல்லூரி மாணவிகள் சாக்லேட்ஸ்களை சாப்பிட வேண்டும் என்ற வழக்கமான ஏக்கத்தை கொண்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். பெண்களை பொறுத்த வரை பொதுவாக மாதவிடாய் சுழற்சியின் போது ஏற்படும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் காரணமாக சாக்லேட்ஸ்களை சாப்பிட வேண்டும் என்ற ஆசை அதிகரிக்கும். ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்ட்டிரோன் மற்றும் செரோடோனின் அளவுகள் குறைந்து, கார்டிசோல் (ஸ்ட்ரஸ் ஹார்மோன்) உயர்வதன் விளைவாக சர்க்கரை அவர்கள் சாக்லேட்ஸ் போன்ற இனிப்புகளை அதிகம் சாப்பிட ஏங்குவதாக குறிப்பிடப்படுகிறது.
ஆனால், ஆண்களைப் போலல்லாமல் சாக்லேட்ஸ்களை சாப்பிடும் போது பல பெண்களுக்கு குற்ற உணர்வு ஏற்படுவதாக அல்லது அவர்கள் அதை உண்ண வேண்டுமா, வேண்டாமா என்ற குழப்பத்துடன் போராடுவதாக ஆய்வு கூறுகிறது. சாக்லேட்டுடனான இந்த அழுத்தமான உறவு சில நேரங்களில் தீங்கு விளைவிக்கும். சாக்லேட்ஸ் நாவின் சுவை மொட்டுகளுக்கு மட்டுமல்ல, ஆரோக்கியத்திற்கும் எவ்வாறு நன்மை பயக்கும் என்பதை ஊட்டச்சத்து நிபுணர்கள் விளக்குகிறார்கள்.
சாக்லேட் சாப்பிடும் பழக்கத்தை ஏன் குற்ற உணர்ச்சியாக கருத கூடாது.!! : கடந்த 2014-ல் நடத்தப்பட்ட ஆய்வில் கொண்டாட்டங்களின் போது சாக்லேட் கேக் சாப்பிடுவதாக கூறிய பெண்கள் வெற்றிகரமான எடை பராமரிப்பை கொண்டிருந்தனர். ஆனால் அதே சமயம் சாக்லேட் சாப்பிடுவதால் குற்ற உணர்ச்சி ஏற்படுவதாக கூறிய பெண்கள் நீண்ட கால மற்றும் குறுகிய கால எடை பராமரிப்பில் குறைந்த விகித வெற்றி, ஆரோக்கியமற்ற உணவு நடத்தைகள், தங்களது சொந்த உடல் உருவத்தின் மீதே அதிருப்தி, வாழ்க்கைத் தரம் குறைந்து விட்ட உணர்வு உள்ளிட்ட பல சிக்கல்களை சந்திக்க நேரிடுவதாக ஆய்வு கூறியது.
சாக்லேட் ஆசை காரணமாக ஏற்படும் எதிர்மறை விளைவுகளை சரி செய்வதற்கு அதை சாப்பிட கூடாது என்று தடை செய்வதை முதலில் நிறுத்த வேண்டும். சாக்லேட் அல்லது ப்ரோக்கோலி உணவுகளின் மீதான ஏக்கம் பற்றி நீங்கள் குற்ற உணர்வு கொள்ள வேண்டியதில்லை. உண்மையில் எந்த உணவையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று நினைப்பது வழக்கமாக அந்த உணவின் மீது அதிக ஆசையை ஏற்படுத்துகிறது மற்றும் அதை சாப்பிடும் போது குற்ற உணர்வு ஏற்படுகிறது என்கிறார்கள் நிபுணர்கள்.
குற்ற உணர்ச்சியின்றி சாக்லேட்ஸ்களை சாப்பிட வேண்டும் என்றால் நீங்கள் அதை எப்போது, ஏன் சாப்பிடுகிறீர்கள் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். உதாரணமாக நீங்கள் தினமும் சிறிய பீஸ் டார்க் சாக்லேட்டை சாப்பிட்டு வருகிறீர்கள் என்றால், வார இறுதியில் ஒரு பார்ட்டி திட்டமிட்டிருந்தால் தினசரி சாக்லேட் நுகர்வை கட் செய்து விட்டு வர இறுதியில் அனுபவித்து சாப்பிடலாம்.
சாக்லேட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் : டார்க் சாக்லேட் சாப்பிடுவதில் சமநிலையை பேணுவது அல்லது உருவாக்குவது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தலாம். சக்தி வாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் டார்க் சாக்லேட்டில் உள்ளன. இதிலுள்ள ஃபிளாவோனால்ஸ் வீக்கத்தை எதிர்த்துப் போராடுகின்றன மற்றும் ஃப்ரீ ரேடிக்கல்ஸ்களால் ஏற்படும் செல் சேதத்திலிருந்து பாதுகாக்கின்றன.
டார்க் சாக்லேட் நுகர்வால் ஏற்படும் பலன்கள் : டார்க் சாக்லேட்டில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் ரத்த அழுத்தம், ரத்த உறைவு அபாயங்களை குறைக்கிறது. இதயத்தில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்யும் டார்க் சாக்லேட் பக்கவாதம், கரோனரி இதய நோய் மற்றும் இதய நோயால் ஏற்படும் இறப்பு அபாயங்களை குறைக்கிறது.டார்க் சாக்லேட்டில் உள்ள Flavonols நோயெதிர்ப்பு மண்டலத்தை சமநிலைப்படுத்துகிறது மற்றும் ஆக்ஸிடேடிவ் ஸ்ட்ரெஸ்ஸை குறைக்கின்றன.
இதிலிருக்கும் Epicatechin செல்களை பாதுகாக்கிறது, செல்களை வலிமையாக்குகிறது மற்றும் உடல் இன்சுலினை சிறப்பாகப் பயன்படுத்த உதவும் செயல்முறைகளுக்கு சப்போர்ட்டாக இருக்கிறது. இது நீரிழிவுவை தடுக்கலாம் அல்லது எதிர்த்து போராடலாம்.டார்க் சாக்லேட்டில் உள்ள Flavonols மூளை செயல்பாட்டில் நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதில் சிறந்த ரியாக்ஷன் டைம், விஷுவல்-ஸ்பேட்டியல் விழிப்புணர்வு மற்றும் வலுவான நினைவாற்றல் உள்ளிட்டவை அடங்கும்.
டார்க் சாக்லேட்டில் உள்ள epicatechin ரத்தத்தில் நைட்ரிக் ஆக்சைடு உற்பத்தியை அதிகரிக்கிறது. மிதமான தீவிர உடற்பயிற்சியில் ஈடுபடும் போது ஒரு தடகள வீரர் பயன்படுத்தும் ஆக்ஸிஜனின் அளவை குறைக்கிறது. இது தடகள வீரரை நீண்ட நேரம் உடற்பயிற்சி தீவிரத்தை பராமரிக்க உதவுகிறது.டார்க் சாக்லேட் சாப்பிட்டவர்கள் குறைந்த மன அழுத்தத்தை உணர்ந்ததாகவும், கார்டிசோல் என்ற ஸ்ட்ரெஸ் ஹார்மோன் அளவு குறைவதையும் ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தி உள்ளனர். இது இதய ஆரோக்கியத்தில் டார்க் சாக்லேட்டின் விளைவுகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம், ஏனெனில் மன அழுத்தம் இதய நோய்க்கான ஆபத்து காரணியாகும்.
டார்க் சாக்லேட்டின் ஆரோக்கிய நன்மைகள் பற்றிய சில உண்மைகள் இங்கே : டார்க் சாக்லேட் சாப்பிடுவதால் நன்மைகள் கிடைக்கும் என்று வெளிப்படுத்திய ஆராய்ச்சிகளில் கணக்கில் எடுத்து கொள்ளப்பட்டவை குறைந்தது 70% cocoa கன்டென்ட் கொண்ட சாக்லேட்களுடன் தொடர்புடையவை.ஆரோக்கிய நன்மைகளை பெற எவ்வளவு டார்க் சாக்லேட் சாப்பிட வேண்டும் என்ற பரிந்துரையை ஆராய்ச்சியாளர்கள் கூறவில்லை என்றாலும், குறைந்தப்பட்சம் 70% cocoa கன்டென்ட் கொண்ட குறைந்தப்பட்ச பதப்படுத்தப்பட்ட டார்க் சாக்லேட்டை அவ்வப்போது ஒரு அவுன்ஸ் சாப்பிட நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
டார்க் சாக்லேட்டில் உள்ள கலோரி, கொழுப்பு மற்றும் சர்க்கரை உள்ளடக்கம் குறித்து விழிப்புடன் இருக்க லேபிளை எப்போதும் சரிபார்க்க வேண்டும். சிலருக்கு டார்க் சாக்லேட் ஆசிட் ரிஃப்ளக்ஸ் அல்லது ஒற்றை தலைவலியைத் தூண்டும்.எப்போதாவது சாக்லேட் ட்ரீட்டில் ஈடுபடுவது மன அழுத்தம் அல்லது குற்ற உணர்ச்சியால் நிறைந்ததாக இருக்க கூடாது, அது ஆன்டிஆக்சிடன்ட்ஸ் நிறைந்த டார்க் சாக்லேட்டாக இருந்தாலும் சரி, குறைந்த ஊட்டச்சத்து நன்மைகளை கொண்ட ஒயிட் சாக்லேட்டாக இருந்தாலும் சரி. டார்க் சாக்லேட் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளதால் ஒரு சீரான டயட்டின் ஒரு பகுதியாக நிச்சயமாக சாப்பிடலாம். உங்கள் வாழ்க்கைமுறையில் சாக்லேட்டை இணைக்க பல ஆரோக்கியமான வழிகள் உள்ளன, அதனை சரியாக கண்டறியவும்.