முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » நீங்கள் டீ பிரியரா..? டீ யில் எத்தனை வகை..அதனால் எத்தனை பலன்கள் தெரியுமா..?

நீங்கள் டீ பிரியரா..? டீ யில் எத்தனை வகை..அதனால் எத்தனை பலன்கள் தெரியுமா..?

எடை இழப்பு, மெட்டாபாலிக் வளர்ச்சி, இதய ஆரோக்கியம் உள்ளிட்டவைகளுக்கு உதவும் டீ, தோல் ஆரோக்கியத்துக்கும் உதவும் என்றால் உங்களால் நம்பமுடிகிறதா?

 • 17

  நீங்கள் டீ பிரியரா..? டீ யில் எத்தனை வகை..அதனால் எத்தனை பலன்கள் தெரியுமா..?

  தண்ணீருக்கு பிறகு அதிகம் குடிக்கும் ஒரு பானம் என்றால், அது ’டீ’ தான். ஒரு காலத்தில் சில வகை பிளேவர் ’டீ’க்கள் மட்டுமே இருந்த நிலையில், தற்போது ஏராளமான பிளேவர்களில் ’டீ’கள் கிடைக்கின்றன. ஒவ்வொன்றும் அதன் பிளேவர் மற்றும் ரெசிபிகளுக்கு ஏற்ப சுவை, ஆரோக்கிய பலன்களை கொண்டிருக்கின்றன. புதினா டீ, கிரீன் டீ, ஹெர்பல் டீ ஆகியவற்றை குடிக்குமாறு மருத்துவர்கள் கூட பரிந்துரைக்கின்றன.

  MORE
  GALLERIES

 • 27

  நீங்கள் டீ பிரியரா..? டீ யில் எத்தனை வகை..அதனால் எத்தனை பலன்கள் தெரியுமா..?

  எடை இழப்பு, மெட்டாபாலிக் வளர்ச்சி, இதய ஆரோக்கியம் உள்ளிட்டவைகளுக்கு உதவும் டீ, தோல் ஆரோக்கியத்துக்கும் உதவும் என்றால் உங்களால் நம்பமுடிகிறதா?. டீயில் இருக்கும் ஊட்டச்சத்துகள் உங்கள் தோல் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கின்றன. எந்த டீ குடித்தால், என்ன பலன் கிடைக்கும் என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

  MORE
  GALLERIES

 • 37

  நீங்கள் டீ பிரியரா..? டீ யில் எத்தனை வகை..அதனால் எத்தனை பலன்கள் தெரியுமா..?

  பிளாக் டீ : பிளாக் டீயில் ஏராளமான ஆரோக்கிய பலன்கள் இருகின்றன. இதில் ஆன்டிஆக்சிடன்டுகள் நிரம்பியிருக்கின்றன. இந்த டீயை குடிப்பதன் மூலம் உடலில் அழற்சிகள் இருந்தால், அவை குறைந்துவிடும். மேலும், தோல் சார்ந்த பிரச்சனைகள் இருப்பவர்களும் தாராளமாக பிளாக் டீயை எடுத்துக்கொள்ளலாம். அந்த பிரச்சனையை குறைக்கும் ஆற்றல் இதில் இருக்கிறது.

  MORE
  GALLERIES

 • 47

  நீங்கள் டீ பிரியரா..? டீ யில் எத்தனை வகை..அதனால் எத்தனை பலன்கள் தெரியுமா..?

  கிரீன் டீ : கிரீன் டீயில் இருக்கும் ஆன்டிஆக்சிடன்டுகள் உடலில் தேங்கியிருக்கும் தேவையற்ற கொழுப்புகளை குறைக்க உதவுகிறது. இதன்மூலம் உடல் பருமனால் அவதிப்படுபவர்கள், குறிப்பிடத்தகுந்த மாற்றத்தை பார்க்க முடியும். டீ குடித்தால் மட்டும் கொழுப்பு குறையாது. முறையான உடற்பயிற்சி மற்றும் உணவுகளை பின்பற்றும்போது, கிரீன் டீயை எடுத்துக்கொண்டால் உங்களின் முயற்சிக்கு கூடுதல் பலன் கிடைக்கும், இதய ஆரோக்கியம், மூளையின் செயல்பாட்டை சுறுசுறுப்பாக்குவதிலும் கிரீன் டீக்கு முக்கிய பங்குண்டு. இதனை நாள்தோறும் குடிக்கும்போது தோல் அரிப்பு, தோல் சிவப்பு பிரச்சனைகள் குறையும்.

  MORE
  GALLERIES

 • 57

  நீங்கள் டீ பிரியரா..? டீ யில் எத்தனை வகை..அதனால் எத்தனை பலன்கள் தெரியுமா..?

  ஊலாங்க் டீ (Oolong tea) : ஊலாங் டீயை குடித்தால் ரத்த அழுத்தம் குறையும். எடை இழப்பு, தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு தீர்வுகள் கிடைக்கும். குடல் சார்ந்த பவல் பிரச்சனைகள் இருப்பவர்கள் தாராளமாக ஊலாங் டீ குடிக்கலாம். இதில் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் இருப்பதால், தோல் சார்ந்த பிரச்சனைகளுக்கும் தீர்வாக இருக்கும். இதயம் சார்ந்த பிரச்சனைகள் இருப்பவர்களும், எலும்பு வலுவாக்குவதற்கும் ஊலாங் டீயைக் குடிக்கலாம். இந்த டீ பொதுவாக சீனா மற்றும் தைவானில் அதிகம் பருகப்படுகிறது.

  MORE
  GALLERIES

 • 67

  நீங்கள் டீ பிரியரா..? டீ யில் எத்தனை வகை..அதனால் எத்தனை பலன்கள் தெரியுமா..?

  பு-எர் தேநீர் (Pu-erh tea) : பு-எர் டீ என்பது சீனாவில் பிரபலமானது. புளித்த கருப்பு தேநீர் என கூறலாம். பாரம்பரிய நோய் எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட மருந்தாகவும் பயன்படும் இந்த டீ, ஆற்றலை அதிகரிக்கிறது. நச்சுகள் மற்றும் ஃப்ரீ ரேடிக்கல்களை சுத்தப்படுத்துகிறது. எடை இழப்புக்கு உதவுகிறது. இது சரும பொலிவை பராமரிப்பதுடன், வயதான தோற்றத்தை தடுக்கிறது. இதில் இருக்கும் ஆரோக்கியமான பாக்டீரியாக்கள் குடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றன.

  MORE
  GALLERIES

 • 77

  நீங்கள் டீ பிரியரா..? டீ யில் எத்தனை வகை..அதனால் எத்தனை பலன்கள் தெரியுமா..?

  வெள்ளை டீ : இதய நோய்களின் அபாயத்தை குறைக்கும் வெள்ளை டீயை, இளம் வயதிலேயே வயதான தோற்றம் ஏற்படுபவர்களும் குடிக்கலாம். இது சரும சுருக்கத்தைக் குறைத்து, தோல் பளபளப்பை ஏற்படுத்தும். எடை இழப்பு முயற்சியில் இருப்பவர்கள் தாராளமாக இந்த டீயை குடிக்கலாம். இந்த டீ வகைகள் மட்டுமல்லாமல், கெமோமில் மற்றும் லாவெண்டர் டீ தூக்கமின்மையை சரிசெய்கிறது. ஹைபிஸ்கஸ் மற்றும் நீல பட்டாணி டீயில் ஆன்டி ஆக்சிடன்டுகள் நிறைந்திருக்கின்றன. இது சருமத்திற்கு மிகவும் நல்லது.

  MORE
  GALLERIES