புனித ரமலான் மாதம், கடந்த ஏப்ரல் 2ம் தேதி அன்று தொடங்கி வருகிற மே 2 ஆம் தேதிக்கு அன்று முடிவடை உள்ளது. இஸ்லாமிய பாரம்பரியத்தின் படி இந்த மாதம் முழுவதும் ஒரு புனிதமான மாதமாக கருதப்படுகிறது. இந்த பண்டிகையின் போது, உலகெங்கிலும் உள்ள முஸ்லீம்கள் நோன்பு இருப்பதை ஒரு வழிபாட்டுச் செயலாகவும், கடவுளுடன் இன்னும் நெருங்குவதற்கான வாய்ப்பாகவும், தேவைப்படும் மக்களிடம் அதிக இரக்கமுள்ளவர்களாகவும் இருக்கவும் வழிவகை செய்கின்றனர்.
இந்த காலகட்டத்தில் இஸ்லாமிய பெருமக்கள், அதிகாலை தொடங்கிய நோன்பினை மாலை இஃப்தாரில் தான் முடிப்பார்கள். அப்போது குடும்பத்தினரும், நண்பர்களும் ஒன்றாக கூடி, தங்களுக்கு விருப்பமான மற்றும் ஆரோக்கியமான உணவுகளை உண்டு மகிழ்வர். அப்படியான இஃப்தாரில் பிரியாணி வகைகளுக்கு ஒரு தனி இடமுண்டு, குறிப்பாக மட்டன் பிரியாணிக்கு!
1. கிளாசிக் மட்டன் பிரியாணி: சாலன் உடன் பரிமாறப்படும் கிளாசிக் மட்டன் பிரியாணி, ஒருபோதும் சலிப்படைய செய்யாது. இது, மட்டன் துண்டுகளை தயிர், இஞ்சி-பூண்டு விழுது, 'பச்சை' பப்பாளி பேஸ்ட், மிளகாய் தூள், உப்பு, எலுமிச்சை சாறு, கரம் மசாலா மற்றும் பல மசாலாப் பொருட்களுடன் மாரினேட் செய்யது பின்னர் 'பிரிஸ்டா' எனப்படும் லேசான பழுப்பு நிறத்திற்கு வறுக்கப்பட்ட வெங்காயத் துண்டுகள் மற்றும் தக்காளியுடன் சமைக்கப்படுகிறது.
3. மட்டன் கோலி பிரியாணி: மட்டன் பிரியாணி வகைகளில் மற்றொரு 'ஸ்டார்' என்றால், அது மட்டன் கோலி பிரியாணி தான். வேகவைக்கப்பட்ட சூடான பிரியாணி ரைஸ், குங்குமப்பூ (கேசர்) மற்றும் கெவ்ராவின் நறுமணம், அதில் ஜூசியான மட்டன் துண்டுகள் என எந்த விதமான பெரிய முயற்சியும் இல்லாமல் நம் இதயத்தை உருக வைக்கும் பிரியாணிகளில் இதுவும் ஒன்று!
4. மட்டன் மண்டி பிரியாணி: உண்மையில் இது ஒரு அரபு உணவாகும், இந்த பிரியாணி ஈகை பண்டிகை வழியாக, மெதுவாக உலகம் முழுவதும் சென்றடைந்து உள்ளது . இதன் ஸ்பெஷாலிட்டி என்னவென்றால், மட்டன் ஸ்டாக்கில் சமைத்த சாதத்துடன், எலும்பிலிருந்து உதிர்ந்து வரும் மட்டன் துண்டுகளே ஆகும். இந்த மட்டன் பிரியாணி உங்கள் நாவின் ஒவ்வொரு சுவை மொட்டுகளையும் திருப்தியடைய வைக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.
5. ஆவாதி பிரியாணி: பிரியாணியை பற்றிய விவாதம், ஆவாதி உணவு வகைகளில் உள்ள செழுமையான மற்றும் சுவையான பிரியாணியைப் பற்றி பேசாமல் ஒருபோதும் நிறைவு பெறாது. ஆவாதி அல்லது லக்னவி பிரியாணி ஆனது பக்கி பிரியாணி என்றும் அறியப்படுகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இறைச்சி மற்றும் அரிசி தனித்தனியாக சமைக்கப்படும், பின் ஒன்றாக அடுக்கப்பட்டு 'டம்' பாணியில் சமைக்கப்படும்.