முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » மதுரை கறி தோசை முதல் கேரள மிளகாய் மட்டன் வரை.. டாப் 5 மட்டன் ரெசிபிக்கள்

மதுரை கறி தோசை முதல் கேரள மிளகாய் மட்டன் வரை.. டாப் 5 மட்டன் ரெசிபிக்கள்

Mutton Recipe | இந்த பதிவில் ஆரோக்கியமான, சுவையான டாப் 5 மட்டன் ரெசிபிகள் எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.

 • 16

  மதுரை கறி தோசை முதல் கேரள மிளகாய் மட்டன் வரை.. டாப் 5 மட்டன் ரெசிபிக்கள்

  சிக்கன் உடலுக்கு சூடு என்பதால் பெரும்பாலோனோர் விரும்பி உண்ணும் அசைவ உணவாக மட்டன் உள்ளது. இந்த பதிவில் நாம் பார்க்க போவது பிரியாணி அல்லது மட்டன் கோர்மா அல்ல. அதற்கு பதிலாக, ஆரோக்கியமான உணவுக்காக நீங்கள் தின்பண்டங்கள், ஸ்டார்டர்கள் அல்லது பராத்தாவுடன் சேர்த்து சாப்பிடும் உலர் மட்டன் ரெசிபிகளின் பட்டியலை இங்கே நாங்கள் தொகுத்துள்ளோம்.

  MORE
  GALLERIES

 • 26

  மதுரை கறி தோசை முதல் கேரள மிளகாய் மட்டன் வரை.. டாப் 5 மட்டன் ரெசிபிக்கள்

  மட்டன் ஷாஹி ரோல்: பெயரைப் போலவே இந்த டிஷ் பார்க்கவும், சுவைக்கவும் ரிச்சாகவும், கவர்ச்சியாகவும் இருக்கும். ஜூசி மற்றும் சதைப்பற்றுள்ள மட்டன் கீமா கபாப்களை, சாஃப்ட்-அண்ட்-ஃப்ளேக்கி பராத்தாவின் உள்ளே வைத்து, அத்துடன் சீஸ், இம்லி சட்னி மற்றும் புதினா சட்னி ஆகியவற்றின் கொண்டு நிரப்பப்படுகின்றன. சிறிது வெங்காயத்துடன் பராத்தா உள்ளே அடைத்து பரிமாறவும்.

  MORE
  GALLERIES

 • 36

  மதுரை கறி தோசை முதல் கேரள மிளகாய் மட்டன் வரை.. டாப் 5 மட்டன் ரெசிபிக்கள்

  மட்டன் வடை: அனைத்து விருந்துகளில் கபாப்களுக்கு என தனி இடம் உண்டு. இருப்பினும் அதனை கொஞ்சம் மாற்றி சுவையானதாகவும், தென்னிந்திய பாணியுடன் முயற்சித்து பார்க்க நினைத்தால் அதற்கு மட்டன் வடை சிறப்பானது. துண்டு துண்டாக வெட்டப்பட்ட இறைச்சி, வடைக்கான மாவு, மற்றும் மசாலாப் பொருட்களை கலந்து வடை தயார் செய்யலாம். இதனை எண்ணெயில் பொறிப்பதற்கு பதிலாக, தவாவில் லேசான எண்ணெய் உற்றி பொன்னிறமாகும் வரை இரண்டு பக்கமும் பிரட்டி எடுத்தால் மட்டும் போதும்.

  MORE
  GALLERIES

 • 46

  மதுரை கறி தோசை முதல் கேரள மிளகாய் மட்டன் வரை.. டாப் 5 மட்டன் ரெசிபிக்கள்

  சிந்தி மட்டன் ப்ரை: ஏறக்குறைய உலர்ந்த உணவான இந்த செய்முறையில் வறுத்த மட்டன் துண்டுகள், மசாலாப் பொருட்களுடன் கலந்து முழுமையாய் சமைக்கப்படுகிறது. இறைச்சியை மென்மையாக்க இந்த செய்முறையில் பச்சை பப்பாளியும் தேவை. நீங்கள் உணவை அப்படியே சாப்பிடலாம் அல்லது பராத்தாவுடன் ஒரு ஆரோக்கியமான சைடு டிஷ்ஷாகவும் சேர்த்துக்கொள்ளலாம்.

  MORE
  GALLERIES

 • 56

  மதுரை கறி தோசை முதல் கேரள மிளகாய் மட்டன் வரை.. டாப் 5 மட்டன் ரெசிபிக்கள்

  கேரள மிளகாய் மட்டன்: இது மற்றொரு உலர் மட்டன் ரெசிபி, கேரளா மிளகாய் மட்டன் என்பது நாவூற வைக்கும் ருசியைக் கொண்டது. இதில் மற்ற சில்லி மட்டன் ரெசிபிகளைப் போலல்லாமல், சோயா சாஸ், சில்லி சாஸ் போன்றவை சேர்க்கப்படுவது கிடையாது. அதற்கு பதிலாக, இதில் வெங்காயம், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி தூள் மற்றும் பலர் உள்ளிட்ட பாரம்பரிய மசாலாவை கலந்து மணமணக்க சமைக்கப்படுகிறது.

  MORE
  GALLERIES

 • 66

  மதுரை கறி தோசை முதல் கேரள மிளகாய் மட்டன் வரை.. டாப் 5 மட்டன் ரெசிபிக்கள்

  மதுரை கறி தோசை: மதுரைவாசிகள் அல்லது அங்கு சுற்றுலா சென்று வந்த பலருக்கும் மதுரை கறி தோசையின் மணமும், ருசியும் நிச்சயம் பரிச்சயப்பட்டிருக்க வாய்ப்புள்ளது. மதுரை கறி தோசை, மூன்று அடுக்கு தோசை - முதல் அடுக்கு சாதாரண தோசை, இரண்டாவது அடுக்கு முட்டை ஆம்லெட் மற்றும் மேல் அடுக்கில் துண்டு துண்டாக்கப்படக்கப்பட்ட இறைச்சியை கொண்டு தயார் செய்யப்படுகிறது.

  MORE
  GALLERIES