முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » சர்க்கரையை ஒரு நாளைக்கு இவ்வளவுதான் சேர்க்க வேண்டும்.. மீறினால் என்ன ஆகும்..?

சர்க்கரையை ஒரு நாளைக்கு இவ்வளவுதான் சேர்க்க வேண்டும்.. மீறினால் என்ன ஆகும்..?

ஒரு இளைஞர் ஒரு நாளைக்கு சராசரியாக 24 டீஸ்பூன் சர்க்கரையை எடுத்துக்கொள்கிறார்கள் என்று தேசிய புற்றுநோய் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது 384 கலோரிகளுக்கு சமம்.

  • 16

    சர்க்கரையை ஒரு நாளைக்கு இவ்வளவுதான் சேர்க்க வேண்டும்.. மீறினால் என்ன ஆகும்..?

    மனிதர்கள் தங்கள் நாளை இனிமையாக்க காலையில் எழுந்ததும் குடிக்கும் காஃபி முதல் இரவு படுக்கும் வரை எல்லா விஷயங்களுக்கும் சர்க்கரை (Sugar ) பயன்படுத்துகிறார்கள். அப்படி, நாம் இனிப்புக்காக எடுத்துக்கொள்ளும் சர்க்கரை நமது வாழ்நாளை குறைக்கும் தெரியுமா? காலையில் காஃபியில் ஆரம்பித்து, சாக்லேட், பிஸ்கட், கூல் டிரிங்க்ஸ், பழங்கள் மற்றும் காய்கறிகள், தானியங்கள் மற்றும் பால் பொருட்கள் போன்ற கார்போஹைட்ரேட்டுகளைக் கொண்ட அனைத்து உணவுகளிலும் சர்க்கரை இயற்கையாகவே காணப்படுகிறது. உடலில் சர்க்கரை அளவு அதிகரிப்பதால் பல்வேறு நோய்கள் ஏற்படலாம்.

    MORE
    GALLERIES

  • 26

    சர்க்கரையை ஒரு நாளைக்கு இவ்வளவுதான் சேர்க்க வேண்டும்.. மீறினால் என்ன ஆகும்..?

    இயற்கை சர்க்கரை கொண்ட உணவுகளை உட்கொள்வது நல்லது. தாவர உணவுகளில் அதிக அளவு நார்ச்சத்து, அத்தியாவசிய தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. மேலும், பால் உணவுகளில் புரதம் மற்றும் கால்சியம் உள்ளது. இதனால், உங்கள் செல்களுக்கு நிலையான ஆற்றல் கிடைக்கும். பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்களை அதிக அளவில் உட்கொள்வது நீரிழிவு, இதய நோய் மற்றும் சில புற்றுநோய் அபாயத்தை குறைக்கும்.

    MORE
    GALLERIES

  • 36

    சர்க்கரையை ஒரு நாளைக்கு இவ்வளவுதான் சேர்க்க வேண்டும்.. மீறினால் என்ன ஆகும்..?

    அதிக அளவு சர்க்கரை எடுத்தால் என்ன ஆகும்? : சுக்ரோஸ் என்று அழைக்கப்படும் சர்க்கரையில் 50% குளுக்கோஸ் மற்றும் 50% பிரக்டோஸ் உள்ளது. சர்க்கரையில் அதிக கார்போஹைட்ரேட் இருப்பதால், உடலுக்கு உடனடி ஆற்றலையும் உயிர்ச்சக்தியையும் கொடுக்கிறது. நாம் அதிகமாக சர்க்கரை உட்கொண்டால், காலப்போக்கில் உடலில் கொழுப்பு அதிகமாக சேரும். இதனால், உயர் இரத்த அழுத்தம், உறுப்பு வீக்கம், எடை அதிகரிப்பு, நீரிழிவு மற்றும் கொழுப்பு கல்லீரல் நோய், அழற்சி, பல் பிரச்சனை, மாரடைப்பு மற்றும் பக்கவாதத்திற்கான அதிக ஆபத்தை ஏற்படுத்தும்.

    MORE
    GALLERIES

  • 46

    சர்க்கரையை ஒரு நாளைக்கு இவ்வளவுதான் சேர்க்க வேண்டும்.. மீறினால் என்ன ஆகும்..?

    ஒரு இளைஞர் ஒரு நாளைக்கு சராசரியாக 24 டீஸ்பூன் சர்க்கரையை எடுத்துக்கொள்கிறார்கள் என்று தேசிய புற்றுநோய் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது 384 கலோரிகளுக்கு சமம். இதனால், இளைஞர்கள் அதிகமாக சர்க்கரை நோய் மற்றும் இதய நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். அதுமட்டும் அல்ல, இதில் கலோரி அதிகமாக இருப்பதால் உடல் எடையும் அதிகரிக்கும்.

    MORE
    GALLERIES

  • 56

    சர்க்கரையை ஒரு நாளைக்கு இவ்வளவுதான் சேர்க்க வேண்டும்.. மீறினால் என்ன ஆகும்..?

    சராசரி அளவு என்ன? : சர்க்கரையின் சராசரி அளவை எந்த மருத்துவ நிறுவனமும் வெளியிடவில்லை. எனினும், ஒரு நாளைக்கு 100 கலோரிகளுக்கு மேல் (சுமார் 6 டீஸ்பூன் அல்லது 24 கிராம்) மற்றும் ஆண்கள் 150 கலோரிகளுக்கு (சுமார் 9 தேக்கரண்டி அல்லது 36 கிராம்) அதிகமாக சர்க்கரையை உட்கொள்ளக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 66

    சர்க்கரையை ஒரு நாளைக்கு இவ்வளவுதான் சேர்க்க வேண்டும்.. மீறினால் என்ன ஆகும்..?

    பெரியவர்கள் ஒரு நாளைக்கு 30 கிராம் (தோராயமாக 7 சர்க்கரை க்யூப்களுக்கு சமம்) வரை சர்க்கரை எடுத்துக்கொள்ளலாம். 7 முதல் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு 24 கிராம் (6 சர்க்கரை க்யூப்ஸ்) வரை சர்க்கரை உட்கொள்ளலாம். 4 முதல் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் ஒரு நாளைக்கு 19 கிராம் சர்க்கரைக்கு (5 சர்க்கரை க்யூப்ஸ்) மேல் உட்கொள்ளக்கூடாது.

    MORE
    GALLERIES