காலை உணவை ஹெல்தியாக நமக்கான பெஸ்ட் மற்றும் ஈசியான ஆப்ஷன் ஓட்ஸ்தான். இதில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் உடல் எடை குறைக்க நினைப்போர், சர்க்கரை நோயாளிகளுக்கு மிகச்சிறந்த உணவு. இது என்னதான் ஆரோக்கியம் நிறைந்தது என்றாலும் அளவுக்கு அதிகமாக உட்கொண்டால் ஆபத்து. எப்படி எந்தெந்த வகைகளில் பக்கவிளைவுகளை உண்டாக்கும். ஒரு நாளைக்கு ஓட்ஸ் உணவின் அளவு என்ன போன்ற தகவல்களைக் காணலாம்.
ஓட்ஸ் சாப்பிடுவது உடல் எடையைக் குறைக்க உதவும் என்றாலும் அதிகமாக சாப்பிடுவது தசைகளுக்கு பாதிப்பை உண்டாக்கும். அதாவது ஓட்ஸில் நார்ச்சத்து நிறைவாக இருப்பதால் உடலில் அதிகமான நார்ச்சத்து சேர்ந்துவிடும். இதனால் உங்களுக்கு பசியே எடுக்காமல் போகும். இதனால் மற்ற ஊட்டச்சத்துக்களை பெர முடியாமல் உடலின் ஆற்றல் குறையும். இதை தொடர்ந்து மற்ற பாதிப்புகளையும் சந்திக்கக் கூடும்.