பொதுவாக பனி காலத்தை தொடர்ந்து கோடைகாலம் படிப்படியாக துவங்கும் என்பதால் வெயிலுக்கு முன் வாட்டி வதைத்த குளிரில் இருந்து சில நாட்கள் நீடிக்கும் மிதமான வெப்பநிலை நிவாரணம் அளிக்கலாம். என்றாலும் படிப்படியாக வெயில் அதிகரிப்பதால் டிஹைட்ரேஷன், வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், பாக்டீரியா தொற்று, ஹீட் ஸ்ட்ரோக் போன்ற பல உடல்நல பிரச்சனைகள் ஏற்பட கூடும்.
ஹைட்ரேட்டாக இருங்கள்: கோடை காலத்தில் சுட்டெரிக்கும் வெயில் மற்றும் வெப்ப அலையை சமாளிக்க உடலை ஹைட்ரேட்டாக வைத்திருப்பது மிகவும் முக்கியமானது. உடலில் நீர்ச்சத்தை தக்க வைக்க குடிநீரை விட சிறந்தது என்ன இருக்கிறது..? தினசரி நிபுணர்கள் பரிந்துரைக்கப்பட்ட அளவு 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் குடிப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
லைட்டான மீல்ஸ்... கோடைக்காலம் என்பது லைட்டான உணவுகளை சாப்பிட வேண்டிய பருவம் ஆகும். ஏனெனில் கோடையில் நிலவும் வெப்பமான சூழல் காரணமாக பொதுவாக நாம் சாப்பிடும் உணவை ஜீரணிக்க அதிக நேரம் எடுக்கும். எனவே கோடை காலத்தில் உங்கள் செரிமான பாதை நன்றாக வேலை செய்கிறது என்பதை உறுதிப்படுத்த லைட்டான உணவுகளை சாப்பிடுவதற்கு முக்கியத்துவம் கொடுங்கள்.
ஃப்ரெஷ் ஜூஸ் குடிக்கவும் : ஆண்டு முழுவதும் குளிர் பானங்களை குடிப்பதை நீங்கள் விரும்பலாம், ஆனால் இந்த கோடை சீசனில் செயற்கை கூல்ட்ரிங்க்ஸ்களுக்கு பதிலாக, ஃப்ரெஷ் ஜூஸ்களை பருக முக்கியத்துவம் கொடுங்கள். பருவகால பழங்களில் தயாரிக்கப்படும் ஃப்ரெஷ் ஜூஸ்கள் உங்கள் ஆரோக்கியத்திற்கும், கோடையை சமாளிக்கவும் சிறந்தது.