ஏற்கனவே கோடை காலம் தூங்கிவிட்ட நிலையில் கோடை காலத்திற்கான முன்னேற்பாடுகளை நாம் செய்வது அவசியமாகும். முக்கியமாக கோடை காலங்களில் உடலில் ஏற்படும் நீர் பற்றாக்குறையை சரி செய்வதே நமது முதல் வேலையாகும். அதிலும் குறிப்பாக நீண்ட நேரம் வேலைக்கு செல்லும் நபர்களும், அடிக்கடி வெளியிடங்களுக்கு வேலை நிமித்தமாக செல்லும் நபர்களுக்கும் கோடை காலங்கள் மிகுந்த சிரமத்தை கொடுக்கக் கூடியவையாக இருக்கும்.
இதைப் பற்றி பேசிய மருத்துவர் ஒருவர் கூறுகையில், நமது உடலுக்கு தண்ணீர் மிகவும் இன்றி அமையாத ஒன்றாக இருந்து வருகிறது. உடலில் நீர் சத்து போதுமான அளவு இருந்தால்தான் உடல் உறுப்புகள் அனைத்தும் சரியாக வேலை செய்யும். ஒருவேளை உடல் உறுப்புகளில் ஏதேனும் பிரச்சனை ஏற்படும் பட்சத்தில் நமது உடலானது அதனை சில அறிகுறிகள் மூலம் வெளிப்படுத்த துவங்கும். வறண்ட சருமம், சருமத்தில் சுருக்கங்கள், உதட்டில் வெடிப்பு, அதிகப்படியான பசி ஆகியவை உடலில் நீர் சத்து குறைந்துள்ளதற்கான அறிகுறிகளாகும்.
முக்கியமாக அலுவலகத்தில் வேலை பார்க்கும் நபர்கள் அடிக்கடி டீ மற்றும் காபி அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இவை உடலுக்கு நீர்ச்சத்தை அளிப்பதற்கு பதிலாக, ஏற்கனவே உள்ள நீர்ச்சத்தை வெளியேற்ற வழி வகுக்கிறது. எனவே கோடை காலங்களில் என்னென்ன விதமான முறைகளை பின்பற்றி நம்மை ஆரோக்கியமாகவைத்து கொள்ளலாம் என்பதை பற்றி இப்பதிவில் பார்ப்போம்.
உங்களுக்கு கவரக்கூடிய வாட்டர் பாட்டில்களை பயன்படுத்தலாம் : அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் அடிக்கடி தண்ணீர் குடிப்பதற்காக நீர் அருந்தும் பகுதிக்கு எழுந்து செல்ல தேவையில்லை. அதற்கு பதிலாக உங்களை கவரும் விதமான பெரிய அளவிலான வாட்டர் பாட்டில்களை வாங்கி வைத்துக் கொள்ளலாம். இதன் மூலம் நாள் முழுவதும் நீங்கள் நீர்ச்சத்துடன் இருக்க உதவும்.