ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » பர்ஃபெக்ட் பிரியாணி செய்ய இஞ்சி பூண்டை இப்படி அரையுங்கள்..!

பர்ஃபெக்ட் பிரியாணி செய்ய இஞ்சி பூண்டை இப்படி அரையுங்கள்..!

Garlic ginger past | இஞ்சி, பூண்டு ஆகிய இரண்டும் ஆயுர்வேத மருத்துவத்தில் பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. வயிற்றுப்போக்கு, வயிறு உப்புசம், வாய்த்தொல்லைகள் போன்றவை வராமல் தடுக்கிறது. மேலும் ஒமட்டல், வாந்தி போன்றவை வராமல் பாதுகாக்கவும் உதவுகிறது.

 • 16

  பர்ஃபெக்ட் பிரியாணி செய்ய இஞ்சி பூண்டை இப்படி அரையுங்கள்..!

  இஞ்சி, பூண்டு ஆகிய இரண்டும் ஆயுர்வேத மருத்துவத்தில் பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஏராளமான மருத்துவ குணங்களைக் கொண்ட இஞ்சி, பூண்டு இரண்டுமே உடலில் உள்ள பல்வேறு நோய்களுக்கு மருந்தாக அமைகின்றன. இஞ்சி பூண்டு விழுதை தினமும் உணவில் சேர்த்துக்கொள்வதால் பலவிதமான நன்மைகள் உண்டாகின்றன. அத்தகைய இந்த இஞ்சி, பூண்டு பேஸ்ட் இல்லையென்றால் பிரியாணி சுவையாக வராது. அதனால் இஞ்சி, பூண்டு  விழுதை சரியான விகிதத்தில் செய்வது எப்படி என்று இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.

  MORE
  GALLERIES

 • 26

  பர்ஃபெக்ட் பிரியாணி செய்ய இஞ்சி பூண்டை இப்படி அரையுங்கள்..!

  தேவையான பொருள்கள்: இஞ்சி - 100 கிராம், பூண்டு - 125 கிராம்

  MORE
  GALLERIES

 • 36

  பர்ஃபெக்ட் பிரியாணி செய்ய இஞ்சி பூண்டை இப்படி அரையுங்கள்..!

  செய்முறை: இஞ்சியை நன்றாக கழுவி தோல் சீவி சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும். பின்னர் பூண்டை தோலுரித்து பொடிதாக நறுக்கி வைக்கவும். நறுக்கிய இஞ்சி, பூண்டு இரண்டையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸ்சியில் போட்டு நன்றாக அரைக்கவும். இப்போது இஞ்சி பூண்டு பேஸ்ட் ரெடி. அரைத்த பேஸ்டை ஒரு பாட்டிலில் போட்டு பிரிஜ்ஜில் வைத்து உபயோகிக்கவும். இந்த இஞ்சி பூண்டு பேஸ்ட் குருமா, அசைவ குழம்பு, பிரியாணி வகைகளுக்கு உபயோகப்படுத்தலாம்.

  MORE
  GALLERIES

 • 46

  பர்ஃபெக்ட் பிரியாணி செய்ய இஞ்சி பூண்டை இப்படி அரையுங்கள்..!

  குறிப்பு 1: இதில் நாம் கவனமாக பார்க்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இஞ்சியை விட பூண்டு கூடுதலாக இருக்க வேண்டும். அப்போதுதான் இஞ்சி பூண்டு பேஸ்ட் சுவையாகவும் பர்ஃபெக்டாகவும் இருக்கும். அதனால் நாம் செய்ய கூடிய பிரியாணியும் சுவை மிகுந்ததாக இருக்கும்.அது சைவமாக இருந்தாலும் சரி அசைவ பிரியாணியாக இருந்தாலும் சரி, இஞ்சி பூண்டின் அளவு மேற் சொன்னவாறு இருந்தால் பிரியாணி கண்டிப்பாக சுவையாக இருக்கும்.

  MORE
  GALLERIES

 • 56

  பர்ஃபெக்ட் பிரியாணி செய்ய இஞ்சி பூண்டை இப்படி அரையுங்கள்..!

  குறிப்பு 2: நீங்கள் இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு மாதம் அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறை அரைத்து வைக்கும் பழக்கம் இருந்தால் அதில் கொஞ்சம் கல் உப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள். இதனால் கெட்டுப்போகாமல் நீண்ட நாட்கள் இருக்கும்.

  MORE
  GALLERIES

 • 66

  பர்ஃபெக்ட் பிரியாணி செய்ய இஞ்சி பூண்டை இப்படி அரையுங்கள்..!

  குறிப்பு 3:நீங்கள் எப்பொழுதும் மனதில் கொள்ள வேண்டியது, இஞ்சி மற்றும் பூண்டை ஒன்றாக கலந்து அரைக்க வேண்டாம். ஏனென்றால் சில காய்கறிகளுக்கு இஞ்சி அல்லது பூண்டு விழுது மட்டுமே தேவைப்படும். இஞ்சி மற்றும் பூண்டு பேஸ்ட் செய்ய, நீங்கள் அளவை கவனித்துக்கொள்வது மிகவும் முக்கியம். பேஸ்டை எடுக்கும் போது 60 சதவீதம் பூண்டு விழுது, 40 சதவீதம் இஞ்சி விழுது எடுக்க வேண்டும். ஏனெனில் இஞ்சியின் சுவை மற்றும் காரம் அதிகமாக இருப்பதால், இஞ்சி பேஸ்ட் குறைவாக பயன்படுத்த வேண்டும். அதனால் நாம் செய்யும் உணவின் ருசியும் கூடும்.

  MORE
  GALLERIES