அரிசியில் சோறு வடித்தல், இட்லிக்கு மாவு அரைத்தல் என செய்தால் சிலர் முகம் சுழிப்பார்கள். காரணம் ரேஷன் அரிசி நிறம் மங்கலாக இருக்கும். பார்ப்பதற்கு அசுத்தமாக இருப்பதுபோல தோன்றும். ஏனென்றால் ரேஷன் அரிசிக்கான நெல்லானது ஊறல், அவியல், உலர வைத்தல், பாலிஷ் ஆகிய செயல்முறைகளுக்கு எடுத்துக் கொள்ளும் நேரம் மிகவும் குறைவு. அதனாலேயே மற்ற அரிசிகளை விட நிறம் சற்று மங்கலாக இருக்கும். ஆனால், இதுதான் உடலுக்கு ஆரோக்கியமானது. அத்தகைய அரிசியில் பஞ்சுபோல இட்லி மாவு அரைப்பது எப்படி என இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.
இதன் பின்னர் முழு வெள்ளை உளுந்தை அரிசி அளந்த அதே கப்பில் ஒரு கப் அளவுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். இவற்றுடன் ஒரு ஸ்பூன் வெந்தயம் சேர்த்து ஊற வைத்துக் கொள்ளவும். இவை இரண்டையும் தனித்தனியாக 5 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அதே நேரத்தில் இரண்டு ஸ்பூன் அளவுக்கு வெள்ளை அவல் எடுத்து ஊற வைத்துக் கொள்ளவும். அவல் பிடிக்காதவர்கள் சேர்க்க வேண்டாம்.
மாவு நன்கு அரைபட்டதும் அவற்றை தனியாக ஒரு பாத்திரத்தில் சேர்த்து கொள்ள வேண்டும். பிறகு கிரைண்டரில் அரிசியை சேர்த்து 10 நிமிடங்களுக்கு அரைத்துக் கொள்ளவும். ரொம்பவும் நைசாக அரைக்க வேண்டிய அவசியம் இல்லை. தொடர்ந்து நன்கு அரைப்பட்ட இந்த மாவுகள் இரண்டையும் சேர்த்து தேவையான அளவிற்கு கல் உப்பு சேர்த்து கைகளால் 10 நிமிடத்திற்கு குறையாமல் நன்கு கலந்து விடவும்.