நம் சமையல் செய்யும்போது அனைத்தும் எப்போதும் சரியாக வந்து விடும் என்று உறுதியாக கூற முடியாது. சில நேரங்களில் சமையலில் பயன்படுத்தப்படும் உப்பு, மசாலாக்கள், நீர் ஆகியவற்றின் விகிதம் சற்று கூடுவதோ அல்லது குறைந்த காணப்படுவதோ மிக சாதாரணமாக ஏற்படும் தவறுதான். ஆனால் இந்த சிறிய தவறினால் உணவின் ஒட்டுமொத்த சுவையும் கெட்டு விடக்கூடும். மேலும் உணவின் நறுமணம் கூட அதிக படியான உப்பினால் மாறிவிட வாய்ப்புகள் அதிகம். அந்த வகையில் ஒரு வேலை நீங்கள் தயாரித்த உணவில் உப்பின் அளவு சற்று கூடுதலாகி விட்டால் அதனை எவ்வாறு சரி செய்வது என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
உருளை கிழங்கை பயன்படுத்தலாம் : உணவில் உப்பின் அளவு அதிகமாகி விட்டால், அதனுடன் சிறிது பச்சை உருளை கிழங்கை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி உணவில் போட்டு வைக்கலாம்: அவ்வாறு உப்பு அதிகமான உணவில் உருளைக்கிழங்கை சேர்ப்பதற்கு முன், உருளை கிழங்கு துண்டுகளை நன்றாக நீரில் கழுவ வேண்டும். உருளைக்கிழங்கு உணவில் உள்ள அதிகப்படியான உப்பை கிரகித்து கொள்ளும். உருளைக்கிழங்கை உணவில் சேர்த்த பின்பு 20 நிமிடங்கள் வரை அப்படியே விட்டு விட வேண்டும். 20 நிமிடங்களுக்கு பின் உருளைக்கிழங்கை நீக்கி விடலாம்.
மாவு உருண்டைகளை சேர்க்கலாம் : சில நேரங்களில் நாம் தயாரிக்கும் குழம்பிலோ அல்லது உணவு பொருளிலோ உப்பின் அளவு அதிகமாகிவிட்டால் உணவின் அளவிற்கே ஏற்ப மாவு உருண்டைகளை எடுத்து குழம்பில் போட்டு விட வேண்டும். அதிகப்படியான உப்பு அனைத்தும் மாவு உருண்டைகளால் கிரகித்துக் கொள்ளப்படும். உணவை பரிமாறுவதற்கு முன்பு மாவு உருண்டைகளை நீக்கிவிட வேண்டும்.