வாட்டி வதைக்கும் கோடை வெயிலால் நம் உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படும். இதை சமாளிக்க குளிர்ச்சியான மற்றும் புத்துணர்ச்சியான பானங்களை நாம் எடுத்துக் கொள்கிறோம். பெரும்பாலும் குளிர்பானங்கள் அனைத்துமே ஆரோக்கியமானவை, நம் உடலின் நீர்ச்சத்தை தக்க வைக்க உதவுபவை என்றாலும் கூட, அதில் உள்ள சர்க்கரை என்பது நீரிழிவு நோயாளிகளுக்கு சிக்கலை ஏற்படுவதாக அமைந்து விடும்.
சிறுதானிய கூழ் : கேல்வரகு, தினை, கம்பு போன்ற சிறுதானியங்களில் கூழ் செய்து, அதை மண் பானையில் வைத்து குளுமைப்படுத்த வேண்டும். பிறகு வெயில் நேரத்தில் இந்தக் கூலில் தண்ணீர் அல்லது மோர் கலந்து குடித்து வந்தால், உடலில் நீர்ச்சத்து குறைபாடு நீங்குவதோடு மட்டுமல்லாமல், நீரிழிவு நோயாளிகளின் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கவும் உதவுகிறது. புளிப்பு சுவை கிடைக்க இதில் சில துளிகள் எலுமிச்சை சாறு கலந்து கொள்ளலாம்.
இஞ்சி மற்றும் எலுமிச்சை சாறு : உடலில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த இஞ்சி உதவிகரமாக இருக்கும். கோடை காலத்தில் தாகத்தால் அவதியுறும் நீரிழிவு நோயாளிகளுக்கு இது பெரிய அளவில் உதவிகரமாக இருக்கும். இதில், எலுமிச்சை சாறு கலந்து பருகும்போது இன்னும் சுவையாக இருக்கும். இஞ்சி, எலுமிச்சை சாறு, செயற்கை சர்க்கரை சேர்க்கப்படாத நன்னாரி சர்பத் ஆகியவை கலந்து அருந்தலாம்.