உங்கள் குழந்தையின் உயரம் என்பது மரபணு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையுடன் தொடர்புடையது. இந்த வயது வரை தான் வளர்வார்கள் என்பதைத் தாண்டி, ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பிறகும் கூட உங்கள் குழந்தையின் உயரத்தில் மாற்றம் ஏற்படலாம். இந்த மாற்றம் உங்கள் குழந்தையின் உணவு, வாழ்க்கை முறையைப் பொறுத்தே அமையும் என்றால் நம்ப முடிகிறதா? ஆம், நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும்.தொடக்கத்தில் இருந்தே உயரத்தை அதிகரிக்கக்கூடிய இயற்கையான சில உணவுகள் குறித்து தற்போது நாம் காணலாம்.
நாம் தினசரி சாப்பிடும் உணவு வகைகள் உண்மையில் நம் உயரத்தை அதிகரிக்குமா.? ஒவ்வொரு ஆண்டும் நம் உயரத்தில் மாற்றம் ஏற்படும் அதாவது உயரம் அதிகரிக்கும். நம் அன்றாட உணவில் கால்சியம், வைட்டமின் D, மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற நுண் ஊட்டச்சத்துக்களை அதிகம் உட்கொள்ளுதல் ஆரோக்கியமான எலும்புகள், மூட்டுகள் மற்றும் சிதைந்த திசுக்களை புதுப்பித்தல் ஆகிய செயல்கள் சிறப்பாக நடைபெற உதவுகிறது. இது போன்ற ஊட்டச்சத்துக்கள் மிகுந்த சில உணவுகளை நாம் தற்போது காணலாம். இது உங்கள் குழந்தையின் உயரம் மற்றும் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும்.
தயிர்: தயிரில் கால்சியம், பால் கொழுப்பு மற்றும் புரதம் அதிகமாக உள்ளது. இது எலும்புகள், தசைகளை வலுப்படுத்தவும் எலும்பின் அடர்த்தியை பராமரிக்கவும் உதவுகிறது. கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுக்கள் ஒவ்வொரு ஆண்டும் குழந்தையின் வளர்ச்சியில் மாற்றத்தை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
பீன்ஸ்: பீன்ஸ்-இல் என்ன dish செய்து சாப்பிட்டாலும் அது உயரமாக வளர உதவும். தசை வலிமை, அறிவாற்றல் வலிமை மற்றும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. இதில் புரதங்கள், இரும்பு மற்றும் பி வைட்டமின்கள் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. செல் மற்றும் திசு மீளுருவாக்கத்தையும் இது ஊக்குவிக்கிறது.
இதுமட்டுமின்றி, நார்ச்சத்து, தாமிரம், மெக்னீசியம், மற்றும் துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் தினசரி உணவில் பீன்ஸ் சேர்த்துக் கொள்வதால், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம்.
பாதாம்: காலையில் ஒரு கைப்பிடி ஊறவைத்த பாதாமை சாப்பிடுவது உங்கள் குழந்தையின் அறிவாற்றலை மேம்படுத்தாது, ஆனால் வாழ்நாள் முழுவதும் எலும்பு ஆரோக்கியத்தை அதிகரிக்கும். ஏனெனில் பாதாம் புரதத்தின் சிறந்த மூலமாகும், இதில் ஏராளமான ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. அவை செல்களில் உள்ள பிரச்னைகளை சரி செய்வதுடன் எலும்பு அடர்த்தியை மேம்படுத்த உதவும். பாதாமில் நார்ச்சத்து, மாங்கனீசு மற்றும் மெக்னீசியம் மற்றும் வைட்டமின் E ஆகியவை நிரம்பியுள்ளன. இது கொழுப்பை கரையக்கூடிய வைட்டமின் என்பதால் எலும்புகளின் சிறந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிக்கன்: புரதம், வைட்டமின் B12, நியாசின், செலினியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் B6 ஆகியவற்றின் சிறந்த கலவையாக சிக்கன் உள்ளது. இந்த ஊட்டச்சத்துக்கள் எலும்புகளை வலுப்படுத்தவும், செல்களை சரிசெய்யவும், உங்கள் குழந்தைகளின் உயரத்தை அதிகரிக்கவும் உதவுகின்றன. மேலும் நீரில் கரையக்கூடிய வைட்டமின் பி12 இருப்பது உயரத்தை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
முட்டைகள்: இயற்கையாகவே ஊட்டச்சத்துக்கள் நிறைந்த முட்டை எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஆரோக்கியமான உணவாக அமைகிறது. ஒவ்வொரு முட்டையிலும் சுமார் 6 கிராம் புரதம் இருப்பதால், முட்டை கால்சியம் உறிஞ்சுதலை அதிகரிக்கிறது. இதனால் எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உயரத்தை அதிகரிக்கவும் இது உதவுகிறது.